//anjeng
பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை .
உண்மையில் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்( கார்த்திகைப்பூ) செடிகளும் , கொடிகளால் ஆன குடில்களும் ,வாழை, அன்னாசி,மரவள்ளி,தென்னை என பல வகை மரங்களாலும் சூழ்ந்த அழகிய இடமாகவே காணப்படும்.

அவரது படுக்கை அறையிலே ஒரு வேப்பமரப்பலகையினால் செய்யப்பட்ட கட்டிலும் ,பழைய துவாய் ஒன்றும், ஒரு சிறிய தலையணையும் , விரித்துப் படுக்க பழைய சாரம் ஒன்றும்,பின் பாய் ஒன்றும் இருக்கும்.
அவருடைய உடை வைக்கும் மர அலுமாரியில் 3 சோடி வரிச்சீருடை, சாரம்,ரீசேட்,சாதாரண சேட்டும் ,நீளக்காற்சட்டை, காலுறைகள் மட்டுமே இருக்கும். எப்போதும் எளிமையாகவே இருப்பார்.
வன்னியிலே இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த காலம். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை எறிகணை வலுவான யுத்தம் இடம்பெற்று வந்த காலம். அப்போது வன்னி கிழக்கு , வன்னி மேற்கு என இரண்டாக ஆளுகைப் பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தது .
அக்காலப்பகுதியில் தமிழ்மொழி பற்றியும், தமிழர் வரலாறு பற்றியும் போராளிகளுக்கு பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் இரு பகுதிகளாகப் பிரித்து வகுப்பு எடுத்து வந்தார்.
அதுமட்டுமல்ல வாணிப நிலையங்களுக்கு தமிழ் பெயர் மாற்றத்தில் தொடங்கி குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டும் பணி வரை அதிமுக்கியத்துவம் செயற்பட்டார்
பின் 21ஆயிரம் தமிழ் பெயர் கொண்ட பொத்தகம் ஒன்றை பண்டிதர் பரந்தாமனின் உதவியுடன் எழுதி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 10 ஆயிரம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் மாற்றம் செய்யும் வேலையை வெற்றி கரமாக செய்து முடித்தார்.
இப் பெயர் மாற்றம் பணியில் மாவீரர் லெப்.கேணல் இளவாணனும் பெரும்பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய தொன்றாகும்.
தமிழீழ நிழலரசின் கட்டு மானங்களில் நிதி சார்ந்த கட்டுமானங்கள் அனைத்தையும் மிக நீண்ட கால நோக்குடன் செம்மையாக உருவாக்கினார். பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் சந்திப்பு ( கூட்டம்) என்றால் உரிய நேரத்திற்குள் மண்டபத்திற்குள் சென்று இருக்க வேண்டும்.
ஏனென்றால் சரியான நேரத்திற்கு சந்திப்புத் தொடங்கி விடும். இரண்டு நிமிடம் தாமதமானாலும் உள்நுழைய முடியாது. நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பொறுப்பாளர்களில் பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் முதன்மையானவர்.
பிரிகேடியர் தமிழேந்தி அவர்களினால் உருவாக்கப்பட்ட பண்ணைகள் ( தோட்டம்) அனைத்தும் பிரமாண்டமானவை. அப்பண்ணைகளில் பழமரக்கன்றுகளைப் பார்க்க ஆசையாக இருக்கும். அதில் மாமரம் என்றால் மாமரத்தில் எத்தனை வகைகள் இருக்குமோ அத்தனையும் அங்கு இருக்கும்.
மரங்கள் பூத்துக் காய்க்கும் காலத்தில் இருந்த காலம் அப்போது நான் ஏன் பழமரங்களை தேர்ந்தெடுத்து நிறைய வைத்திருக்கின்றேன் என்றால் கள முனைகளில் நிற்கும் போராளிகள் அனைவருக்கும் தொடர்ச்சியாக பழங்களை அனுப்பவேண்டும் என்பதற்காகத்தான் என பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் அடிக்கடி கூறுவதை கேட்டிருக்கிறோம். அவருக்கு எப்போதும் களமுனைகளில் நிற்கும் போராளிகளின் நினைப்புத்தான்.
தமிழீழ நிதிப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் சிறப்பியல்புகளில் எளினம்,உண்மை, நேர்மை, கடமை, நேரம் என்பவற்றை பார்க்கலாம்.
இதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே யாருக்கும் கொடுக்காத பொறுப்பு ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களுக்கு கொடுத்தார் என்றால் மிகையில்லை .

முதன் முதலாக படைத்துறை செயலர் என்னும் பொறுப்பு பிரிகேடியர் தமிழேந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே அவரது உண்மைக்கும் ,நேர்மைக்கும் கிடைத்த பரிசாகும்.
]]>இன்று எமது தமிழினத்தின் வரலாற்றில் முக்கியமான நாள் பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இரவு உலகையே வியக்க வைத்த வான்புலிகளின் உருவாக்கத்தின் முதன்மை நாயகர்களாக தங்களை அர்ப்பணித்து பலம் சேர்த்திருந்து சிறீலங்கா அரசுக்கு பேரதிர்ச்சியை வானில் விமானத்துடன் வான் புலிகளாய் தோன்றிய வான் கரும்புலி கேணல் ரூபன் வான்கரும்புலி லெப்கேணல் சிரித்திரன் ஆகியோர் வீரச்சாவடைந்த நாள்
அவர்கள் வீரச்சாவடைந்த பொழுதுகள் முக்கியமானவை சிறீலங்கா அரசாங்கமும் ஏனைய வல்லாதிக்கங்களும் இணைந்து தமிழர்களை முள்ளிவாய்க்கால் நோக்கிய கொலைக்களத்திற்கு தள்ளிக்கொண்டு சென்ற பெரும்போர் நடந்த வேளையில் இந்த இரண்டு வான்கரும்புலிகளும் தலைவனின் நம்பிக்கைக்கு தோள்கொடுத்து தலைவர் பிரபாகரனின் நாக அஸ்திரமாக வானேறி சிறீலங்காவின் தலைநகருக்குள் புகுந்து சிங்கள தேசத்தை நிலைகுலையவைத்திருந்தனர்.
எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் புலிகளின் மகிச்சிறந்த ஆயுதம் எதுவெனில் அது அவர்களின் மனோபலம்.
அந்த மனோபலத்தின் உச்சங்களாக இந்த இரண்டு வான்கரும்புலிகளும் இதே நாள் தாயக மண்ணில் இருந்து சென்று பகைவன் கோட்டைக்குள் முழங்கி தம்மை தாயகவிடுதலைக்காய் அர்ப்பணித்தனர்.










தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல் பொன்னம்மான். 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் தைடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 11போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
1956ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் யாழ்ப்பணம் கலட்டியில் குடும்பத்தில் மூன்றாவது ஆண்மகனாக யோகேந்திரன் குகன் என்ற பெயருடன் உதித்தார். சிறுவயதில் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். கருவில் இருக்கும் பிள்ளையைக் கூட அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கொடுமைக்குள் இவரது குடும்பமும் மிஞ்சவில்லை.
1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் இவரது தந்தை மிகக் கொடுமையாக சிங்கள இனவெறி பிடித்தவர்களால் தாக்கப்பட்டார். அடித்து அவரைக் குற்றுயிராய் போட்டார்கள். தமிழ் மக்கள் தொடர்ந்து சிங்களவர்களால் தாக்கப்பட்டமை பொன்னம்மானைப போராடத்தூண்டியது.
சிங்கள ஆட்சியாளர்களின் தமிழ் மாணவர்கள் மீதான தரப்படுத்தல், அடக்குமுறைகள் மாணவர்களின் கல்வியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழ் மாணவர்களுக்கான முன்னுரிமைகள் எல்லாம் புறம் தள்ளி விடப்பட்டபோது. ஒவ்வொரு இளம் துடிப்பு மிக்க இளைஞர்களின் வாழ்வும் சீரழியத் தொடங்கியது.
லெப்.கேணல் பொன்னம்மான் அவர்களின் வாழ்வும் விதிவிலக்காக அமைந்து விடவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரே வழி தமிழ்மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும். அதற்காகப் போராட வே ண்டும் என்பதை தெளிவாக பொன்னம்மான் புரிந்து கொண்டார்.
கல்வியிலும் சரி விளையாட்டுக்களிலும் சரி மிகவும் துடிப்போடும், எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணமுள்ள பொன்னம்மான் அரசின் ஒடுக்குமறைக்கு எதிராக அவ்வப்போது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தார்.
1978ஆம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரை சந்தித்த பொன்னம்மான் தொடர்ந்து விடுதலைப்போராட்டத்தின் ஆதரவாளராக இருந்து பின்பு முழு நேரப்போராளியாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.
