//anjeng
பாரிஸ் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிஸில் “ஆழிக்கிழிஞ்சல”
முற்குறிப்பு
“இரத்தக்காட்சிகள் கொடூர கொலைகள் வெளிப்படையாக காட்டும்பொழுது வயது எல்லையை குறிப்பிட்டு பார்வையாளர்களை உள்வாங்குங்கள் ஆழிக்கிழிஞ்சல் திரைப்படம் குழந்தைகள் மனவளம் குன்றியவர் கற்பிணிப்பெண்கள் முதியவர் பார்க்க தடையான படமே“
குற்ற விசாரனை திகில் படம் எடுக்கும்போது, பெரும்பாலான தமிழ் திரைப்பட இயக்குணர்கள் அதின் வெளிப்புற நரம்பை மட்டும்
தொடுகின்றனர் பயம் வருகிறதா? இசை வேலை செய்கிறதா? முடிவில் திருப்பம் இருக்கிறதா வென்று.
ஆனால் அந்த வெளிப்புறத்தின் அடியில் நேரடியான விடையங்களை தாண்டி ஒரு மெல்லிய உள்அதிர்வலை இருக்கிறது.அதைப் பெரும்பாலான இயக்குணர்கள் கவனிக்க தவறி விடுகின்றார்கள் திகில் என்பது இரத்தமும் கொடுறமான ஆயுதப்பயன்பாடும் கொண்ட வெறும் காட்சியல்ல, அது ஒரு மனஅழுத்தத்தின் அரசியல். அது யாரை பயமுறுத்துகிறது என்பதே அதன் நெறி. அது படைப்பின் தாக்கத்தால் ஒடுக்கப்பட்ட நினைவுகளின் துடிப்பு.
ஒலியும் அமைதியும் திகிலின் இரு முகங்கள்.
சில நேரங்களில் குரல் இல்லாமையே அதிகமான சத்தமாகி விடுகிறது.அந்த அமைதி ஒரு ஒடுக்கப்பட்ட உணர்வை தூண்டும் உண்மையின் தன்னிச்சை மொழி.
அந்த அமைதியை உருவாக்கத்தெரிந்தால் , திகில் திரைப்படம் பேசத் தொடங்கும்.
குற்றவிசாரணை திகிலில் திரைப்படங்களில் நேரம் ஒரு மறைமுகக் கதாபாத்திரமாக இயங்கவேண்டும்
அது சில நேரங்களில் மெல்ல நகரவேண்டும், சில சமயம் நின்றுவிடவும் வேண்டும்.
அந்த நின்ற நொடியில் தான் பார்வையாளன் தன் மூச்சை அடக்கிக்கொள்கிறான் உணர்சியின் உச்சத்திற்கு போகின்றான். அது மனஅழுத்தத்தின் அளவாக பார்வையாளனுக்குள் வியாபிக்கின்றது குற்றவிசாரனை திகிலின் மர்மம் ஒரு நெறிவினாவும் கூட.
பார்வையாளன் பயத்தை அனுபவிக்கின்றானா அல்லது அதை நுகர்கின்றானா?
ஒரு படம் திகிலூட்டுவது மட்டுமல்ல,
அது பயம் உண்டாக்கும் பொறுப்பையும் சுமக்கிறது.
ஏனெனில் ஒவ்வொரு பயத்திற்கும் அதன் பின்னால் ஒரு மௌனமான மனித மன வரலாறு இருக்கிறது.
உண்மையான குற்ற விசாரனைதிகில் படம் வெளியில் நிகழ்வதல்ல,படம்பார்பதனுடாக
அது பார்வையாணன் உள்மன காட்சியகத்தில் நிகழவேண்டும் அந்த நிழல்கள், அந்த மூச்சுகள்,
அனைத்தும் மனதின் மறைந்த கோப்புகளைத் திறக்கவேண்டும்.
2025 நவம்பர் 9ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, பிரான்ஸ் ஈழத் தமிழர் திரைப்பட சங்கத்தின் திரை வெளியீடாக “ஆழிக்கிளிஞ்சல்” (குற்ற விசாரனை திகில் படம் திரைப்படம்) பிரான்ஸில் உள்ள MEGARAMA CINEMA (4 avenue de la Longue Bertrane, 92390 Villeneuve-La-Garenne) திரையரங்கில் நூறு முதல் நூற்று இருபது வரை உள்ள பார்வையாளர்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது.
