//anjeng விளையாட்டு – Mukadu https://www.mukadu.com Sat, 27 Jul 2024 19:43:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.8 சில்வர் குதிரையில் இளம் பெண்ணின் செய்ன் நதிச் சவாரி! https://www.mukadu.com/2024/07/27/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/ Sat, 27 Jul 2024 19:43:20 +0000 https://www.mukadu.com/?p=26358

நேற்றைய ஒலிம்பிக் தொடக்க விழாவில் மாஜாஜாலம் போலத் தோன்றி ரசிகர்களின் மனதைத் தொட்ட காட்சிகளில் சில்வர் குதிரையின் செய்ன் நதிச் சவாரியும் ஒன்று.

தொடக்க விழா நிகழ்ச்சி நிரலில் “ஒற்றுமை” (Solidarité) என்ற தலைப்பின் கீழான நிகழ்வுகளில் ஒன்றாக இந்தக் குதிரைச் சவாரி நடந்தது.

செய்ன் நதியில் ஒஸ்ரலிஸ் பாலத்தடியில் ஆரம்பித்து ஈபிள் கோபுரத்தின் அடிவாரம் வரை- சுமார் ஆறு கிலோமீற்றர்கள் தூரத்துக்குப் – பத்து நிமிட நேரம் நீடித்த குதிரைச் சவாரியை லட்சக்கணக்கான ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒலிம்பிக் கொடியைப் போர்த்தபடி வெள்ளி ஆடை அணிந்த இளம் பெண் ஒருவர் ஜொலிக்கும் வெள்ளி நிறக் குதிரையைச் செலுத்திச் செல்லும் அற்புதக் காட்சியாக அதன் முழு அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி சொல்லும் தகவல் என்ன..?

ஒலிம்பிக் போட்டிகளின் ஆன்மீகமாகிய நட்பையும் ஒற்றுமையையும் உலகெங்கும் பரப்புவதே குதிரைச் சவாரியின் நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

குதிரை செய்ன் நதியின் மேம்பாலங்களைக் கடந்து சென்ற போது பாலங்களில் புறாவின் இறக்கைகள் விரிவது போன்ற ஒளி அலங்காரங்கள் தோன்றின.

பாரிஸ் ஒலிம்பிக் விழாவின் கலைத்துவ இயக்குநர் தோமா ஜொலியின் (Thomas Jolly) கூற்றுப்படி, இளம்பெண்ணின் குதிரைப் பயணம் புராணக் கதைகளில் வருகின்ற செக்குவானா (Sequana) என்ற பெண் தெய்வத்தின் அவதாரமாகக் குறிப்பிடப்படுகிறது.”நதியின் தெய்வம்”, “எதிர்ப்பின் அடையாளம்” போன்ற அர்த்தங்களிலும் இதனைப் பார்க்கலாம் என்று அவர் கூறுகிறார்.

நதிகள் தொடர்பான புராணக் கதைகளில் அதன் ஊற்றிடங்களில் காணப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற இளம் பெண் தெய்வமே “செக்குவான” எனப்படுகிறது. தண்ணீர் ஊற்றின் மனித வடிவமாகக் குறிப்பிடப்படுகின்ற

இந்தப் பெண்ணே செய்ன் நதியில் குதிரை மேலே தோன்றினார்.

சவாரி முடிவடைந்ததும் குதிரையில் வந்த பெண்ணே ஒலிம்பிக் கொடியை

அதனை ஏற்றிய இடத்துக்கு எடுத்தச் செல்வது போன்று அதன் தொடரான காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

ரோபோ தொழில் நுட்பத்தின் அடிப்படையில் குதிரையின் அசல் ஓட்டத்தின் அசைவுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் விதமாக சுமார் ஓராண்டுகால முயற்சியில் இந்த உலோகக் குதிரை உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் நொந்த்(Nantes) நகரில் அமைந்துள்ள Blam workshop என்ற தொழில்நுட்பப் பட்டறையிலேயே அது வடிவமைக்கப்பட்டது என்ற கூடுதல் தகவல்களும் வெளியாகியுள்ளன.