விடுதலைப்புலிகளிடம் ஆயுதப்பற்றாக்குறை இருந்த காலத்தில் வெடிகுண்டுகள் செய்வதில் பெரிதும் உழைத்தவர் பொன்னம்மான். பலவெடிகுண்டுகளை செய்தும், பல கண்ணிவெடிகளைத் தயாரித்தும் எதிரிகளை கலங்கடித்தார்.
தமிழீழ தேசியத்தலைவருடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டார்.
விடுதலைப் புலிகளின் பெரும் வளர்ச்சிப் போக்கில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தாக்குதலாக அமைந்த 1983ஆம் ஆண்டு யூலை 23நாள் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட சிறிலங்கா இராணுவ ரக் மீதான தாக்குலில் 13சிங்களப் படைகள் கொல்லப்பட்டதிலும்.
காரைநகர் கடற்படைத்தளம் மீதான தாக்குதல்களிலும், பரந்தன் உமையாள்புரத்தில் சிறிலங்கா இராணுவ வாகனம் மீதான கண்ணி வெடித்தாக்குதலிலும் பொன்னம்மான் பங்கு கொண்டார்.
இந்தியா விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி வழங்கிய காலப்பகுதியில் முதல் அணியின் தலைவராக 100பேருடன் இந்தியாவிற்குச் சென்று பயிற்சிகள் எடுத்தார். இதில் தொடச்சியான முறையில் நடந்த பய்றிசிகளில் இவர் போராளிகளுடன் ஒரு முன்னோடியாக இருந்து போராளிகளுக்கு அரவணைப்பை வழங்கினார், போராளிகள் பிழை செய்தால் அவர்கள் உணரும் வகையில் கண்டித்து வளர்த்தார்.
அவர்களுக்கு போராட்டம் பற்றிய சிந்தனைகளை அவர்களுக்கு ஊட்டினார். இந்தியாவிற்குச் சென்ற அணிகள் வரிசையில் 7ஆவது அணி பெண்களின் முதலாவது அணியாகும். இப்பாசறை 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்றது இதையும் இவரே பொறுப்பேற்று வழிநடத்தினார்..
இவ்வாறு இந்தியாவில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு தமிழீழம் வந்தவ போராளிகள் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான் பல தாக்குதல்களை நடாத்தினர்.
பொன்னம்மான் அவர்கள் ஒட்டுவேலைகள் பயின்று வெடிகுண்டுகளுக்கு ஏற்றவாறு வாகனங்களில் வெடிகுண்டுகளைப் பொருத்தி இராணுவ முகாம்மீதான பல தாக்குதல்களுக்கு வழிவகுத்தார்.
இதேபோன்று தான் 1987.பெப்ரவரி 14நாள் தண்ணீர் இழுக்கும் வாகனம் (தண்ணீர் பவுசர்) போன்ற வடிவில் வெடிகுண்டு ஒன்றைத் தயாரித்தார்.
தண்ணீரும், வெடிமருந்துகளும் மேலும் கீழுமாக வைத்து நுட்பாக அதனை உருவாக்கினார். சிறு துவாரத்தினூடே கசியத்தொடங்கியதும், அதனை சீர்செய்யும் போருட்டு ஒட்டு வேலைகளில் பொன்னம்மானும் அவருடன் கூட சில போராளிகளும் இருந்தார்கள்.
அப்போது அங்கு பெரும் வெடி ஓசை கேட்டது. லெப். கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு, வீரவேங்கை யோகேஸ், வீரவேங்கை குமணன், வீரவேங்கை கவர், 2ஆம் லெப். பரன், வீரவேங்கை தேவன், லெப். சித்தார்த்தன், வீரவேங்கை அக்பர் இவர்களுடன் நாட்டுப்பற்றாளர் ரஞ்சன் ஆகியோர் அங்கு நடந்த தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவெய்தினர்.


தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக கொக்குளாய் முகாம் தாக்குதல் நாள் அமைகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசம் அந்த நாளின் பெருமையைத் தாங்கி நிற்கிறது.
நம்மில் பலருக்கு “கொக்குளாய்” என்னும் இடம் தமிழீழத்தில் இருப்பது தெரியாமற்கூட இருக்கலாம். காரணம் 1984ம் ஆண்டிலிருந்து சுமார் 27 ஆண்டுகளாக அந்நிலத்திற்குச் சொந்தக்காரர்களான எமது தமிழ் உறவுகள் அங்கே தமது வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தனர் .
