//anjeng Screenshot சம்பவத்திலிருந்து சினிமாவிற்கு சினிமா என்பது வெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்வதல்ல. நடந்ததை அப்படியே திரையில் காட்டினால் அது செய்தித் தொகுப்போ அல்லது ஆவணப்படமோ ஆகிவிடும். ஆனால் ஒரு சம்பவத்தை கலை வடிவில் உயிர்ப்பிக்கும்போது, அதன் பின்னணி, அதன் விளைவுகள், அதில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் உள்மனப்பயணம் ஆகியவை வெளிப்பட வேண்டும். அப்போதுதான் கதை பார்வையாளரைத் தொடும். சம்பவம் என்பது விதை; சினிமா அதனை கதைப்போக்கின் மரமாக மலரச் செய்யும் கலை. இந்தக் கோணத்தில் மதிசுதா இயக்கிய «வெந்து தணிந்தது காடு» திரைப்படம், போர் பிம்பங்களைத் தாண்டி மனித வாழ்வின் சிதைவுகளைச் சித்தரிக்கிறது. உணர்சிகளுக்கும் கழிவிரக்கங்களுக்குமப்பால் படைபின்மீதான பார்வையென்பது படைப்பாளியை அடுத்த தளத்திற்கு எடுத்துசெல்லவேண்டும்.திரைமொழி யென்பது சொல்லப்படும் கதையுனூடே மக்களை இயக்குவதற்கான கருவியாயும் கட்சியின் குரலாயும் ஒலிக்கவேண்டும் சம்பவங்களை நேரடியாகச் சினிமா கதையாக்கும்போது உணர்ச்சி சிக்கல் கதைப்பரிமானங்களை கண்டடையும் . நடந்த நிகழ்வு என்பது கதை அல்ல அது வெறும் தகவல் மட்டுமே. சம்பவங்கள் சினிமாவில் உயிர்ப்பதற்கு அதன் பின்னணி, அதன் விளைவுகள், அதில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் உணர்ச்சி ஓட்டம் தேவை. இல்லையென்றால் அது செய்தித் தொகுப்பைப் போல் பாழடைந்துவிடும். வாழ்க்கையில் சம்பவங்கள் நீண்டுகொண்டே போகலாம், சில சமயம் ஆண்டுகளாகவும். ஆனால் சினிமா நேரம் குறுகியது.இரண்டு மணி நேரத்தில் அடங்கவேண்டும். அங்கே எந்த தருணங்களை எடுத்துக்கொள்வது, எதனைத் தள்ளிப் போடுவது என்ற தேர்வில் எழும் குழப்பமே சிக்கலாகும். சம்பவத்தின் பாதிப்புக்கள் ஏராளம் இருக்கும் , ஆனால் சினிமா கதை ,கதையின் மையச் சிந்தனைக்கே சேவை செய்யவேண்டும். அதைச் செய்யாமல் விட்டால் சம்பவங்களின் முன் பின் தெரியதவர்களுக்கு கதை சிதறி விழும் அபாயம் உண்டு. சம்பவத்தை அப்படியே காட்டினால் அது ஆவணப்படம் போலத் தோன்றும் அதேநேரம் அதிகம் மாற்றினால் உண்மையை அழித்துவிட்டது என்ற குற்றச்சாட்டு எழும். அந்த இடையில் சமநிலை வைத்தல் எளிதல்ல. அதிலும் சம்பவத்தில் உள்ள மனிதர்கள் களத்தில் நிற்பது போதுபோல் அவர்கள் பயணம் செய்ய வேண்டும், அவர்களின் உள்ளங்கண்ணில் ஒரு மாற்றம் நடக்க வேண்டும். இல்லையெனில் பார்வையாளருக்கு கதையின்மேலான தொடர்பு ஏற்படாது. சம்பவம் எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும் காட்சியாக்கும்போது சின்னங்கள், உவமைகள், அடையாளங்கள் இல்லாவிட்டால் அது தட்டையாகி விடும் அதேநேரம் யதார்தத்தை மீறிய காட்சிப்படிபங்களும் கதைப்போக்கை சிதைத்துவிடும். சம்பவம் நிகழ்ந்தது என்பதை அறிந்துகொள்வதைதாண்டி, அந்த நிகழ்வு பார்வையாளரை எப்படிச் சிந்திக்க வைக்கிறது