நன்றி குமாரதாஸன் பாரீஸ்

]]>
ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடந்தது என்ன.? https://www.mukadu.com/2021/08/02/%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d/ Mon, 02 Aug 2021 13:33:33 +0000 http://www.mukadu.com/?p=26106 ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடந்தது. கத்தாரின் பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கத்துக்காக கடுமையாக போராடினார்கள். இருவரும் 2.37 மீ உயரம் தாண்ட எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதன் பின் இருவருக்கும் 2.37 மீ விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சிக்க மூன்று முறையும் இருவராலும் தாண்ட முடியவில்லை. இறுதியாக ஒரே ஒரு சான்ஸ் கொடுக்க இத்தாலி வீரர் டம்பேரி கால் அடி அதனால் வலி காரணமாக பின் வாங்குவதாக அறிவித்தார்.

ஆனால் கத்தார் வீரர் அதன்பின் செய்த செயல்தான் சிறப்பான தரமான சம்பவம். அவருக்கு தங்கம் உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் போட்டியாளர்களிடம் ” நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்? ” என்று கேட்க ” இருவருக்கும் பகிந்தளிப்போம் ” என்று கூற உடனே அவரும் பின் வாங்குவதாக அறிவித்தார். எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெற தகுதியானவரே என்று இப்படி செய்து தன் Sportsmanship யை நிருபித்தார் கத்தார் வீரர் பாஷிம்.

இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் மிக அற்புதமான தருணங்களில் ஒன்று.

பிரதி  இணையம்

]]>
ஒலிப்பிக்கில் 100 மீற்றர் ஓட்டத்தில் இத்தாலி வீரர் முதலிடம் பெற்றார். https://www.mukadu.com/2021/08/01/%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-100-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%93/ Sun, 01 Aug 2021 19:35:08 +0000 http://www.mukadu.com/?p=26103 ஒலிப்பிக்கில் 100 மீற்றர் ஓட்டத்தில் இத்தாலி வீரர் முதலிடம் பெற்றார்

இத்தாலியின் லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ் ஒலிம்பிக் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.80 விநாடிகளில் நிறைவுசெய்து 2021 ஆண்டின் உலகின் வேகமான மனிதராக இத்தாலியின்
லெமென்ட் மார்ஷல் ஜகொப் வலம் வருகிறார்.

அமெரிக்க ஃப்ரெட் கெர்லியை இரண்டாவது இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் வெண்கலத்தை வென்றார்.

கிரேட் பிரிட்டனின் ஜார்னல் ஹியூஸ் தவறான தொடக்கத்திற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

உலக சாம்பியன் கிறிஸ்டியன் கோல்மேன் மற்றும் 2021 ல் உலகின் அதிவேக ட்ரேவோன் ப்ரோமெல் இருவரும் இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை.

]]>
பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே வென்றனர். https://www.mukadu.com/2021/07/31/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-100-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Sat, 31 Jul 2021 21:03:01 +0000 http://www.mukadu.com/?p=26100 எல்லா பதக்கமும் ஜமைக்காவுக்கே

பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே வென்றனர்

? எலெய்ன் தாம்ப்சன்-ஹேரா

? ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ்

? ஷெரிகா ஜாக்சன்

ஒலிம்பிக் சாதனையோடு தங்கப் பதக்கம் வென்றார் ஜமைக்காவின் எலெய்ன் தாம்ப்சன்-ஹேரா. 10.61 நொடிகளில் பந்தயத்தை முடித்தார். 2016 ஒலிம்பிக்கிலும் இவரே தங்கம் வென்றிருந்தார். இது அவருக்கு நான்காவது ஒலிம்பிக் பதக்கம் – 3 தங்கம், 1 வெள்ளி

34 வயதிலும் புயலெனப் பாயும் ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் (10.74sec) வெள்ளிப் பதக்கம் வென்றார். இது அவருக்கு ஏழாவது ஒலிம்பிக் பதக்கம் – 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம். பங்கேற்ற 4 ஒலிம்பிக் தொடர்களிலும் பதக்கம் வென்றிருக்கிறார்

