//anjeng மருத்துவம் – Mukadu https://www.mukadu.com Sat, 01 Jun 2019 02:35:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம்!  இயற்கையான உணவு. https://www.mukadu.com/2019/06/01/%e0%ae%92%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be/ Sat, 01 Jun 2019 02:35:44 +0000 http://www.mukadu.com/?p=24484

ஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம்!  இயற்கையான உணவு.

பல இளைஞர்கள் தங்களது உடலை நினைத்து கவலை கொண்டு வருகிறார்கள். ஒல்லியாக இருக்கும் நபர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.

அதற்கு எதிர்மறையாக உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் ஒல்லியாக வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

இப்படியிருக்கையில் உடல் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
உடல் எடை அதிகரிக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது தேங்காய் பாலை உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.

உடல் எடை அதிகரிக்க மிகவும் உதவுவது வாழை, அதிலும் நேந்திரம் பழ துண்டுகளை தேனுடன் சேர்த்து மாலை வேளைகளில் நொறுக்கு தீனியை சாப்பிட்டால் எடை உயர்த்துவதுடன் நோய் எதிர்ப்பாற்றலையும் கூட்டும்.

பசும்பால், பசு வெண்ணெய் உடல் எடையை கூட்ட உதவும் என கூறியுள்ளனர்.

]]>
உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள். https://www.mukadu.com/2019/04/11/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Thu, 11 Apr 2019 09:18:32 +0000 http://www.mukadu.com/?p=21276 உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்.

கோடைகாலத்தில் அனைவருக்கும் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும்.

அதன் காரணமாக அனைவரும் நீர் சார்ந்த பானங்கள், ஆகாரங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தண்ணீரை அதிகளவு குடிக்க வேண்டி இருந்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் தண்ணீரை குடிக்க அனைவருக்கும் பிடிக்காது.

அதனால்தான் பெரும்பாலான சுவைமிகு குளிர் பானங்கள், பழரசங்கள், சர்பத் போன்றவைகளை குடித்து உடலையும், உள்ளத்தையும் குளுமைப்படுத்தி கொள்கின்றனர்.

எண்ணற்ற பழரசங்களும், குளிர்பானங்ளும் பாட்டிலும், பெட்டியிலும் அடைத்து வைத்து கொடுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஏதேனும் ஓர் இரசாயன கலவை கலந்தே காணப்படும்.

எனவே கோடைகாலத்தில் உடலை குளுமையுடன் திகழ செய்ய வேண்டும் என்று கார்பன் அடைக்கப்பட்ட கேஸ் குளிர்பானங்களையும் பழக்கூழ்ச் சாறுகள் என்று இரசாயன பவுடர் கலந்து பழரசங்களை வாங்கி அருந்தி வருகிறோம். இவை அனைத்தும் உடலுக்கு குளிர்ச்சியை தராது.

அத்துடன் உடலில் வேறு விதமான உபாதைகளை ஏற்படுத்தி விடும்.எனவே நாம் கோடைகாலம் முழுவதும் இயற்கையான முறையில் கிடைக்கும் குளிர்பானங்கள், பழச்சாறுகள், சர்பத்களை நம்முன்னே தயார் செய்தும், அவ்வப்போது தயாரித்து வழங்கும் கடைகளில் வாங்கி அருந்த வேண்டும்.

பெரும்பாலும் நமது வீட்டிலேயே தயார் செய்து பழரசம் மற்றும் குளிர்பானங்களை அருந்துவதே சாலச்சிறந்தது.

ஏனெனில் கடைகளில் சேர்க்கப்படும் தண்ணீர், அரைப்பான்கள் போன்றவற்றின் தூய்மை பற்றின கேள்விகள் எழக்கூடும்.

வீட்டில் தயாரிக்கப்படும் கோடைகால குளிர்பானங்கள் தினம் தினம் புதிதாய், புதிய சுவை பலவிதமான பழங்கள் இணைந்தவாறும் தயாரிக்கப்படுவதுடன் இவை உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், உடலில் தங்கும் கழிவுகளை வெளியேற்றவும் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களை தரவல்லதாகவும் உள்ளன.

பழங்களுடன் காய்கறிகள், சில பச்சை கீரைகள் போன்றவைகளும் குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது.

]]>
எச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்! https://www.mukadu.com/2019/02/17/%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/ Sun, 17 Feb 2019 08:54:14 +0000 http://www.mukadu.com/?p=16305
எச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்!

பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fast foods) உட்கொள்வதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மனிதன் ஆளாகிறான்.

இந்த துரித உணவுகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

துரித உணவு என்றால் என்ன?

புரதம், விட்டமின், கனிமச் சத்துக்கள் மிகக் குறைந்த அளவு அல்லது அறவே இல்லாமலும், மிகுந்த உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறுத்துள்ளது தேசிய சத்துணவு கழகம் (National Institute of Nutrition).

கலக்கப்படும் இரசாயனப் பொருட்கள்

துரித உணவு மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG(Mono sodium Glutamate) என்ற ரசாயன உப்பு கலக்கப்படுகிறது. பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் வகை போன்ற நிறைய உணவு வகைகளில் MSG சேர்க்கப்படுகிறது.