என்பதே கதையின் முக்கியமானதாக இயங்கவேண்டும். பார்க்கப்போனால் ஒரு கதைக்களுக்கு, சம்பவம் ஒரு விதை மாத்திரம். சினிமா கதைசொல்லல் அதைக் கொண்டு மரமாக மலரச் செய்ய வேண்டும். கதைக்காக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களின் இரத்தத்திலும் காட்சிகளின் கண்களிலும் உயிர்ப்பிக்கும்போது கதை உண்மையானதான சம்பவமாக மாற்றம்பெறுகிறது தமிழ் மக்கள் நிதியில் ஈழத்தின் உள்ளிருந்து உருவாகியிருக்கும் மதிசுதா இயக்கிய «வெந்து தணிந்தது காடு» என்னும் திரைப்படம், lift சங்கத்தால் பாரிஸ்நகரின் 23 rue des écoles, 75005 இல் 100 இருக்கைகள் கொண்ட ecoles cinéma club பில் 21-09-2025 14:00 அன்று பொதுமக்கள் பார்வைக்கு திரையிடப்பட்டது.ஆனாலும் அங்கு பார்வையாளர்களாகவந்த யாவரும் ஈழ சினிமா ஆதரவாளர்களே பொதுமக்களின் பிரசன்னம் இருக்கவில்லை நென்றே கூறவேண்டும். வெந்து தணிந்தது காடு போர் என்ற வெளிப்புற உச்சரிப்பை மட்டும் சித்தரிக்காது அதனால் சிதைந்த ஒரு தனிப் பெண்ணின், ஒரு தாயின் குடும்ப வாழ்வை உள்வாங்கிச் சொல்கிறது. இராணுவ சீருடைகள் போர்விமானங்கள் ஆயுதங்கள் இல்லாமல் திரையில் பெரும்பாலும் போரின் பெரும் பிம்பங்கள் – வெடிப்பு, துப்பாக்கி, கொலை – நம்மை ஆக்கிரமிக்கின்றன. இந்தப் படம், அந்தச் சத்தத்தின் உள்ளே புதைந்து போன உயிர்களன் அலறலை, ஒரு குடும்பத்தின் துடிப்பை, ஒரு பெண்ணின் உள் உரையாடலை முன்னிறுத்துகிறது. மையச் சிந்தனை போர் வென்றதோ தோற்றதோ என்பதல்ல, போரின் நடுவே உயிர் தப்பிக்கப் போராடும் மனிதர்களின் கதை தான் எப்போதும் எரியும் உண்மை. இந்தத் திரைப்படம் அந்த உண்மையை, பாழடைந்த மண்ணின் மணத்தோடு, களைத்த கண்களின் கசப்போடு நமக்குக் காட்டுகிறது.கதை கட்டமைப்பு மெதுவாகத் தொடங்கி, மெல்ல உச்சரிக்கும். ஆரம்பத்தில் அமைதி, பின்னர் அச்சம், இறுதியில் தவிர்க்க முடியாத அழிவு. எளிய புனைவின் வழியாகவே பெரிய வரலாற்றின் நிழல் நுழைகிறது. போர்நிகழும் நிலங்களில் மனித உணர்வுகளின் மாற்றம். ஒரு தனிப் பெண்ணின் தினசரி அனுபவங்கள், அவளது முடிவுகள், செய்யும் தவறுகள் – இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தே போர்நிலத்தில் தனி மனிதனை ககுடும்பத்தை எவ்வாறு பிளந்துவிடுகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. கதாபாத்திரம் மிகக் குறைவுதான், ஒரு கூட்டுக்குடும்பமாக இயங்கி பிரிவதால் அவை உயிரோடு இருக்கின்றன. அந்த தாயின் உள்ளார்ந்த நடுக்கமே படத்தின் முதுகெலும்பு. அவளைச் சூழ்ந்து நிற்கும் சின்ன சின்ன மனிதர்கள் ,அக்கம் பக்கத்தினர், போராளிகள், பேரப்பள்ளைகள் ,எல்லோரும் அவளது மனசாட்சியின் பிரதிபலிப்பாக மாறுகின்றனர். காட்சியமைப்புகள் கண்ணைத் திகைக்க வைக்கவில்லை; மாறாக, ஒளி, புகை, காலியாகிய வீடு, சிதைந்த சுவர், போன்ற சிறு பிம்பங்கள் தான் அதிகம் பேசுகின்றன. அது தான் படத்தின் வலிமை. பெரிய