தன்னுடைய சிறப்பான டைமிங்கை (10.76) வெளிப்படுத்தி வெண்கலம் வென்றிருக்கிறார் ஷெரிகா ஜாக்சன். இது அவருக்கு மூன்றாவது ஒலிம்பிக் பதக்கம்

#Tokyo2020 #Jamaica

]]>
14 வயதில் அகதியாக வந்த சிறுவன் பிரான்ஸுக்குப் பதக்கம் வென்றான்! https://www.mukadu.com/2021/07/24/14-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/ Sat, 24 Jul 2021 21:14:13 +0000 http://www.mukadu.com/?p=26089 14 வயதில் அகதியாக வந்த சிறுவன்
பிரான்ஸுக்குப் பதக்கம் வென்றான்!

ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸ் தனது முதல் பதக்கத்தை
வென்றிருக்கிறது. இன்று நடைபெற்ற
60 கிலோவுக்கு குறைந்த பிரிவு ஜூடோ
போட்டியில் பிரான்ஸின் வீரர் லூகா
மெக்ஹாய்ட்ஸே(Luka Mkheidze) வெண்க
லப் பதக்கம் வென்று சாதனை படைத்தி
ருக்கிறார்.தன்னோடு மோதிய தென்
கொரியா வீரரைத் தோற்கடித்து மூன்றா
வது இடத்தை வென்றுள்ளார்.

“இந்த வெற்றியை மிக மிக மகிழ்வுடன் உணர்கிறேன். ஒலிம்பிக்கில் பங்குபற்றி
ஒரு பதக்கத்தை எடுத்துவரவேண்டும்
என்று சிறுபராயத்தில் கனவு கண்டேன்.
இன்று மூன்றாவது இடத்தை வென்றேன்
என்பதை இன்னும் நம்பமுடியாமல் இருக்
கிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

வீரர் லூகாவின் வாழ்வுக்குப் பின்னால்
பெரிய சோதனை இருக்கிறது.வெளிநா
ட்டினர் பலரைப் போலவே லூகாவும் தனது சிறு வயதில் ஓர் அகதியாகக் குடும்பத்துடன் பிரான்ஸுக்கு வந்தவர்.

ஜோர்ஜியா(Georgia) நாட்டில் 1996 இல் பிறந்த லூகா சிறுவனாக இருந்தபோதே ஜூடோ விளையாட்டில் அந்த நாட்டின் குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர். உள்நாட்டில் ஏற்பட்ட குழப்பம், வறுமை காரணமாக 2009 ஆம் ஆண்டு லூகா தனது தாயாருடன் அங்கிருந்து வெளி யேறி பெலாரஸ் நாடு ஊடாகப் போலந் தில் தஞ்சமடைய நேரிட்டது.அங்கு அகதி முகாம் ஒன்றில் தங்கி வாழ்ந்த லூகா குடும்பத்தினருக்கு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டு அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்தனர்.அத
னால் அங்கிருந்து பயண முகவர்களின் உதவியுடன் சட்டவிரோதமாகப் பிரான் ஸுக்குத் தப்பி வந்தனர்.

போலந்தில் தங்கியிருந்த போதும் பின்னர் பாரிஸின் புறநகரான Villeneuve-
Saint-Georges பகுதியில் வசித்த சமயத்தி
லும் தொடர்ந்து ஜூடோக் கலையை
விடாது பயின்று வந்த லூகா, பின்னர்
அகதிகள் வரவேற்பு நிலையம் ஒன்றின்
பராமரிப்பில் பிரான்ஸின் லூ ஹாவ்
(Le Havre) நகருக்கு இடம்மாற நேர்ந்தது , அது அவரது வாழ்வில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அங்கு அச்சமயம் மேயராக விளங்கிய முன்
னாள் பிரதமர் எத்துவா பிலிப்பின் (Edouard Philippe) உதவியால் 2015 இல் லூகா பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டார். மேயர் பிலிப்பின்
சந்திப்பால் கிடைத்த அந்த உத்வேகத் துடன் விளையாட்டுக் கலையை விடாமல் தொடர்ந்து வந்த லூகா இன்று தனது புகலிட தேசத்துக்கு ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்று வழங்கியுள்ளார்.