MSG ன் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ்(Hypothalmus) பகுதியை தூண்டுகிறது. ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும்.

இதனால் அதிகமாகவும் அடிக்கடி உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் இந்த உணவுகளை உட்கொள்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல், கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு சில இரசாயனப் பொருட்களைச் சேர்த்து வெண்மையாக்கப்படும் மைதாவை கொண்டு தயாரிக்கப்படும் புரோட்டா, நூடுல்ஸ், நாண், ருமாலி ரொட்டி, பன், சமோசா, பீட்சா, குல்ச்சா, பர்கர் போன்றவற்றில் நார்ச்சத்து என்பது இருக்காது.

மேலும் துரித உணவுகளில் சேர்க்கப்படும் சாயம், அஜினமோட்டோ போன்ற வேதிப்பொருட்கள் நமது குடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

ஏற்படும் தீமைகள்
  • துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால், உடலின் மற்ற உறுப்புக்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
  • ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சனைகள் ஏற்படும்.
  • தலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு , உடல் எடை அதிகரிப்பு, உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் உண்டாகும்.
  • விபரீதங்கள், உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை, வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்பு செல்களும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். தவறான நடத்தைகளுக்கு மிக முக்கிய காரணமே MSG தான்.
  • இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிறுவயதிலேயே பருவம் அடைகின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு, எனினும் நம்முடைய உணவுப் பழக்கத்துக்கு அதில் முக்கிய இடம் உண்டு. பெண்கள் பருவம் அடைவதற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்வதில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளுக்கு முக்கிய இடம் உண்டு.
  • மேலும், தினமும் துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகளில் அறுபது வீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடற் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.
  • நொறுக்குத்தீனி, துரித உணவுக் கலாசாரத்துக்கு ஆட்பட்ட இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன என சமீபத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் முர்சியா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கு துரித வகை உணவு பெரும் ஆபத்து என்பது மறுப்பதற்கு இல்லை.

]]>
அழகான கொழுக்கொழு கன்னங்களை பெற இதை செய்யுங்கோ? https://www.mukadu.com/2018/10/16/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ Tue, 16 Oct 2018 12:14:24 +0000 http://www.mukadu.com/?p=3950 அழகான கொழுக்கொழு கன்னங்களை பெற இதை செய்யுங்கோ?

முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். கன்னங்கள் கொஞ்சம் கொழுக்கொழு என்று இருந்தாலே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும்.

அதேசமயம் என்னதான் உடல் என்ன தான் குண்டாக இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உணவு முறை அவசியம்.

கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். அதோடு சில மசாஜ் முறைகளையும் செய்ய வேண்டியது அவசியம்.

உணவு முறைகள்

அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும்.

காலையில் எழுந்து சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற்கு பேசியல் போட கன்னம் பளபளப்பாக மாறுவதோடு குண்டாகும்.

உப்பு நீர்

மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றி வைத்திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின் அழகு கூடும்.

சில ஆப்பிள் துண்டுகள், சில கேரட் துண்டுகள், அரை கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்புகூடும். பார்ப்பவர்களை பிடித்து கிள்ளத் தூண்டும். கற்றாழையால் செய்யப்பட்ட கிரீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவதோடு பளபளப்பையும் தரும்.

ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி தேன், கொஞ்சம் சீஸ் ஒரு மேஜைக் கரண்டி ஓட்ஸ் கலந்து குடிக்க வேண்டும்.

ஆரஞ்ச்

தினமும் ஆரஞ்ச் ஜூஸ் குடித்து வர கொழுக்கொழு கன்னம் கிடைக்கும். ஒரு டீ ஸ்பூன் தேன், ஒரு டீ ஸ்பூன் பப்பாளி சேர்த்து பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை செய்யவும்.

பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு தரும்.

உறக்கம்

பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பருப்பு, கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும்.

கவலை

கவலை ஏற்பட்டாலே முகத்தின் பொலிவு குன்றி கன்னங்கள் ஒட்டிவிடும். எனவே நடப்பது நன்மைக்கே என்று நினைத்து கவலையை விரட்டுங்கள் அப்புறம் பாருங்கள் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி அழகு அதிகரிக்கும்.

சிரிப்பு

முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே எப்போதும் நன்கு சிரித்துக் கொண்டே இருங்கள்.

சூயிங்கம்

பொதுவாக சூயிங் கம் போட்டால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் இந்த சூயிங்கம் மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு சூப்பரான பயிற்சியாகும்.

இதனால் இரட்டை தாடைகளை தவிர்க்கலாம்.

பலூன் ஊதுதல்

பலூன் ஊதும் பயிற்சியானது மிகவும் சிறந்த பயிற்சியாகும். பலூன் ஊதும் பயிற்சியினால் கன்னங்கள் புத்துணர்ச்சியடைகிறது.

கன்னங்கள் கொழுக்கொழுவென ஆவதற்கும் இந்த பயிற்சி உதவுகிறது.

]]>