காட்சிகள் இல்லாமல் கூட, ஒவ்வொரு காட்சிகளும் பார்வையாளரின் உள்ளத்தில் கனத்த சுமையை வைக்கிறது. எதுவும் பேசாமல், எதுவும் தீர்க்காமல்,மனதில் எரியும் குரல் போல முடிகிறது. அந்த முடிவு சற்றே திடீரென தோன்றினாலும், அதுவே உண்மை: போர் எப்போதும் காலம் காலமாக நிகழ்வது முழுமையாக முடிவதில்லை; அது மனிதரின் உள்ளே காயமாகத் தங்குகிறது. இந்தத் திரைப்படம் சினிமாவாக மட்டும் அல்ல, ஒரு சாட்சியமாகவும் நிற்கிறது. போரின் எரிபொருள் கருகிய பின், மீதம் தங்கும் சாம்பலின் மணம் எப்படி வாழ்வைச் சூழ்கிறது என்பதை இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. அது வரலாற்றைச் சொல்வதில்லை; அது வாழ்ந்தவரின் துடிப்பை, துயரத்தை, தோல்வியை, அதேசமயம் சிறு நம்பிக்கையின் நரம்பையும் வெளிப்படுத்துகிறது. இந்தத் திரைப்படம் எரிந்த மண்ணின் உணர்வை உண்மையோடு தந்தாலும், சில இடங்களில் அது நம்மை முழுமையாக கவரவில்லை. படம் போரின் நடுவில் வாழும் மனிதர்களின் தனிப்பட்ட வேதனையைச் சித்தரிக்கிறது. ஆனால் அந்தப் பின்னணியில் நடந்த அரசியல் சிக்கல்கள், போரின் பல்வேறு பரிமாணங்கள் எளிதாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன. இதனால் வரலாற்று நினைவின் ஆழம் சற்றே குறைந்து விடுகிறது. சில இடங்களில் படத்தின் ஓட்டம் மெல்லத் தள்ளாடுகிறது. கதாபாத்திரத்தின் உள் மனநிலையை வெளிப்படுத்துவதற்காகக் காட்சிகள் நீளமாக்கப்பட்டாலும், அது சிலது பார்வையாளர்களுக்கு ஒருவித சோர்வை உண்டாக்கியது. மையக் கதாநாயகி மட்டும் உயிர்ப்போடு இருப்பது நன்றே, அவளை இன்னும் உரமேற்றியிருக்கவேண்டும் ஆனால் அவளைச் சூழ்ந்த மற்ற பாத்திரங்கள் சற்று மேல் தோற்றமளிக்கின்றன. அவற்றின் பின்னணி, ஆழம், எதிர்மறைச் சிக்கல்கள் குறைவதால் கதை ஒருதிசைப்பட்டதாகி விடுகிறது. சில இடங்களில் படம் நமக்கு துயரத்தை திணிக்கிறது போலத் தோன்றுகிறது. இயல்பான வெளிப்பாட்டை விட, “பாருங்கள், இது துயரம்” என்று வலுக்கட்டாயமாகச் சொல்லும் தருணங்கள் இருக்கின்றன. படம் நமக்கு கேள்விகளை விட்டுச் செல்கிறது – அது பலமாய் இருக்கலாம். ஆனால் ஒருவித சீரான கருத்து அல்லது தெளிவான நிலைப்பாடு இல்லாமை, கதை தெரியாதவர்களுக்கு “இதன் சொல்லாடல் எங்கே நிற்கிறது?” என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. படம் கலை வடிவில் சாட்சியமாக நிற்கிறது. அது போரின் குரலை அல்ல, போரால் சிதைந்த ஒரு தாயின் உள்ளக்குரலை முன்வைக்கிறது. இதனால் பார்வையாளருக்கு போரின் நெருக்கடியை வாழ்ந்தபடியே உணரச் செய்கிறது. இருந்தாலும் அரசியல் பரிமாணங்கள் புறக்கணிக்கப்பட்டதால் வரலாற்றின் ஆழம் குறைகிறது; பக்கக் கதாபாத்திரங்களின் ஆழமின்மை கதையை ஒருதிசைப்பட்டதாக ஆக்குகிறது. இப்படியான குறைபாடுகள் இருந்தாலும், படம் எரிந்த மண்ணின் மணத்தை, உயிர் தப்பிக்க போராடும் மனிதரின் துடிப்பை நம்முள் பதிக்கிறது. சினிமா வரலாற்றைச் சொல்லும் பொழுது, அது வெறும் நினைவாக மட்டுமல்ல, சிந்தனையைத் தூண்டும் குரலாக இருக்க வேண்டும் என்பதை இத்திரைப்படம் நமக்கு நினைவூட்டுகிது