நேற்று ஆரம்பமாகிய ஒலிம்பிக் போட்டி
களில் முதல் தங்கப் பதக்கத்தை சீனா
வென்றது. இலகு துப்பாக்கி சுடும் போட்
டியில் சீன வீராங்கனை யாங் கியான் (Yang Qian) முதல் தங்கத்தை வென்று
அந்தப் பெருமையைத் தனதாக்கினார்.

குமாரதாஸன்.

]]>
ரோக்கியோ நகர வானில் ட்ரோன்கள் காட்சிப்படுத்திய ஒளிரும் பூமிப்பந்து! https://www.mukadu.com/2021/07/23/%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b/ Fri, 23 Jul 2021 20:51:38 +0000 http://www.mukadu.com/?p=26079 ரோக்கியோ நகர வானில் ட்ரோன்கள்
காட்சிப்படுத்திய ஒளிரும் பூமிப்பந்து!

கொரோனாக் கால ஒலிம்பிக் விழா
பார்வையாளரின்றித் தொடங்கியது

ரென்னிஸ் ஸ்ரார் தீபம் ஏற்றினார்
ஆரம்ப நிகழ்வில் அதிபர் மக்ரோன்

உலகப் பெருந்தொற்று நோய் காரண மாக ஓரு வருடம் ஒத்திவைக்கப்பட்டு, நடக்குமா, நடக்காதா என்ற நிச்சயமின் மைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுவந்த ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

ஒலிம்பிக் தீப்பந்தம் ஏற்றப்போவது யார் என்பதில் பேணப்பட்ட ரகசியங்களுக்கு
முற்றுப் புள்ளியாக க ஜப்பானின் பிரபல ரென்னிஸ் நட்சத்திரம் நயோமி ஒஸாகா (Naomi Osaka) தீபம் ஏற்றிவைத்தார்.23 வயதான நயோமி ஜப்பானிய தாய்க்கும் ஹெய்ட்டிநாட்டுத் தந்தைக்கும் பிறந்த கலப்பின ஜப்பானிய வீராங்கனை ஆவார்.

ஜப்பானிய தற்காப்புப் படைவீரர்கள்
தேசியக் கொடியை ஏற்றினர். நாட்டின்
உலகப் புகழ் பெற்ற பாடகி மிசியா(RnB singer Misia) தேசிய கீதத்தைப் பாடினார்.

ஜப்பானிய பேரரசர் நருஹிடோ(Naruhito)
ஒலிம்பிக் போட்டிகளை உத்தியோகபூர்வ
மாகத் தொடக்கி வைத்தார். அச்சமயம் அரங்கின் மேலே வாண வேடிக்கைகள்
ஒளிர்ந்தன.பேரரசர் நருஹிடோவுடன்
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாக் (Thomas Bach) இருவரும்
மாஸ்க் அணிந்தவர்களாக கையசைத்து
வீரர்களை வரவேற்றனர்.

ஆரம்ப விழா அரங்கத்துக்கு மேலே
வானத்தில் சுமார் ஆயிரத்து 800
ட்ரோன்கள் பறக்கவிடபப்பட்டு அவற்றின் மூலம் விநோதமான வண்ணக் கோலங்
கள் காட்சிப்படுத்தப்பட்டன. இறுதியில் ஒளிரும் ட்ரோன்கள் ஒன்று சேர்ந்து பூமிப் பந்தின் வடிவத்தில் வானில் வட்டமாகத் தோன்றிய காட்சி காண்போரைக் கவர்ந் தது.

சுமார் நான்கு மணி நேரம் நீடித்த வாண வேடிக்கைகள், கண்காட்சிகள், அணி வகுப்புகளுடன் தொடக்க விழா நிறைவ
டைந்தது. உலகெங்கும் உள்ள ஒலிம்பிக்
ரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக
அதனைக் கண்டுகளித்தனர். மிக எளிமையான ஒலிம்பிக் விழா என்று
ஊடகங்கள் இன்றைய தொடக்க நாளை
வர்ணித்துள்ளன.

