//anjeng
சிங்கள இராணுவமும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும் செய்த உடும்பன்குள படுகொலைகள்.

ஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில் கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதேவேளை வெட்டியும் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் எரித்தும் கொன்றுள்ளனர்
இந்தவகையில்பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலத்தை கிழக்க மாகாணம் கண்டிருக்கிறது.
இக்கிராமமானது வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் அமையப் பெற்ற அழகிய கிராமமாகும்.
இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களும் சிங்கள இராணுவத்தினரின் கொடூரங்களுக்குள் இருந்து தப்பமுடியாமல் சிறிலங்கா இராணுவத்தினராலும் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் 130க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1986ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 19ம் திகதி அம்பாறை மாவட்டம் உடம்பன்குளத்திலுள்ள மலையடிவார வயல்களில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் சென்ற சிறீலங்கா இராணுவத்தினரும் இஸ்லாமிய ஊர்காவல்படையினரும் சுற்றிவழைத்து கைது செய்து ஆண் பெண் குழந்தைகள் என்ற பேதமின்றி கூட்டுப்படுகொலை செய்தனர்.
இங்கு பிடிக்கப்பட்ட ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொடூரமாக சித்தரவதை செய்து படுகொலை செய்தனர். பெண்களை கூட்டாக பாலுறவுக்குட்படுத்தி படுகொலை செய்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறீலங்கா படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த பலர் உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் 21.02.1986 அன்று வணபிதா சந்திரா பெர்ணான்டோவின் இதலைமையில் அங்கு சென்று குழுவினர் அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள்.
இந்த சம்பவத்தில் 130க்கும் அதிகமானோர் படுகொலை செய்ப்பட்டிருந்தனர்
இந்த இனப்படுகொலைத் தாக்குதலுக்கு சிறீலங்கா இராணுவத்தின் லெப்டினன்ட் சந்திரபால என்பவர் தலைமை தாங்கியதாகவும் .
முஸ்லீம் ஊர்காவல் படையை சேர்ந்த 12 பேர் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
]]>தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும்.
எந்த மொழியின் பெயரால் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின் பெயரால் அதே தமிழர்கள் எழுச்சியடைந்தர்களோ அந்த மொழியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் மூர்க்கத்தனமான ஓர்மத்தினைக் கொண்டிருந்தார்கள்.
போர்க்களமும் பங்கர் வாழ்க்கையும் மட்டும் தமது குறிக்கோளை எட்டிவிடுவதற்கு துணை நிற்கப்போவதில்லை என்பதை விடுதலைப் புலிகள் நன்குணர்ந்திருக்கவேண்டும்.
அதனால்தான் அவற்றிற்கும் மேலாக நீதி நிர்வாகக் கட்டமைப்புக்களோடு மொழிக்காப்பு நடவடிக்கையிலும் சமபங்கு அளவுக்கு இறங்கினார்கள்.
விடுதலைப் புலிகளின் தமிழ் மொழி முக்கியத்துவம் எங்கு ஆரம்பிக்கின்றதெனில், அவர்கள் தமது அமைப்பிற்கு சூட்டிய பெயரிலும் உறுப்பினர்களுக்கு சூட்டிய இயக்கப் பெயர்களுமே. தூய தமிழ்ச் சொற்களைத் தேடிப்பிடித்து போராளிகளுக்கு சூட்டுவதில் முன்னின்று செயற்பட்டார்கள்.
தமிழை வளர்ப்பதற்கென்று தனியான ஒரு துறையினை தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற பெயரில் நிறுவினார்கள்.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தினூடாக தமிழர்களுக்கு வைக்கப்பட்ட வேற்றுமொழிப் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் தூய தமிழ் பெயர்கள் பல்லாயிரக்கணக்கில் பரிந்துரைக்கப்பட்டன.
விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் தமிழில் புதிய கலைச் சொற்களை ஆக்குவதில் முன்னின்று பாடுபட்டது. இன்று இந்தியா, மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் அறிஞர்களால் உருவாக்கப்படும் கலைச் சொல் உருவாக்க ஆர்வத்துக்கு முன்னோடிகளாய் வித்திட்டவர்கள் விடுதலைப் புலிகள்தான்.
தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய கலைச் சொற்களின் சில பட்டியலை இங்கு காரணத்துடன் இணைக்கின்றோம்.
காவல்துறை-பொலிஸ்
பொலிஸார் சட்டம் ஒழுங்கு என்பவற்றின் காவலர்களாக இருப்பதனால் முதலில் காவலர்கள் என்றும் காவல்காரர் என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால் அரசாங்கத்தின்கீழ் அவர்கள் ஒரு தனித் துறையினாராக இருப்பதனால் ஏனைய காவல்காரர்களிடமிருந்து வகைபிரிக்கவேண்டிய தேவை இருந்தது. இதனால் காவல்துறை என்று தூய தமிழில் கலைச் சொல் இடப்பட்டது.