23-09-2025
ப.பார்தீ
“பிரபாகரன்”
ஏந்திய குழந்தைக்குப் பெயர் வைக்கும் காட்சியில் சிலிர்த்துப் போய்க் கண் மடை திறக்க, மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றதொரு பரவச அனுபவம். இப்படியாக “மேதகு” படத்தில் பயணத்து விட்டு வந்திருக்கிறேன்.
எண்பதுகளில் ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் சின்னஞ் சிறுவர்களாக நாம் இருந்த அந்தக் காலத்தில், இரவு கழிக்கும் நேரத்தில் அந்த அமைதியை ஊடறுத்து ஒரு பறையொலி கிளம்பும்.
எல்லோரும் வீதிக்கு ஓடுவோம்.
சொல்லி வைத்தாற் போல வட்டம் போல நாமெல்லோரும் சூழ, அங்கே வந்திருக்கும் “தெருக்கூத்துக் குழு” நம் இன விடுதலையையும், நம் தமிழினம் எப்படி அடக்கி ஒடுக்கப்படுகிறது என்பதையும் பாட்டோடும், நிகழ் வரலாறுகளோடும் பாடிக் காட்டும்.
“இன்னார் மகன் இயக்கத்துக்குப் போய் விட்டாராம்” என்று அடுத்தடுத்த நாட்களில் வரும் ஊரார் பேச்சு. இதெல்லாம் நாம் வாழ்ந்த காலத்தில் தேங்கிய வாழ்வியல் நினைவுகள். வரலாற்று நாயகர்களின் அடிச்சுவடுகள் முகிழ்ந்த காலங்கள்.
இங்கே “மேதகு” திரைப்படத்தின் திரைகதையோட்டத்தின் அடிநாதமாகக், கதை சொல்லியாக “மதுரை அடைக்கலம் தெருக்கூத்துக் குழு” துவக்கப் புள்ளியில் இருந்து சேதி பறைய, “தம்பி”யின் கதையோடு, ஒரு இனம் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறு பதியப்படுகிறது. இந்த உத்தி எப்படி இவர்கள் மனதில் தோன்றியதோ என்ற பேராச்சரியம் எழுகிறது. நாம் வாழ்ந்த அந்த ஈழப் போராட்ட ஆரம்ப கால நிஜங்களின் தரிசனமாக இந்தத் தெருக் கூத்துக் “கதை சொல்லிகள்” நுட்பமாகப் பயன்பட்டிருக்கிறார்கள்.
“மேதகு” படம் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்வின் ஆரம்ப காலப் பதிவு என்ற அடையாளமே தவிர, இந்தப் படைப்பில் ஈழத் தமிழினம் சுதந்திரத்துக்குப் பின் எவ்விதமாகச் சிங்களப் பேரினவாதத்திற்கு இரையாக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றின் பதிவாகவே இருக்கின்றது.
அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த பண்டார நாயக்கா கொண்டு வந்த தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் தொடங்கிய அறப்போராடம், அதனைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட படுகொலை அரங்கேற்றங்கள் என்று கலவரபூமியாக அமைந்த சூழலில் தந்தை செல்வாவின் தலைமையிலான தமிழரசுக் கட்சிக்கும், பிரதமர் பண்டரநாயக்கவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம். அந்தச் சமரசத்தை ஏற்காத பேரினவாதிகளின் முடுக்கி விடப்பட்ட வன்முறைகளின் உச்சமாக 1958 கலவரம், பிக்குவால் கொல்லப்படும் பிரதமர் பண்டாரநாயக்க என்ற வரலாற்றுப் பதிவுகளோடு பயணப்படுகிறது.