“ஆழிக்கிளிஞ்சல்” திரைப்படம் பெண் தலைமைப் பாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குற்றவிசாரணைத் திகில் திரைப்படமாகும். திரைப்பட விளம்பரக் குறிப்பில் “எழுத்தோட்டத்தில் ஈழ சினிமா கனவுகளை நிறைவேற்றும் முயற்சி”என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
ஈழச் சினிமாவின் வரலாற்றில் இத்தகைய “கனவு நிறைவேற்றும் முயற்சி” என்ற குறிப்பு ஏன் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது என்பது ஒரு கேள்வியாகும்.
இது பார்வையாளர்களின் குற்றமா? அல்லது படைப்பாளர்களின் படைப்பாற்றல் மற்றும் வீரியமின்மையா? ஆனால் ஆழிக்கிளிஞ்சல் திரைப்படக்குழு இத்தேடலை நெருங்கியவர்களாகவள காணப்பட்டார்கள்.
குற்றவிசாரணைத் திகில் திரைப்படங்களில், ஒவ்வொரு கணத்திலும் பார்வையாளர்களின் ஊகங்களை சிதைத்து, முடிவுவரை அவர்களை சுவாரஸ்யத்துடன் இழுத்துச் செல்ல வேண்டும்.
ஆனால் “ஆழிக்கிளிஞ்சல்” திரைப்படம் விசாரணைத் திகிலைக் கதைக்குள் வைத்திருந்தாலும், ஆரம்ப நிகழ்வுகளில் குற்றவாளி யார் என்பது முன்னரே காட்டப்படுவதால், பார்வையாளர்களின் ஈர்ப்பு சற்று பாதிக்கப்படுகிறது.
இன்றைய சூழலில், ஈழச் சினிமா தயாரிப்பில் இந்தியத் தமிழ்சினிமாவின் தாக்கமின்றி தனக்கென ஒரு பாணியை உருவாக்குவது கடினம்.
சமகாலத்தில் “வர்த்தக சினிமா” என்ற பெயரில் பல தமிழ் திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் வினோத் அவற்றைத் தாண்டி “ஆழிக்கிளிஞ்சல்”-ஐ ஒரு ஈழத் தமிழ்சினிமாவாக வடிவமைத்துள்ளார்.
அது சாதாரண பார்வையாளரும் ஆர்வத்துடன் பார்கக்கூடிய, நல்ல சினிமா முயற்சியாக இருக்கிறது.
ஈழச் சினிமாவின் வளர்ச்சியை உணர வேண்டுமானால், அதை பார்வையிடும் அனுபவம் மூலமே புரிந்துகொள்ள முடியும்.
“ஆழிக்கிளிஞ்சல்” திரைப்படம், குற்றவிசாரணைத் திகில் வகையில் கதையை முன்னேற்றும் ஒரு முயற்சி , ஈழத் தமிழ்சினிமாவின் தனித்துவமான கலை முயற்சியாகவும் பார்க்கக்கூடியது.
வாழ்த்துகள் படக்குழுவுக்கு 

09-11-2025
ப.பார்தீ

« எழுதமுடியாத இயற்கையின் அழகில் இன்னும் பிறந்து கொண்டிருப்பது காதல் «
இசை-ஜெ
வயலின்
மு. திவானி
க. சிந்துஜா
Bass guitar – A. Henry
Lead guitar – Enos J
குரல்
கார்த்திக் ஸ்ரீதரன்
திருமதி. ஜெயபாரதி கெளசிகன்
காட்சி சங்கர்
வரிகள் பா.பார்தீ
முகடு படைப்பகத்தன் வெளியீடாக பொங்கலோ பொங்கல் பாடல் உங்களுக்காக
“பொங்கலோ பொங்கல்”
வெளியீடு முகடு படைப்பகம்
Lyrics ப.பார்தீ (parthipan)
Music :- Jeyanthan Wicky
Vocal :- Jothy , Jeyanthan Wicky
Vedio ATELIER:- papillon de Paris
“பிரபாகரன்”
ஏந்திய குழந்தைக்குப் பெயர் வைக்கும் காட்சியில் சிலிர்த்துப் போய்க் கண் மடை திறக்க, மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றதொரு பரவச அனுபவம். இப்படியாக “மேதகு” படத்தில் பயணத்து விட்டு வந்திருக்கிறேன்.