சற்றுப் பின்னோக்கிப் பார்த்தோமானால் சில விடயங்கள் வெட்டவெளிச்சமாகப் புரிந்துவிடும் என்று நம்புகிறேன்.
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் பாதையில் சிலாவத்தை, அளம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்குளாய், புல்மோட்டை ஊடாக திருகோணமலை என்ற வகையில் தமிழரின் பாரம்பரிய வளங்கள் நிறைந்த நிலப்பரப்புகளை நோக்கலாம்.
இப் பிரதேசங்களின் ஒரு பக்கம் இந்து சமுத்திரத்தின் ஒரு பகுதியாகவும் மற்றய பக்கம் மணலாற்றின் பெரிய காடுகளைக் கொண்டதாகவும் நடுவிலே மக்கள் வாழ்விடங்களான மேலே குறிப்பிட்ட பிரதேசங்கள் அமைந்திரப்பதாகவும் இருக்கிறது. இது தவிர நாயாறு மற்றும் கொக்குளாய் நீரேரிகள் அப் பிரதேசங்களின் அழகான அம்சங்களாகவும் விளங்குகின்றன.
கடல்வளம், நெற்பயிர்ச் செய்கைக்கான நிலவளம், தென்னை பனை வளங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்புகள் முல்லை மாணாலாறு மாவட்டமென தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெயர் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில் கொக்குளாய் பற்றி பார்க்குமிடத்து, அது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவே காணப்படுகிறது. காரணம் வடக்கையும் கிழக்கையும் நேரடியாக இணைக்கும் ஒரு இணைப்பு நிலமாக கொக்குளாய் இருப்பதுதான்.
1984ம் ஆண்டுக் காலப்பகுதியில் கொக்குளாய்ப் பாடசாலையில் இலங்கை இராணுவம் பாரிய படைமுகாம் ஒன்றை அமைத்தது மட்டுமல்லாது, கொக்குளாய் தொடக்கம் அளம்பில் வரையிலும் ஒரு படைநடவடிக்கையை மேற்கொண்டு பலவந்தமாக மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றியது.
இதன் மூலம் புலிகளின் தாக்குதல் வீச்சைக் கட்டுப்படுத்தலாம் எனவும் பகற்கனவு கண்டுகொண்டிருந்தது இலங்கை அரசு. இது இவ்வாறிருக்க இடம்பெயர்ந்த மக்கள் அளம்பில் ஐந்தாம் கட்டை, சிலாவத்தை, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு மற்றும் யாழ்பாணம் வரைக்கும் அகதிகளாகச் சென்று தங்குவதற்கு இடமின்றி அல்லல்ப்பட்டனர்.
இருந்தபோதும் முல்லை மணலாறு மாவட்ட மக்கள் திடமான தேசப்பற்றையும் விடுதலை உணர்வையும் விட்டுவிடவில்லை. மாறாக விடுதலைப் புலிப் போராளிகளுக்கு பக்க பலமாக தோளோடு தோள் நின்ற அவர்களது அசாத்தியத் துணிச்சல் என்றென்றும் போற்றத்தக்கது.
கொக்குளாயிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வடக்குக்கிழக்கைத் துண்டாடுவதே கொக்குளாய் முகாம் அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கமாக இருந்தது.
மேலும் விடுதலைப் புலிகளின் கடல்வழி மற்றும் காட்டுவழி நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதும், ஏற்கனவே முல்லைத்தீவின் நகர்ப்பகுதியில் முகாம்மிட்டிருந்த இராணுவத்தினருக்கு பலம் சேர்ப்பதும்கூட காரணங்களாயிருந்தன.
இவ்வேளையில் இறுமாப்போடு முகாமிட்டிருந்த இராணுவத்தினருக்கு தக்கப்பாடத்தைப் புகட்ட வேண்டி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.
இந்தியாவில் பயிற்சிகளை நிறைவு செய்து தாயகம் திரும்பியிருந்த போராளிகளின் அணியொன்றைத் தயார்ப்படுத்தி கொக்குளாய் முகாம் தக்ர்ப்பிற்காக சிறப்புப் பயிற்சிகளை வழங்கி நெறிப்படுத்தினார் தலைவர் அவர்கள். அதுநாள் வரையிலும் கெரில்லாப் போர்முறையினைக் கைக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் முதன்முதலாக மரபுவழியிலே கொக்குளாய் முகாமைத் தாக்கியழிக்க முடிவெடுத்த்தார்கள்.