ஒரு பக்கம் தமிழ் இன உணர்வாளர்கள் தம்மினத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக அதுவரை கொண்டிருந்த சாத்வீக நெறிமுறைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தும் வேளை,
இன்னோர் புறம் சிங்கள ஆட்சியாளரால் தமிழினத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட கல்வி தரப்படுத்தல் பாகுபாட்டால் மாணவர் சமூகத்தில் இருந்து எழும் கலகக் குரல்கள், அறவழியில் போராடும் மாணவர்களுக்கு எதிரான சிறீமா அரச படையின் சித்திரவதை அதன் விளைவாக மாணவர் தம் ஆயுதமாகத் “திருப்பி அடி” என்ற வன்முறைப் பாதையைத் தொடக்கும் புள்ளி என்று இரண்டு விதமான வரலாற்றுப் பரிமாணங்களைப் பதிவு செய்கின்றது.
இது வெறும் வரலாற்றுப் பதிவாக மட்டுமன்றி அந்தக் கோரத் தாண்டவங்களின் கண்ணாடியாயாகக் காட்சியமைப்புகள்.
தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரின் தோற்றப்பாடுகள், அந்த அந்தக் கடற்கரை மணல் திட்டில் தொடங்கும் நேர்த்தியில் இருந்து ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துப் பதிய வைத்திருக்கின்றார்கள்.
இனக் கலவரம் முகிழ்த்த சூழலைக் கொஞ்சம் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம் என்று நினைக்கும் போதே அடுக்கடுக்காத் தொடரும் காட்சிகள் அந்த எண்ணப்பாட்டை நீர்த்துப் போகச் செய்து நிகழ்வுகளை வலுவாக்குகின்றன
பண்டார நாயக்கா, செல்வா பேச்சு, சிங்களப் பிக்குகளின் உரையாடல், தமிழ்ச் சூழலில் நகரும் காட்சிகளுக்கான உரையாடல் போக்கு என்று வித்தியாசமான பரிமாணங்கள், எல்லாமே வெகு நேர்த்தி.
நாம் ஊரில் அந்தக் காலத்தில் பாவித்த இரட்டை யானை மார்க் நெருப்புப் பெட்டி. சிங்கள வீடுகளில் இருக்கும் மரச்செதுக்கு வேலைகள், தளபாடங்கள், அந்தந்தக் காலகட்டங்களில் இருந்த பொருட்கள், காட்சியமைப்புகல் என்று கலை இயக்கத்துக்காகவே பெருமளவில் உழைத்திருப்பர்கள் போல. கலை இயக்குநர் செ.க.முஜிபுர் ரஹ்மான் இற்கும் அவருக்குத் துணை போந்தவர்களுக்கும் மகா கனம் பண்ண வேண்டும்.
அது போலவே காட்சி ஒளிப்பதிவுக்கான நிறக்கலவை தொட்டு, ஒவ்வொரு நிகழ்தலுக்குமான பார்வைக் கோணங்கள் என்று திரைக்கதை எழுத்தை அப்படியே மொழி பெயர்த்திருக்கும் ஒளிப்பதிவு. திரை வண்ணம் கொடுத்த விநாயகம், காட்சி உறுதி கொடுத்த பிராசிஸ் சேவியர், ஒளிப்பதிவாளர் ரியாஸ் இந்த உழைப்பின் பெறுமதியைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
ஒரு மணி நேரம் 40 நிமிடம் தொடும் இந்தப் படத்தை எந்த விதமான அலுப்புத்தட்டலும் இல்லாது கோத்த விதத்தின் பெறுமானத்தை உதாரணப்படுத்த ஒரு சோறு பதமாகச் சொல்கிறேன் இதை
“யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிடம் தமிழாராய்ச்சி மாநாட்டுக் குழு விடை பெறும் போது, சமதளத்தில் விரியும் தமிழாராய்ச்சி மாநாட்டு மேள தாள ஒலியும், நடனமும் தொடர் காட்சியின் வீரியத்தைப் பதிப்பிக்கிறது. படத்தொகுப்பாளர் சி.மு.இளங்கோவன்
இயக்குநரின் செயல் வடிவத்தின் ஆன்மாவாக இயங்கியிருக்கின்றார்.