எண்பதுகளில் ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் சின்னஞ் சிறுவர்களாக நாம் இருந்த அந்தக் காலத்தில், இரவு கழிக்கும் நேரத்தில் அந்த அமைதியை ஊடறுத்து ஒரு பறையொலி கிளம்பும்.
எல்லோரும் வீதிக்கு ஓடுவோம்.
சொல்லி வைத்தாற் போல வட்டம் போல நாமெல்லோரும் சூழ, அங்கே வந்திருக்கும் “தெருக்கூத்துக் குழு” நம் இன விடுதலையையும், நம் தமிழினம் எப்படி அடக்கி ஒடுக்கப்படுகிறது என்பதையும் பாட்டோடும், நிகழ் வரலாறுகளோடும் பாடிக் காட்டும்.
“இன்னார் மகன் இயக்கத்துக்குப் போய் விட்டாராம்” என்று அடுத்தடுத்த நாட்களில் வரும் ஊரார் பேச்சு. இதெல்லாம் நாம் வாழ்ந்த காலத்தில் தேங்கிய வாழ்வியல் நினைவுகள். வரலாற்று நாயகர்களின் அடிச்சுவடுகள் முகிழ்ந்த காலங்கள்.
இங்கே “மேதகு” திரைப்படத்தின் திரைகதையோட்டத்தின் அடிநாதமாகக், கதை சொல்லியாக “மதுரை அடைக்கலம் தெருக்கூத்துக் குழு” துவக்கப் புள்ளியில் இருந்து சேதி பறைய, “தம்பி”யின் கதையோடு, ஒரு இனம் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறு பதியப்படுகிறது. இந்த உத்தி எப்படி இவர்கள் மனதில் தோன்றியதோ என்ற பேராச்சரியம் எழுகிறது. நாம் வாழ்ந்த அந்த ஈழப் போராட்ட ஆரம்ப கால நிஜங்களின் தரிசனமாக இந்தத் தெருக் கூத்துக் “கதை சொல்லிகள்” நுட்பமாகப் பயன்பட்டிருக்கிறார்கள்.
“மேதகு” படம் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்வின் ஆரம்ப காலப் பதிவு என்ற அடையாளமே தவிர, இந்தப் படைப்பில் ஈழத் தமிழினம் சுதந்திரத்துக்குப் பின் எவ்விதமாகச் சிங்களப் பேரினவாதத்திற்கு இரையாக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றின் பதிவாகவே இருக்கின்றது.
அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த பண்டார நாயக்கா கொண்டு வந்த தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் தொடங்கிய அறப்போராடம், அதனைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட படுகொலை அரங்கேற்றங்கள் என்று கலவரபூமியாக அமைந்த சூழலில் தந்தை செல்வாவின் தலைமையிலான தமிழரசுக் கட்சிக்கும், பிரதமர் பண்டரநாயக்கவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம். அந்தச் சமரசத்தை ஏற்காத பேரினவாதிகளின் முடுக்கி விடப்பட்ட வன்முறைகளின் உச்சமாக 1958 கலவரம், பிக்குவால் கொல்லப்படும் பிரதமர் பண்டாரநாயக்க என்ற வரலாற்றுப் பதிவுகளோடு பயணப்படுகிறது.
ஒரு பக்கம் தமிழ் இன உணர்வாளர்கள் தம்மினத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக அதுவரை கொண்டிருந்த சாத்வீக நெறிமுறைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தும் வேளை,
இன்னோர் புறம் சிங்கள ஆட்சியாளரால் தமிழினத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட கல்வி தரப்படுத்தல் பாகுபாட்டால் மாணவர் சமூகத்தில் இருந்து எழும் கலகக் குரல்கள், அறவழியில் போராடும் மாணவர்களுக்கு எதிரான சிறீமா அரச படையின் சித்திரவதை அதன் விளைவாக மாணவர் தம் ஆயுதமாகத் “திருப்பி அடி” என்ற வன்முறைப் பாதையைத் தொடக்கும் புள்ளி என்று இரண்டு விதமான வரலாற்றுப் பரிமாணங்களைப் பதிவு செய்கின்றது.