இருநூறு நாடுகளினது விளையாட்டு
வீரர்கள் தத்தமது நாட்டுக் கொடிகளுடன்
அணிவகுத்துச் சென்றனர். மொத்தம் 11
ஆயிரம் வீரர்கள் ஜப்பானில் கூடியுள்ள
னர். ஆனால் சமூக இடைவெளி பேணல் காரணமாக அணிவகுப்புகளில் மிக அரி
தான எண்ணிக்கையானோரை மட்டுமே காண முடிந்தது. போட்டியாளர்களைத் தினமும் வைரஸ் சோதனை செய்வது, தனிமைப்படுத்தலுடன் பயிற்சியில் ஈடுபட வைப்பது என்று பல வித சுகாதார நடைமுறைகள் அங்கு மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவி
ருக்கின்ற நாடு என்ற ரீதியில் பிரான்ஸ்
அதிபர் மக்ரோனும் மற்றும் அமெரிக்க அதிபரது துணைவியார் ஜில் பைடன்
உட்பட ஒரு சில வெளிநாட்டுப் பிரமுகர்
களுமே இன்றைய தொடக்க விழாவில்
கலந்து கொண்டனர். எண்பது வீரர்கள்
அடங்கிய பிரெஞ்சு ஒலிம்பிக் விளையா ட்டு அணியினருக்கு அதிபர் மக்ரோன் அங்கு வைத்துத் தனது வாழ்த்துக்களை
தெரிவித்தார்.

உலகம் இன்னமும் ஒரு பெரும் சவாலை
எதிர்கொண்டு நிற்பதைத் தொடக்க நிகழ்வு பிரதிபலித்தது. இதற்கு முன்னர்
றியோ,லண்டன் நகரங்களில் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டிகளது தொடக்க
நிகழ்வுகளில் காணப்பட்டது போன்ற பிராமாண்டம் இன்றைய விழாவில் தென்
படவில்லை. ஜப்பானிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் சேர்த்து ஆயிரத்துக்
கும் குறைவானவர்களே ரோக்கியோ
அரங்கில் கூடியிருந்தனர். அரங்கின் பெரும் பகுதி ஆசனங்கள் வெறுமையாய்
கிடந்தன. “ஒலிம்பிக்கை நிறுத்து” என்று
வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய
கோஷங்கள் உள்ளே எதிரொலித்தன.
நாடு பெரும் தொற்றுக்குள் சிக்கியுள்ள
நிலையில் 11 ஆயிரம் வெளிநாட்டு வீரர்
களை விளையாட அழைப்பது ஒலிம்பிக்
போட்டிக் களத்தை ஒரு பெரும் தீவிர தொற்றுப் பரப்பும் நிகழ்வாக (super- spreader event) மாற்றிவிடும் என்று கூறு
வோர் போட்டியை நடத்துவதற்குக்கடும்
எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

ஜப்பானில் கடைசியாக 1964 ஆம் ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் ரோக்கியோவில் நடைபெற்றிருந்தன.
இன்று அங்கு ஆரம்பமாகியுள்ள 31 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து ஓகஸ்ட் 9ஆம் திகதிவரை நடைபெறவுள்
ளன.
குமாரதாஸன். பாரிஸ்.

]]>
யூரோ 2020: சாம்பியன் யாா்? நாளை இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து மோதல். https://www.mukadu.com/2021/07/10/%e0%ae%af%e0%af%82%e0%ae%b0%e0%af%8b-2020-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%be%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88/ Sat, 10 Jul 2021 18:56:35 +0000 http://www.mukadu.com/?p=26067 யூரோ 2020: சாம்பியன் யாா்? நாளை இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து மோதல்.

யூரோ 2020 கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதுகின்றன.சொந்த மண்ணில் முதல் யூரோ பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியான யூரோ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த யூரோ போட்டி,கொரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டுக்கு மாற்றப்பட்டது.தலைசிறந்த 24 நாடுகளின் அணிகள்,பங்கேற்ற இப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி 11 நகரங்களில் தொடங்கியது.

இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதுகின்றன.அரையிறுதி ஆட்டங்களில் முன்னாள் உலக சாம்பியன் இத்தாலி பெனால்டி ஷூட் டில் 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் டென்மாா்க்கை வென்றது.

55 ஆண்டுக் கால கனவு:

இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் கடந்த 1966-இல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதே, அது இறுதியாக வென்ற பெரிய போட்டியாகும். அதன் பின் யூரோ 68, 96, 1990, 2018 உலகக் கோப்பை, 2019 யூஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் உள்ளிட்ட 5 பெரிய போட்டிகளில் அரையிறுதியோடு வெளியேறியது. இந்நிலையில் நடப்பு யூரோ போட்டியில் பலம் வாய்ந்த ஜொ்மனி, உக்ரைன் அணிகளை தொடக்க சுற்றுகளில் வெளியேற்றியது. இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து அணி 55 ஆண்டுக் காலமாக கோப்பை வெல்லும் கனவை நனவாக்கும் முனைப்பில் உள்ளது.

புத்தெழுச்சியுடன் காணப்படும் இத்தாலி:

அதே நேரம், இத்தாலி அணி யூரோ போட்டியில் 1968-இல் மட்டுமே பட்டம் வென்றது. மேலும் 2000, 2012-இல் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. நிகழாண்டு யூரோவில் அரையிறுதியில் ஸ்பெய்னை வீழ்த்திய இத்தாலி, தொடா்ந்து 33 ஆட்டங்களில் வென்ற பெருமையுடன் திகழ்கிறது. கடந்த 2018 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் இத்தாலி அணி போட்டிக்கு கூட தகுதி பெறாத அவல நிலைக்கு தள்ளப்பட்டது. மீண்டும் புத்தெழுச்சி பெற்ற அணியாக உள்ள இத்தாலி தனது இரண்டாவது யூரோ பட்டத்தை கைப்பற்றும் தீவிரத்தில் உள்ளது. இங்கிலாந்து அணியில் புகோயோ சாகாவின் உடல்தகுதி குறித்து அணி நிா்வாகம் கவலை தெரிவித்துள்ளது. இத்தாலி அணியில் முக்கிய வீரரான லியானா்டோ ஸ்பினாஸ்லோ காயத்தால் ஆட முடியாமல் உள்ளது பாதகமாக உள்ளது.

இறுதி ஆட்டம் குறித்து இத்தாலி கேப்டன் ஜியாா்ஜியோ சில்லினி கூறியதாவது:

இந்த யூரோ போட்டியில் துருக்கியுடன் நடைபெற்ற முதல் ஆட்டம் முதல் தற்போது வரை உணா்வு பூா்வமாக திகழ்கிறது. எங்கள் பயிற்சியாளா் ராபா்ட்டோ மான்சினி பல ஆண்டுகளாக அணியை கட்டமைத்து வருகிறாா். லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் ரசிகா்கள் இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக இருப்பா். இது எங்களுக்கு சிறிது அழுத்தத்தை உண்டாக்கும். எனினும் அவற்றை தாண்டி வெற்றிக்கு பாடுபடுவோம்.

இங்கிலாந்து மிட்பீல்டா் ஜோா்டான் ஹென்டா்சன் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டம் எங்களின் வாழ்க்கையில் பெரிய ஆட்டமாகும். மைதானத்தில் திரளும் ரசிகா்கள் மற்றும் நாட்டு மக்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் கடமை உள்ளது. இது எங்களுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகும். 1966-இல் உலகக் கோப்பை வென்றதைப் போல் நாங்களும் யூரோ கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளோம்.

நேருக்கு நோ்:

இரு அணிகளும் பெரிய போட்டிகளில் இதுவரை 4 முறை நேருக்கு நோ் மோதியுள்ளன. யூரோ 1980-தொடக்க சுற்று இத்தாலி 1-0 வெற்றி,

1990 உலகக் கோப்பை, மூன்றாவது இடத்துக்கான ஆட்டம்-இத்தாலி 2-1 வெற்றி, யூரோ 2021, காலிறுதி, பெனால்டி ஷூட்டில் இத்தாலி வெற்றி, 2014 உலகக் கோப்பை , குரூப் ஆட்டம், இத்தாலி 2-1 வெற்றி.