தலைவர் பிரபாகரனின் இள வயதுத் தோற்றம் கொண்ட பாத்திரம், தந்தை செல்வா, பண்டாரநாயக்கா என்று நிஜங்களோடு ஓரளவு பொருந்திப் போன முகச் சாயல்கள். அது மட்டும் போதாதென்று இந்தப் படைப்பில் பயணித்த அனைவருமே நாடகத் தன்மை விலத்திய யதார்த்த நடிப்புக்காரர்களாகவே தொனிக்கிறார்கள். அவர்களுக்கான ஒலிப்பதிவு கச்சிதம்.
தெருக்கூத்து ராஜவேல், பெருமாள் ஆகியோரின் பாடலும், கதையாடலும் நெகிழ்வும், வீறாப்புமாகச் சிதறிப் பதிகின்றன.
பாடல்கள் ஒவ்வொரு முக்கிய திருப்பங்களிலும் கைலாகு கொடுத்து அழைத்துப் போகின்றன.
எங்கள் தமிழீழத் தேசியக் கவி புதுவை இரத்தினதுரை இதைப் பாத்திருந்தால் எவ்வளவு நெகிழ்ந்துருகியிருப்பார் என்னுமாற் போல அவரினதும், தமிழ்த் திரு திருக்குமரன், இயக்குநர் தி.கிட்டு ஆகியோரின் பாடல்கள் பதித்த இடங்கள்.
நீள் காட்சிகள் கொண்டு வரும் தாக்கத்தை ஒரு சில நிமிடப் பாடலே விதைக்கிறது.
“தமிழுக்கு அமுதென்று பேர்” என்று வரும் அந்த மாநாட்டுப் பாடலில் தான் என்னவொரு ஆர்ப்பரிப்பும், எழுச்சியும். இசையமைப்பாளர் அ.பிரவீன்குமார் மிகக் கச்சிதமான தேர்வு.
எந்தவித வெத்துவேட்டு சினிமாத்தன, நாயகத்தனம் இல்லை,
பேச்சு வழக்கு, உச்சரிப்பில் முக்கிய பாத்திரங்கள் சமரசமில்லால் இயங்குகின்ற விதத்தில் பயிற்றப்பட்டிருக்கின்றார்கள் இல்லையில்லை “வாழ்ந்திருக்கின்றார்கள்”.
“பயம் ஒன்று மட்டுமே அடிமைத்தனத்தை
இன்னொருவர் மனதில் ஆழமாய்ப் பதியச் செய்யும்”
அந்தப் புத்த பிக்கு சொல்லும் பேச்சு ஓருதாரணம் இந்தப் படத்தில் வசனப் பங்களிப்பின் நேர்த்தியும், கூர்மையும். இக்குறிப்பிட்ட வசனம் தானே பின்னால் நாம் கண்ட வரலாற்றின் போதனை?
ஈழத் தமிழர் பிரச்சனையைக் கையாண்ட ஈழப் படைப்பாளிகளின் நேரடிப் படங்கள் தவிர்ந்த படைப்புகள் இதுவரை
1. அதீத உணர்ச்சிப் போக்குக் கொடுத்து அடிப்படைக் கருத்தை வலுவிழக்க வைத்ததாக (காற்றுக்கென்ன வேலி),
2. குழம்பிய குட்டையில் மீன் பிடித்ததாகவும் (ஏராளம் படங்கள்),
3. இன ஒடுக்கலைத் திரிவுபடுத்திய புனைவுகளாகவும்,
4. புலம் பெயர் வியாபாரச் சரக்குக்கு ஊறுகாயாகவும் (இன்னும் ஏராளம்),
இருக்கும் சூழலில் ஈழப் பிரச்சனைக்கான கச்சிதமான ஊடகப் பரிமாணத்தின் விதைத் தமிழகத்தார் துணையோடு கொடுத்த படம் என்ற வகையில் “மேதமை” தான் தொடக்கப் புள்ளி.