இது வெறும் வரலாற்றுப் பதிவாக மட்டுமன்றி அந்தக் கோரத் தாண்டவங்களின் கண்ணாடியாயாகக் காட்சியமைப்புகள்.
தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரின் தோற்றப்பாடுகள், அந்த அந்தக் கடற்கரை மணல் திட்டில் தொடங்கும் நேர்த்தியில் இருந்து ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துப் பதிய வைத்திருக்கின்றார்கள்.
இனக் கலவரம் முகிழ்த்த சூழலைக் கொஞ்சம் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம் என்று நினைக்கும் போதே அடுக்கடுக்காத் தொடரும் காட்சிகள் அந்த எண்ணப்பாட்டை நீர்த்துப் போகச் செய்து நிகழ்வுகளை வலுவாக்குகின்றன
பண்டார நாயக்கா, செல்வா பேச்சு, சிங்களப் பிக்குகளின் உரையாடல், தமிழ்ச் சூழலில் நகரும் காட்சிகளுக்கான உரையாடல் போக்கு என்று வித்தியாசமான பரிமாணங்கள், எல்லாமே வெகு நேர்த்தி.
நாம் ஊரில் அந்தக் காலத்தில் பாவித்த இரட்டை யானை மார்க் நெருப்புப் பெட்டி. சிங்கள வீடுகளில் இருக்கும் மரச்செதுக்கு வேலைகள், தளபாடங்கள், அந்தந்தக் காலகட்டங்களில் இருந்த பொருட்கள், காட்சியமைப்புகல் என்று கலை இயக்கத்துக்காகவே பெருமளவில் உழைத்திருப்பர்கள் போல. கலை இயக்குநர் செ.க.முஜிபுர் ரஹ்மான் இற்கும் அவருக்குத் துணை போந்தவர்களுக்கும் மகா கனம் பண்ண வேண்டும்.
அது போலவே காட்சி ஒளிப்பதிவுக்கான நிறக்கலவை தொட்டு, ஒவ்வொரு நிகழ்தலுக்குமான பார்வைக் கோணங்கள் என்று திரைக்கதை எழுத்தை அப்படியே மொழி பெயர்த்திருக்கும் ஒளிப்பதிவு. திரை வண்ணம் கொடுத்த விநாயகம், காட்சி உறுதி கொடுத்த பிராசிஸ் சேவியர், ஒளிப்பதிவாளர் ரியாஸ் இந்த உழைப்பின் பெறுமதியைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
ஒரு மணி நேரம் 40 நிமிடம் தொடும் இந்தப் படத்தை எந்த விதமான அலுப்புத்தட்டலும் இல்லாது கோத்த விதத்தின் பெறுமானத்தை உதாரணப்படுத்த ஒரு சோறு பதமாகச் சொல்கிறேன் இதை
“யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிடம் தமிழாராய்ச்சி மாநாட்டுக் குழு விடை பெறும் போது, சமதளத்தில் விரியும் தமிழாராய்ச்சி மாநாட்டு மேள தாள ஒலியும், நடனமும் தொடர் காட்சியின் வீரியத்தைப் பதிப்பிக்கிறது. படத்தொகுப்பாளர் சி.மு.இளங்கோவன்
இயக்குநரின் செயல் வடிவத்தின் ஆன்மாவாக இயங்கியிருக்கின்றார்.
தலைவர் பிரபாகரனின் இள வயதுத் தோற்றம் கொண்ட பாத்திரம், தந்தை செல்வா, பண்டாரநாயக்கா என்று நிஜங்களோடு ஓரளவு பொருந்திப் போன முகச் சாயல்கள். அது மட்டும் போதாதென்று இந்தப் படைப்பில் பயணித்த அனைவருமே நாடகத் தன்மை விலத்திய யதார்த்த நடிப்புக்காரர்களாகவே தொனிக்கிறார்கள். அவர்களுக்கான ஒலிப்பதிவு கச்சிதம்.
தெருக்கூத்து ராஜவேல், பெருமாள் ஆகியோரின் பாடலும், கதையாடலும் நெகிழ்வும், வீறாப்புமாகச் சிதறிப் பதிகின்றன.