வெதுப்பகம்-பேக்கரி
பாண் முதலான பேக்கரி உற்பத்திகள் நெருப்பு வெக்கையில் வெதுப்பப்படுவதனால் அதற்கு வெதுப்பகம் என்றே தூய தமிழில் கலைச் சொல் இட்டனர்.
வெதுப்பி-பாண்
வெக்கையில் வெதுப்பப்படுவதனால் வெதுப்பி என தூய தமிழில் கலைச்சொல் இட்டார்கள்.
குதப்பி-கேக்
கேக் உற்பத்திச் செய்முறையானது குதப்பிக் குதப்பி செய்யப்படுவதனால் குதப்பி என தூய தமிழில் கலைச்சொல் இட்டார்கள்.
குளிர்களி-ஐஸ்கிறீம்

குளிர்சார்ந்த ஒரு களியாக காணப்படுவதால் குளிர்களி என்றே தூய தமிழில் கலைச்சொல் இட்டார்கள்.
தரையில் ஓடும் வாகனங்களுக்கு தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கினார்கள்.
வாகனங்கள் மோட்டார் பொறிமுறையில் இயக்கப்படுவதனால் மோட்டாருக்கு உந்து என்ற தூய தமிழ்ச் சொல்லினை சூட்டியதுடன் அந்த மோட்டாருடன் இணைந்ததாக வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப தரம்பிரித்து கலைச்சொல் சூட்டினார்கள்.
பேருந்து-பஸ்
சிற்றுந்து-மினிபஸ், வான்
மகிழுந்து-கார் (மகிழ்ச்சியான உணர்வைக் கொடுப்பதால் மகிழுந்து)
பாரவுந்து/கனவுந்து-லொறி
தொடருந்து-ரயில்/புகையிரதம் (புகையிரதம் தமிழ் சொல் இல்லை. இதிலுள்ள இரதம் என்பது வடமொழி)
போருந்து-டாங்கி
உந்துருளி-மோட்டார் சைக்கிள்
நீருந்து-எஞ்ஜின் படகுகள்
ஈருருளி-சைக்கிள்

இவற்றினை ஓட்டுபவர்களை சாரதி என்று வடமொழியில் கையாளாமல் ஓட்டுநர்கள் என அழைத்தார்கள்.
வானத்தில் விமானத் தொழி நுட்பத்தில் பறப்பனவற்றுக்கு ஊர்தி என பெயர் வைத்தார்கள்.
விமானம்-வானூர்தி (விமானம் வடமொழிச் சொல்லாகும்)
கெலிஹொப்டர்-உலங்கு வானுர்தி (உலங்கு என்றால் காற்றாடி என்பதற்குரிய சொல்)
விமானம் செலுத்துபவர்களை விமானிகள் என்று வடமொழியில் கூறும் வழக்கமே இருந்தது. ஆனால் அதற்கு தூய தமிழில் வானோடிகள் என்று கலைச் சொல் இட்டார்கள். அதேபோல் விமானத்தளங்களை வானூர்தித் தளம் என்று அழைத்தார்கள்.

இவற்றைவிட தொழில் நிலையங்களுக்கு பணிமனைகள் என்றும், வங்கிக்கு வைப்பகம் என்றும், பிரிவுத் தலைவர்களுக்கு பொறுப்பாளர்கள் என்றும் கையாண்டு அவற்றினைப் பாவனையில் கொண்டுவந்தார்கள் விடுதலைப் புலிகள்.
தூய தமிழில் கலைச் சொற்களை மேலும் அறியவேண்டுமெனில் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைச்சொற்கள் பட்டியலில் காணலாம்.
]]>இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட பொதுமக்களின் அசையும் சொத்துக்கள் தொடர்பான புகைப்படங்கள் சில இன்று வெளியாகியுள்ளது.
தனிநபர் ஒருவரின் புகைப்படக்கருவி ஒன்று மறுசீரமைக்கப்பட்ட போதே குறித்த புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009 இறுதி யுத்தத்தின்போது இலங்கை முப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உக்கிரச்சமர் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்காண பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது.
அத்துடன் பொதுமக்களின் அசையும் சொத்து , அசையா சொத்துக்கள் என அனைத்தும் அழித்து நாசமாக்கப்பட்டதுடன் பொதுமக்கள் நிர்க்கதியான நிலையில் அகதியாக்கப்பட்டனர்.
இவ்வாறு யுத்தத்தினால் அழிவடைந்த பொதுமக்களின் பெறுமதியான அசையும் சொத்துக்கள் தொடர்பான புகைப்படங்கள் காலம் கடந்த நிலையிலும் இன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் பன்னிரெண்டு வருடங்களாகின்றது.
நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக் கொண்டேயிருக்கின்றது.
நினைவழியா நிமல்….
நண்பன் மயில்வாகனம் நிமலராஜனின் 12 வது ஆண்டு நினைவுகளை(19-10-2012) முன்னிறுத்தி…..நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பின் வெளியீடு
நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் பன்னிரெண்டு வருடங்களாகின்றது. நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக் கொண்டேயிருக்கின்றது.