கோடி கோடியாய்க் கொட்டவில்லை, அதீத உணர்ச்சிக் கொட்டல் இல்லை, ஆனால் பெரும் தாக்கம் கொடுக்கிறது இப்படம்,
தமிழாராய்ச்சி மாநாட்டில் கட்டவிழ்த்த ஆயுதப் படைகளின் அடக்குமுறைச் செய்தி பறையும் காட்சியில் தந்தை செல்வாவுக்குப் பின்னால் காந்தி படம் தொங்கிக் கொண்டிருக்கின்றது.
வன்முறை எம் மீது திணிக்கப்பட்டது என்பதைத் தலைவர் சொன்னதைத் தான் படமும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“மேதகு” படைத்த இயக்குநர் தி.கிட்டு (எழுத்து & இயக்கம்) வழி சமைத்த தமிழீழத் திரைக்களம் உங்கள் பணி மிகவும் பெறுமதியானது, நேர்மையின் விதை இது.
வரலாற்று எனது வழிகாட்டி என்றார்
“மேதகு” வே.பிரபாகரன்
நம் தலைவரின் தொடக்க வரலாறின்
வழிகாட்டி நிற்கின்றது “மேதகு”
“மேதகு”திரைப்படத்தைக் காண
,
BSvalue app
android
https://play.google.com/store/apps/details?id=com.gridsandguides.blacksheepvalue
iOS
https://apps.apple.com/us/app/bs-value/id1537233387
இணையத் தளம் வழி
https://bsvalue.com/auth?fromActivate=false
#மேதகு
#Methagu_in_Bsvalue
கானா பிரபா
]]>இந்நிலையில், பாதி உடல் எரிந்த நிலையில் ஒரு சடலம் போலீசுக்கு கிடைக்கிறது. இதை உயர் அதிகாரியான அர்ஜூன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் இறந்த நபர் ஆந்திராவில் இருக்க கூடிய அமைச்சரின் தம்பி என்று தெரிய வருகிறது.
மேலும் இறந்த நபர், ஆஷிமாவிற்கு நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்திருப்பதால், இந்த கொலையை ஆஷிமாவும் அவரது தாய் சீதாவும் சேர்ந்துதான் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் அவர்களை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இந்த கொலைக்கு எதிர் வீட்டில் இருக்கும் விஜய் ஆண்டனி உதவியிருக்க கூடும் என்றும் சந்தேகிக்கிறார். விஜய் ஆண்டனியை பற்றி விசாரிக்கும் போது, ஆந்திரா போலீஸில் முன்னாள் அதிகாரியாக இருந்தவர் என்று தெரிந்துக் கொள்கிறார் அர்ஜூன்.
இறுதியில் அந்த கொலையை செய்தவர் யார் என்று அர்ஜூன் கண்டுபிடித்தாரா? ஆஷிமாவிற்கும் இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்? விஜய் ஆண்டனி ஆந்திரா போலீஸில் இருந்து வெளியே வந்ததற்கு காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் ஆண்டனி இறுக்கமான முகத்துடன் படம் முழுக்க வலம் வருகிறார். கடைசி வரை முகத்தில் மர்மம் இருப்பதை உணர்த்தி நடித்திருக்கிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் அர்ஜூன்.
கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்ற படங்களில் நடிக்கும் நாயகி போல் இல்லாமல் இப்படத்தில் ஆஷிமாவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து நடிப்பில் பளிச்சிடுகிறார். தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சீதா.
ஒரு கொலை, அதன் பின்னணியில் நடக்கும் சம்பவம் என கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்.
இப்படத்தை பார்க்கும் போது, ஏற்கனவே வெளியான சத்யராஜ் நடித்த படத்தின் சாயலாகவும், கமலின் பாபநாசம் சாயலாகவும் தோன்றுகிறது.
விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் படத்திற்கு ஒட்டவில்லை. ஆனால், பின்னணி இசையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். முகேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கொலைகாரன்’ சுமாரானவன்.
]]>
போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
இதன் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மிரட்டலான வழக்காடும் கதைக்களத்துடன் வெளியாகியுள்ள குறித்த ட்ரெய்லர் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடத்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக் ஆக உருவாகியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலனும், முக்கிய கதாபாத்திரங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது.