அனைத்து விதமான போட்டிகளில் இரு அணிகளும் 27 முறை மோதியதில், இத்தாலி 10 ஆட்டங்களிலும், இங்கிலாந்து 8-இலும் வென்றன. 9 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

வெம்ப்ளி மைதானம்:

இங்கிலாந்து-இத்தாலி இறுதி ஆட்டம் நடைபெறும் லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் 90,000 பாா்வையாளா்கள் அமரலாம். கடந்த 2002-இல் பழைய வெம்ப்ளி மைதானம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டது. யூரோ 96 போட்டி இறுதி ஆட்டம் வெம்ப்ளியில் நடைபெற்ற போது, ஜொ்மனி கோப்பையை வென்றது.

ஜொ்மனி, ஸ்பெயின் 3 முறை சாம்பியன்:

யூரோ போட்டியில் அதிகபட்சமாக ஜொ்மனி, ஸ்பெயின் அணிகள் தலா 3 முறை கோப்பை வென்றுள்ளன. மேலும் அதிகபட்சமாக 6 இறுதி ஆட்டங்களில் ஜொ்மனி தகுதி பெற்றது. போட்டியை நடத்திய நாடுகளான ஸ்பெயின் (1964), இத்தாலி (1968), பிரான்ஸ் (1984) ஆகியவை பட்டம் வென்றன. அதே வேளையில் போா்ச்சுகல் (2004), பிரான்ஸ் (2016) தோல்வியடைந்தன.

நன்றி இணையம்.

]]>
உலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!! https://www.mukadu.com/2019/06/05/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/ Wed, 05 Jun 2019 12:24:00 +0000 http://www.mukadu.com/?p=24915 உலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!!

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 7-வது லீக் ஆட்டம் நேற்று கார்டிஃப் மைதனத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.

அந்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து, இலங்கை பேட்டிங் செய்தது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. திமுத் கருணாரத்னே அதிரடியாக 30 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். மறுமுனையில் குஸல் பெரேரா நிலைத்து நின்று 78 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

33 ஓவர்களில் இலங்கை 182 ஓட்டங்கள் எடுத்த போது மழை பெய்தததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்ற பின்பு ஆட்டம் தொடர்ந்தது.

ஆனால் மழையின் காரணமாக கால தாமதம் ஏற்பட்டத்தால், இரண்டு தரப்பும் 50 ஓவர் போட்டி 41 ஓவராக குறைக்கப்பட்டது.

ஆனால் இலங்கை அணி 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்டும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி 4 விக்கெட்டும், தாஸ்லத் ஸத்ரான் மற்றும் ரஷீத் கான் தலா 2 விக்கெட்டும், ஹமித் ஹாசன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆட்டத்தின் நடுவில் மழை குறுக்கிட்டதால், டக்வோர்த் லுயிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது பேட்டிங் தொடங்கியது. ஆனால் இலங்கை அணியின் துல்லியமான பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தடுமாறினார்கள்.

அந்த அணியில் நஜிபுல்லா ஸத்ரான் மட்டும் அதிகபட்சமாக 43(56) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் குறைவான ரன்கள் எடுத்து அவுட் ஆனதால், ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் இலங்கை அணி டக்வோர்த் லுயிஸ் முறைப்படி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இலங்கை. அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

]]>
இலங்கை அணி தடுமாற போட்டி மழையினால் இடைநிறுத்தம்! https://www.mukadu.com/2019/06/04/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/ Tue, 04 Jun 2019 14:17:13 +0000 http://www.mukadu.com/?p=24826 இலங்கை அணி தடுமாற போட்டி மழையினால் இடைநிறுத்தம்!

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (04) நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டியில் மழை குறுக்கிட்டுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்துடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி எவ்வித மாற்றங்களும் இன்றி களமிறங்க, இலங்கை அணியின் சார்பில் வேகப் பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில், ஜீவன் மெண்டிஸிற்கு பதிலாக நுவன் பிரதீப் இணைக்கப்பட்டிருந்தார்.