சரியான முறையில் வேவு பார்க்கப்பட்டு காட்டுவழியாக தாக்குதலுக்கான அணி நகர்த்தப்பட்டது. இன்று மாவீரர்களாகிவிட்ட தளபதிகள், போராளிகள் பலர் அன்றைய அத் தாக்குதலில் களமிறங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லெப். கேணல் புலேந்திரன், பிரிகேடியர் சொர்ணம், கப்டன் ஆனந்தன், கப்டன் லோரன்ஸ், லெப். சபா, லெப். ஜீவன் போன்றோர் இவர்களில் சிலராவர்.
கொக்குளாய் முகாம் தாக்குதலுக்கான வழிகாட்டிகளாகவும், உணவு ஒழுங்கமைப்பாளர்களாகவும், முதலுதவிகளை மேற்கொள்பவர்களாகவும் மக்களே செயற்பட்டனர்.
13.02.1985 அன்று கொக்குளாய் இராணுவத்தினர் எதிர்பாராத ஒரு நிகழ்வாக புலிகளின் தாக்குதல் அமைந்தது. துணிச்சல் மிகுந்த போரளிகள் முகாமிற்குள் நகர்ந்து சண்டையிட்டனர். அங்கே நிலைகொண்டிருந்த 200 வரையிலான படையினரில் பலர் கொல்லப்பட்டதுடன் அதிகளவானோர் காயமடைந்தனர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் 16 புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இதில் ஒரு கவலைக்கிடமான விடயம் என்னவென்றால், அவர்களின் வித்துடல்களை மீட்க முடியாத கள நிலை அங்கு ஏற்பட்டிருந்தது. கொக்குளாய்க் கடல் வழியாக இராணுவத்தினருக்கான உதவிகள் வரத் தொடங்கவே, காயமடைந்த போராளிகளை தோளிலும் கையிலுமாய்த் தாங்கியபடி விடுதலைப் புலிகளின் அணி பின்வாங்கியது.
இத் தாக்குதலானது போராளிகளுக்கு மிகப்பெரியதோர் அனுபவப்பாடத்தைக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையாகாது. அதேவேளை இராணுவம் திகிலடைந்து நிலைகுலைய காரணமாகவும் இத்தாக்குதல் அமைந்தது.
இந்நாளில் நடந்த பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு கொக்குளாய் முகாம் தாக்குதலே முன்னுதாரணமாய்த் திகழ்ந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அன்று தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம்.
லெப்டினன்ட் சைமன்
லெப்டினன்ட் பழசு
வீரவேங்கை கெனடி
வீரவேங்கை காந்தரூபன்
வீரவேங்கை ஜெகன் (இடிஅமீன்)
வீரவேங்கை காந்தி
வீரவேங்கை ரவி
வீரவேங்கை வேதா
வீரவேங்கை ரஞ்சன் மாமா
வீரவேங்கை காத்தான்
வீரவேங்கை மயூரன்
வீரவேங்கை சொனி
வீரவேங்கை தனபாலன்
வீரவேங்கை சங்கரி
வீரவேங்கை மகான்
வீரவேங்கை நிமால்






ஈழத்தமிழர் படுகொலையை 2009ல் நிறுத்த கோரி இதே நாள் ஜெனிவாவில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க தீக்குளித்து தன்னை ஈழ விடுதலைக்கு ஆகுதி ஆக்கிய ஈகை பேரொளி முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஜெனிவாவில் நடை பெற்றது.
முருகதாசன் தன்னை ஆகுதி ஆக்கிய நிலமான ஜெனிவா முருகதாசன் திடலில் புலம் பெயர் உணர்வாளர்கள் ஒன்று கூடி வணக்கம் செலுத்தினர்.





2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரியும், சர்வதேசத்திடம் நீதி கேட்டும் தன்னுயிரை தீயிற்கு இரையாக்கிய தியாகி “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று இலண்டனில் நடைபெற்றது.
வடமேற்கு இலண்டனில் ஹெண்டன் பகுதியில் அமைந்துள்ள அவரதும், 21 தியாகிகள் நினைவாகவும் அமைந்துள்ள நினைவுத் தூபி முன்பாக இன் நிகழ்வு இடம்பெற்றது.