கிராமங்கள், நகரங்களென அவன் பணி நிமித்தம் ஓடித்திரிந்த பகுதிகளெல்லாம் வெறிச்சோடிப்போயிருப்பது போன்றதோர் மனப்பிரம்மை.
யாழ். குடாநாட்டினில் பத்திரிகை துறையினில் சுயாதீன ஊடகவியலாளனாக பரிணமித்தவர்களுள் நிமலராஜன் முதன்மையானவவராகின்றார். ஒரே நேரத்தினில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் கால்பதிக்க நிமலராஜனால் மட்டுமே அப்போது முடிந்தது.
அதிலும் மும்மொழிகளிலும் அவன் கொண்டிருந்த புலமை அனைத்து தரப்புக்களிடையேயும் சிறந்ததொரு தொடர்பாடலை பேண சாதகமாயும் போயிருந்தது.
அதனாலேயே அவனால் தமிழ் ஊடங்களுக்கு இணையாக சிங்கள ஊடகங்களிலும் பெரிதும் காலூன்ற முடிந்திருந்தது.
பிபிசி தமிழோசையிலும் அதே நேரம் சிங்கள சேவையான “சந்தேசிய”விலும் நிமலராஜனின் குரல் எதிரொலித்தது. வீரகேசரி வார வெளியீட்டிலும் மறுபுறத்தே ராவய, ,ரித, ஹரய என அவனால் எழுத முடிந்தது. மறுபுறத்தே சூரியன், ஐ.பி.சி. தமிழ் நெற் என நிமலராஜன் இல்லாத ஊடகங்களே இல்லையென்றாகிவிட்டிருந்த காலமது.
புலம்பெயர் தேசங்களின் கீதவாணி வரை நிமலராஜனின் குரலை எதிர்பார்த்து தமிழ் நேயர்கள் காத்திருந்தார்கள்.
நிமலராஜன் ஊடக்துறைக்கு வந்து சேர்ந்தது தற்செலானதே. சிலர் தம்மைபற்றிக் கூறிக்கொள்வது போன்று நிமலராஜன் ஒன்றும் ஊடகவியலாளனாக பிறக்கும் போது இரட்சித்து அனுப்பப்பட்டிருக்கவில்லை.
நிமலராஜனின் தந்தையார் குறித்த காலப்பகுதியினில் முரசொலியினில் அச்சிடல் பகுதியினில் முகாமையளராக இருந்திருந்தார்.
வீட்டினில் படித்துவிட்டு “சும்மா” இருந்த மகனை ஏதாவது செய்யட்டும் என்று நாளிதழ் விநியோகப் பகுதியினுள் அவரே இணைத்துமிருந்தார்.
இந்திய அமைதிப் படையினதும், துணைக்குழுக்களினதும் கொலைக்கரங்கள் வியாபித்திருந்த காலமது.
நாளிதழ் விநியோகத்திற்காக கிராமம் கிராமமாக அலைந்த நிமலராஜன் மக்களை நேரினில் சந்திக்கின்றவனொருவனான்.
அவன் கொண்டுவந்து சேர்த்த செய்திகள் பெரும்பாலும் நாளிதழ்களினில் தலைப்புச் செய்திகளாகவோ, சிறப்புச் செய்திகளாகவோ பலவேளைகளினில் ஆகியிருந்தது.
திறமையைத் துல்லியமாகப் புரிந்துகொண்ட முரசொலி ஆசிரியர் திருச்செல்வம் நிமலராஜனை ஆசிரிய பீடத்தினுள் உள்ளீர்த்துக் கொண்டார். தமிழ் தேசிய ஊடகத்துறையின் ஓர் முகவரியாக அவன் மாறிப்போக அதுவே வழிகோலியிருந்தது.
குடாநாடு விடுதலைப் புலிகளின் முழமையான கைகளிலிருந்த காலப்பகுதிகளில் அதன் ஆசிரியர்களாகவிருந்த ராதேயனும், ஜெயராஜீம்; அவனைச் செம்மைப்டுத்திக் கொண்டார்கள்.
அன்றாடம் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் நிமலராஜன் ஆழமான புரிதல்கள் கொண்டவனாக பரிணமிக்க அதுவே சந்தர்ப்பமுமாகியிருந்தது.
விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் குடாநாடு இருந்த காலப்பகுதியினில் வெளியிடங்களுக்கான தகவல் தொடர்பாடல் பெரிதும் தடைப்பட்டேயிருந்தது. யாழ்ப்பாணத்தினில் என்ன நடக்கின்றது என்பதனை கண்டறிய முழு உலகமுமே ஆவல் கொண்டிருந்தது.
புலிகள் குடாநாட்டிலிருந்து வெளியேறியிருந்த 1996ம் ஆண்டின் பின்னரான காலப்பகுதிகளிலேயே வெளியுலக தேடல்கள் காரணமாக நிமலராஜன் ஓய்வற்றதோர் ஊடகவியலாளனாகிப் போயிருந்தான்.
அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆசை வார்த்தைகளை நம்பி வலிகாமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த மக்கள் வடிகட்டப்பட்டு நாவற்குழியில் வைத்துக் காணாமற் போக செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளை விட்டுவிடக்கோரி அங்கே அழுது கொண்டிருந்த தாய்மாரைத் தாண்டியே அனைவரும் யாழ்ப்பாணம் வந்தடைந்திருந்தோம்.
அப்போது காணாமல் போனவர்களின் கதைகளை தேடிக்கண்டறிந்து சர்வதேசத்திற்கு கொண்டு சென்றவன் நிமலராஜனே.
செம்மணிப் படுகொலைகள், கிருஷாந்தி குமாராமி உள்ளிட்ட அவளது குடும்பத்தவர்களது படுகொலைகளையும் துணை ஆயதக்குழக்களது கோர முகங்களென தோலுரித்துக் காட்டியவன் நிமலராஜனே.
யாருமே சென்று திரும்ப மறுத்த தீவகப்பகுதிக்கு தேடிச்செல்ல அவன் கொண்டிருந்த ஆர்வம் அசாதாரணமானது.
1999ம் ஆண்டின் இறுதிகளில் பளை மற்றும் அதனையண்டிய பகுதிகளினில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்குமிடையேயான மோதல்களுள் சிக்குண்டிருந்த பொதுமக்களது அவலங்களைச் சொன்னவனும் நிமலராஜனே.
துணிச்சலுடன் சிக்குண்டிருந்த பொதுமக்களை மீட்டெடுக்க நிமலராஜன் மேற்கொண்ட உயிரைப் பணயம் வைத்தான பயணம் எவராலும் மறக்க முடியாதவொன்றே.
பரந்துபட்ட தளத்தினில் நேரமின்றிப் பணியாற்றிய ஊடகவியலாளனாக நிமலராஜன் இருந்தபோதிலும், மறுபுறத்தே எல்லையற்ற மனித நேயம் கொண்டவனாகவும் அவன் இருந்திருந்தான்.
காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் சிலரது குழந்தைகளை பொறுப்பேற்று அவர்களுக்கான கல்வி உதவிகளை வழங்கினான். தன்னுடன் தொடர்புபட்ட அனைவரையும் அவ்வாறான பணிகளில் ஈடுபட ஊக்குவித்தான்.
நிமலராஜனின் மரணம் பத்தோடு பதினொன்றல்ல. தமிழ் தேசிய ஊடகங்ளின் முகவரியொன்று இல்லாதொழிக்கப்பட்டதே மையமாகியிருந்தது.
ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அக்காலப்பகுதியினிலம் அவனது இறுதி ஊர்வலத்தினில் திரண்டிருந்த மக்களும், படுகொலையைக் கண்டித்து நடாத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களது ஆர்ப்பாட்டப் பேரணியும் உண்மையை சொல்லி நின்றன.
எவன் தான் சார்ந்த மக்களை நேசித்து நிற்கின்றானோ அவனை சமூகம் கைவிடுவதில்லையென்பது மீண்டுமொரு முறை துல்லியமாக வெளிப்பட்டு நின்றது.
மரணங்கள் மூலம் உண்மைகளை மறைத்து மூடிவிட முடியாது என்பதும் வெளிப்பட்டேயிருந்தது.
நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் கடந்து விட்டபோது, இழுத்து மூடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுவிட்ட, விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு நாம் கோரப்போவதில்லை.
இந்நாட்டினில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் எவர்களுக்குமே நீதி கிடைக்காதென்பது அனைவரும் அறிந்ததே.
ஆனாலும் கொலையாளிகளதும் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள நாடகமாடிய கறுப்பு ஆடுகளதும் மனது என்றுமே அமைதி கொள்ளப்போவதில்லை.

ஏனெனில் நிமலராஜனைப் படுகொலை செய்ததன் மூலம் அனைத்தையும் முடக்கிவிடலாமென நினைத்திருந்த அவர்களது கனவுகள் பொய்த்தப் போயேயுள்ளன.
ஏனெனில் அவனை முன்னுதாரணமாக கொண்டு நூறு நூறாக ஊடகவியலாளர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே மெய்மையாகும்.
]]>