]]>விஜய் இத்திரைப்படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என உறுதியானது.
விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை திரையிடப் படக்குழு முடிவு செய்திருக்கிறது.
AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கும் வேலையை துவங்கி விட்டதாக ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
]]>Look who is here ?I am the first to see … edit of two songs ??? pic.twitter.com/obUmUvQ94z
— A.R.Rahman (@arrahman) June 4, 2019
இளையராஜா பாடல்களை அவரின் அனுமதியின்றி வணிக ரீதியாக மேடைகளில் பாடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்னக்கிளி என்ற படம் மூலம் 1976 ஆம் ஆண்டு முதல் திரைப்பட பாடல்களுக்கு இசை அமைத்து வரும் இசைஞானி இளையராஜா, இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார்.
இவரின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே கூறவேண்டும். அந்த அளவுக்கு பட்டித்தொட்டு எல்லாம் இவரின் இசை இல்லாமல் இருக்காது.
இப்படி புகழுக்கு சொந்தமான இளையராஜா இசை அமைத்த பாடல்கள் இல்லாமல் தமிழகம் மட்டுமில்லை உலகம் முழுவதும் தமிழக விழாக்கள் முழுமை பெறுவது இல்லை.
ஆனால் தன்னிடம் எந்தவித அனுமதியும் வாங்காமல் அனைத்து பொது நிகழ்ச்சி மேடை, டிவி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன் மற்றும் திரைப்படங்களில் என்று பல இடங்களிலும் எனது இசை பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனது இசையை பயன்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனர்.
ஆனால் நான் இசையமைத்து உள்ளேன் என்ற அடிப்படையில் எனக்கு எந்த விதமான வருவாயும் வழங்கப்படுவதில்லை.
எனவே எனது பாடல் எனது காப்புரிமை. எனது அனுமதியின்றி வணிக ரீதியாக மேடைகளில் பாட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், இளையராஜாவின் அனுமதியின்றி டிவி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன் மற்றும் திரைப்படங்களில் அவரின் பாடல்கள் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
]]>யூடியூப் தளத்தில் தற்போது ‘ரவுடி பேபி’ பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மீண்டும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
சர்வதேச அளவில் இப்பாடலின் காணொளிக்கு கவனம் கிடைத்துள்ளதுடன் இந்த பாடல் யூடியூப் தளத்தில் அவ்வப்போது பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை படைத்து வருகின்றது.
இதுகுறித்து தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில், “இந்த சாதனை ஏற்படுத்த காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வையாளர்களையும் 69 நாட்களில் 300 மில்லியன் பார்வையாளர்களையும் 104 நாட்களில் 400 மில்லியன் பார்வையாளர்களையும் 157 நாட்களில் 500 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘மாரி 2’ திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், அதிகமானோர் பார்வையிட்ட பாடலாக ‘ரவுடி பேபி’ பாடல் மிகப்பெரிய சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
]]>அறிமுக இயக்குனர் கவுதம் ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
ஒளிப்பதிவு கோகுல் பீனோய். இசை சீன் ரோல்டன். பாடல்களை யுகபாரதி மற்றும் தனிக்கொடி எழுதியுள்ளனர். எடிட்டிங் பிலோமின் ராஜ்.
நேற்று மாலை யூ டியூப்பில் ட்ரைலர் வெளியானது.
]]>தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
அப்போது தேர்தலை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமன முடிவிற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான அவசர ஆலோசனை செயற்குழு கூட்டமும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைவர் நாசர், மற்றும் விஷால் ,குட்டி பத்மினி, கார்த்தி போன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என (மே.28) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஒய்வு பெற்ற நீதிபதியுமான பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரியில் ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாசர் தலைவர் பதவிக்கும், கருணாஸ் துணை தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
]]>சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். ஆனால், சமீப காலமாக இவருடைய படங்களின் வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது.
அவர் கூறுகையில், சிவகார்த்திகேயன் நயன்தாராவுடன் நடித்த இரண்டு படங்களும் சரியாக போகாததால், இனி அவருடன் நடிக்கவே மாட்டேன் என முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
]]>