பாடல்கள் ஒவ்வொரு முக்கிய திருப்பங்களிலும் கைலாகு கொடுத்து அழைத்துப் போகின்றன.
எங்கள் தமிழீழத் தேசியக் கவி புதுவை இரத்தினதுரை இதைப் பாத்திருந்தால் எவ்வளவு நெகிழ்ந்துருகியிருப்பார் என்னுமாற் போல அவரினதும், தமிழ்த் திரு திருக்குமரன், இயக்குநர் தி.கிட்டு ஆகியோரின் பாடல்கள் பதித்த இடங்கள்.
நீள் காட்சிகள் கொண்டு வரும் தாக்கத்தை ஒரு சில நிமிடப் பாடலே விதைக்கிறது.
“தமிழுக்கு அமுதென்று பேர்” என்று வரும் அந்த மாநாட்டுப் பாடலில் தான் என்னவொரு ஆர்ப்பரிப்பும், எழுச்சியும். இசையமைப்பாளர் அ.பிரவீன்குமார் மிகக் கச்சிதமான தேர்வு.
எந்தவித வெத்துவேட்டு சினிமாத்தன, நாயகத்தனம் இல்லை,
பேச்சு வழக்கு, உச்சரிப்பில் முக்கிய பாத்திரங்கள் சமரசமில்லால் இயங்குகின்ற விதத்தில் பயிற்றப்பட்டிருக்கின்றார்கள் இல்லையில்லை “வாழ்ந்திருக்கின்றார்கள்”.
“பயம் ஒன்று மட்டுமே அடிமைத்தனத்தை
இன்னொருவர் மனதில் ஆழமாய்ப் பதியச் செய்யும்”
அந்தப் புத்த பிக்கு சொல்லும் பேச்சு ஓருதாரணம் இந்தப் படத்தில் வசனப் பங்களிப்பின் நேர்த்தியும், கூர்மையும். இக்குறிப்பிட்ட வசனம் தானே பின்னால் நாம் கண்ட வரலாற்றின் போதனை?
ஈழத் தமிழர் பிரச்சனையைக் கையாண்ட ஈழப் படைப்பாளிகளின் நேரடிப் படங்கள் தவிர்ந்த படைப்புகள் இதுவரை
1. அதீத உணர்ச்சிப் போக்குக் கொடுத்து அடிப்படைக் கருத்தை வலுவிழக்க வைத்ததாக (காற்றுக்கென்ன வேலி),
2. குழம்பிய குட்டையில் மீன் பிடித்ததாகவும் (ஏராளம் படங்கள்),
3. இன ஒடுக்கலைத் திரிவுபடுத்திய புனைவுகளாகவும்,
4. புலம் பெயர் வியாபாரச் சரக்குக்கு ஊறுகாயாகவும் (இன்னும் ஏராளம்),
இருக்கும் சூழலில் ஈழப் பிரச்சனைக்கான கச்சிதமான ஊடகப் பரிமாணத்தின் விதைத் தமிழகத்தார் துணையோடு கொடுத்த படம் என்ற வகையில் “மேதமை” தான் தொடக்கப் புள்ளி.
கோடி கோடியாய்க் கொட்டவில்லை, அதீத உணர்ச்சிக் கொட்டல் இல்லை, ஆனால் பெரும் தாக்கம் கொடுக்கிறது இப்படம்,
தமிழாராய்ச்சி மாநாட்டில் கட்டவிழ்த்த ஆயுதப் படைகளின் அடக்குமுறைச் செய்தி பறையும் காட்சியில் தந்தை செல்வாவுக்குப் பின்னால் காந்தி படம் தொங்கிக் கொண்டிருக்கின்றது.
வன்முறை எம் மீது திணிக்கப்பட்டது என்பதைத் தலைவர் சொன்னதைத் தான் படமும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“மேதகு” படைத்த இயக்குநர் தி.கிட்டு (எழுத்து & இயக்கம்) வழி சமைத்த தமிழீழத் திரைக்களம் உங்கள் பணி மிகவும் பெறுமதியானது, நேர்மையின் விதை இது.