அதேநேரம், இன்று களமிறங்கிய இலங்கை அணியின் சார்பில், திரிமான்னவுக்கு பதிலாக குசல் பெரேரா, திமுத் கருணாரத்னவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார்.

புதிய ஆரம்ப ஜோடியுடன் களமிறங்கிய இலங்கை அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றது. குறிப்பாக குசல் பெரேரா வேகமாக ஓட்டங்களை குவிக்க, திமுத் கருணாரத்ன நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவர்கள் இருவரும், முதல் விக்கெட்டுக்காக 92 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, 30 ஓட்டங்களுடன் மொஹமட் நபியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய லஹிரு திரிமான்னே நிதானமாக ஓட்டங்களை குவித்ததுடன், இதில் அவர் 6வது ஓட்டத்தை பெற்றபோது, ஒருநாள் போட்டிகளில் 3000 ஓட்டங்களை கடந்தார்.

100 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டிய இவர், வேகமாக 3000 ஓட்டங்களை பெற்ற மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன்னர் உபுல் தரங்க 93 இன்னிங்ஸ்களிலும், மார்வன் அதபத்து 94 இன்னிங்ஸ்களிலும் 3000 ஓட்டங்களை கடந்திருந்தனர்.

லஹிரு திரிமான்னே மற்றும் குசல் பெரேரா ஆகியோர் அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுவளித்து ஓட்டங்களை குவித்த போதும், மொஹமட் நபி இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை ஆட்டம் காண வைத்தார்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 144 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்திருந்த நிலையில், மொஹமட் நபி ஒரே ஓவரில் லஹிரு திரிமான்னே, குல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்ற, இலங்கை அணி 146 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

குசல் பெரேரா மாத்திரம் களத்தில் நிற்க ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேற தொடங்கினர்.

மொஹமட் நபியின் ஓவருக்கு அடுத்த ஓவரில் தனன்ஜய டி சில்வா ஆட்டமிழக்க, திசர பெரேரா ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார்.

தொடர்ச்சியாக இசுரு உதானவும், இலங்கை அணிக்காக ஓட்டங்களை குவித்திருந்த குசல் பெரேராவும் (78) ஆட்டமிழக்க இலங்கை அணி முற்றுமுழுதாக தங்களுடைய கட்டுப்பாட்டை இழந்தது.

இறுதியாக, சுரங்க லக்மால் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் துடுப்பெடுத்தாடிய நிலையில், போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டது.

மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்படும் போது, இலங்கை அணி 33 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது.

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசல் பெரேரா 78 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பந்து வீச்சில் மொஹமட் நபி அதிகபட்சமாக 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதேவேளை, இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு தொடர்ந்தும் துடுப்பெடுத்தாட வாய்ப்பு இல்லாவிட்டால், ஆப்கானிஸ்தான் அணிக்கு 33 ஓவர்களில் 171 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
சோனேகோவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்த பெடரர். https://www.mukadu.com/2019/05/27/%e0%ae%9a%e0%af%87%e0%ae%be%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%af%87%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d/ Mon, 27 May 2019 15:39:23 +0000 http://www.mukadu.com/?p=24290 சோனேகோவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்த பெடரர்.

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ரோஜர் பெடரர் சோனேகோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரான நேற்று பாரீஸில் ஆரம்பமானது.

‘களிமண் தரை’ போட்டியான இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 3 ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இத்த்தாலியை சேர்ந்த லோரென்ஜா சோனிகோவை சந்தித்தார்.

இந்த ஆட்டத்தில் பெடரர் 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சோனிகோவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதேவ‍ேளை நேற்று இடம்பெற்ற மற்றுமோர் ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, பிரான்ஸ் வீரர் குயின்டின் ஹாலிஸை 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2 ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

அத்துடன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 2-6 என்ற செட் கணக்கில், ரஷ்ய வீராங்கனை அனஸ்தாஸியா போடபோவாவிடம் தோல்வியடைந்தார்.

மேலும் ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஸா, 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில், அமெரிக்க வீராங்கனை டெய்லர் டவுன்சென்டை வீழத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

]]>