வரலாற்று எனது வழிகாட்டி என்றார்
“மேதகு” வே.பிரபாகரன்
நம் தலைவரின் தொடக்க வரலாறின்
வழிகாட்டி நிற்கின்றது “மேதகு”
“மேதகு”திரைப்படத்தைக் காண
,
BSvalue app
android
https://play.google.com/store/apps/details?id=com.gridsandguides.blacksheepvalue
iOS
https://apps.apple.com/us/app/bs-value/id1537233387
இணையத் தளம் வழி
https://bsvalue.com/auth?fromActivate=false
#மேதகு
#Methagu_in_Bsvalue
கானா பிரபா
]]>
தமிழ் மக்களாகிய எமது விடுதலைக்கான இலக்கு நோக்கிய பயணத்தில் தம் இன்னுயிர்களை இனத்துக்காய் ஈகம்செய்த மாவீரர்களைப் போற்றும் முகம்மாக “முகடு படைப்பகம்””மாவீரர் போற்றி அகவல் 108″என்னும் போற்றி பாமாலையை 23-11-2020 அன்று வெளியிடுகின்றது.பாமாலை மாவீரர் நாள் நிகழ்வுளிலும் வீடுகளிலும் மக்கள் நேரடியாக பயன்படுத்தமுடியுமென்றும்.விற்பனை நோக்கில் யாரேனும் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதையும்.பாடலின் உரிமம் முகடுபடைப்பகத்திற்குரியது என்பதை அறியத்தருகின்றோம்.
அத்தோடு பாடலின் பங்காளர்களுக்கு முகடுபடைப்பகம் வாழ்துக்களை தெரிவித்துகொள்கின்றது.
“முகடு” படைப்பகத்தின்
“மாவீரர் போற்றி அகவல்108”
இசை-உமா சதீஸ்
பாடியவர்-ராகுல்
வரிகள்
ப.பார்தீ 1-40,81-108
யோகு அருணகிரி 41-60
வாகைக்காட்டான் 61-80
ஒளித்தொகுப்பு -சங்கர்
நிதிக் கொடையாளர்
துரை உமாதரன்
புலம்பெயர் வாழ்வை அச்சு பிசகாமல் நேர்த்தியாக மிக மிக யதார்த்தமாக அழகாக திரையில் பேசும் ஒரு படைப்பை பிரன்சு மண்ணில் நேற்று பார்த்த சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சி..
ஈழ சினிமாவில் ஏணை இயக்குனர் அஜந்தன் தன்னை தவிர்த்து இனி ஈழ சினிமா இல்லை என்னும் ஒரு செய்தியை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்…
ஈழத்துக்கும் புலத்துக்குமான தொடர்பு உறவுகளின் பிணைப்பு என்பது என்ன என ஒரு காட்சியில் இவ்வளவு ஆழமாக சொல்லி விட முடியுமா என பிரமிக்க வைக்கிறது…
படதில் வரும் பாடல்கள் அட டா அற்புதம் காட்சியும் பாடலும் பேசப்படும் கண்டிப்பாக..
மொழி,நடை உடை பாவனை என ஈழ தமிழர் வாழ்வை அப்படியே அள்ளி எடுத்து ஏணையில் போட்டு தாலாட்டி விட்டிருக்கும் இயக்குனர் சக நடிகர்கள் படக்குழுவிற்கு மனம் நிறைத்த வாழ்த்துகள்.
https://youtu.be/TJRiPdHkpwM
#ஏணை சுகமா தாலாட்டு ?
]]>
]]>
கொரோனா வைரஸ் பெருந்தொற்று மானிடசமூகத்தினை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள இக்கட்டான இத்தருணத்தில், ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுச் சென்றார் என்ற துயரமான செய்தியினை அறியத்தருகின்றோம்.
கடந்த சில நாட்களாக மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐயா அவர்கள், இன்று மதியம் 14மணியளவில் உயிர்பிரித்தார் என்ற செய்தி மருத்துமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவதிலும் தன்னை இளைஞராக மனங்கொண்டு உறுதியுடனும், துடிப்புடனும் நமக்கெல்லாம் வழிகாட்டி நின்ற மூத்தமரம் சாய்ந்தது கண்டு அனைவரும் ஆறாப்பெருந்துயரில் நிற்கின்றறோம்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிகருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தோழமையோடு நாம் அனைவரும் துனை நிற்போம்.
நன்றி
LIFT
ஈழத்தமிழர் திரைப்பட சங்கம்
]]>