நேற்று (12-02-2019) காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் பிரதான சுடரினை மாவீரர் லெப்ரினன் மலர் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார்.
ஈகப்பேரொளி முருகதாசனுக்கான ஈகச்சுடரினை மாவீரர் லெப்ரினன் சந்திரன் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அடுத்து 21 தியாகிகளுக்குமான ஈகச்சுடரினை மாவீரர் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் உறவினர் ஏற்றிவைத்தார்.
பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. மலர் அஞ்சலியை மாவீரர் லெப்ரினன் பரந்தாமன் அவர்களின் உறவினர் அங்கையற்கன்னியும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளரும், தமிழ் உணர்வாளருமான சுமதி அம்மா அவர்களும் இணைந்து ஆரம்பித்துவைக்க மக்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக சென்று சுடரேற்றி தமது மலர் அஞ்சலிகளை செலுத்தினர்.
தொடர்ந்து மாவீரர் பாடல்கள் ஒலிக்கப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றன. நினைவுரைகளை உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த தருமன் அவர்களும், வீரத் தமிழர் முன்னணியைச் சேர்ந்த சிவா அவர்களும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளரும், முன்னாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மாவீரர் குடும்ப நலன் அமைச்சருமான நிமலன் அவர்களும், அரசியல் பத்தி எழுத்தாளர் திபா அவர்களும் வழங்கியிருந்தனர்.
நிறைவாக உறுதியேற்போடு நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வந்தது.





ஈழத்தமிழ் மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவரும், போராளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியவருமான கேணல் கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்
1989இல் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார்.
அங்கிருந்து 1993ஆம் ஆண்டு அவர் கப்பலில் இலங்கைக்கு திரும்புகையில், சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்ததார்.
இதன்போது இந்திய வல்லாதிக்க அரசு அவரை கைது செய்ய முயற்சி செய்த வேளை கப்பலை வெடிக்கவைத்து உயிரிழந்தார்.
இதன் போது தளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களும் உயிரிழந்தனர். இவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
]]>தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்
கார்த்திகை 27, 2018.
எங்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று 27ஆம் நாள் கார்த்திகை திங்கள் 2018 ஆம் ஆண்டு. எங்கள் தாயக ஈழ மண்ணின் காவல் தெய்வங்களான மாவீர செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரும் ஒரு புனிதமான நாள்.
தாயக விடுதலையே குறிக்கோள் என்ற ஒற்றை சொல்லை முழு மூச்சாக கொண்டு, தங்கள் இன்னுயிர்களை ஈழ விடுதலைப்போருக்கு காலம் நேரம் இன்றி அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள்.
தமிழீழச் சுதந்திரப்போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் ஒரு தூயநாள்.
எமது மண்ணிலே, எமது களத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, மக்களுக்காகவே விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எதிரிக்குத்தலைவணங்காத வீர மறவர்கள்.
எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த, மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்து நின்றவர்கள்.
இவர்கள் அனைவரும் என்றென்றும் எங்கள் உள்ளங்களில், வைத்து பூசிக்கப்படவேண்டியவர்கள்.
தமிழ் ஈழ விடுதலைப்போராட்ட தீயை ஓங்கி வளர்த்து தங்கள் உடல், உயிர், ஆன்மா, குருதியை தாரை வார்த்து கொடுத்தவர்கள். அகிலம் எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உற்ற உறவுகளாய், பெற்றோர்களாக, சகோதரர்களாக, உடன் பிறப்புக்களாய் எங்களுடன் வாழ்ந்து எங்களை விட்டு பிரிந்தவர்கள்.
பல தசாப்தங்களாக அடிமைப்பட்டு இருந்த தமிழ் மக்களின் முதுகெலும்பை நிமிர வைத்து, அவர்களை வாழ வழி சமைத்த வீரர்கள். எங்களை வாழ வைக்க தங்களை ஆகுதியாக்கிய வீர மறவர்களை நினைவு கூரும் ஒரு நாள்.
ஈழ விடுதலை கோரி தமிழ் மக்கள் நடத்திய ஆயுதப்போராட்டம் 2009 ஆண்டு முடக்கப்பட்ட நிலையில், கடந்த 9 வருடங்களாக இடம்பெற்றுவரும் மக்களின் தேவைகள் அடங்கிய கோரிக்கைகள் இலங்கை அரசின் காதுகளுக்கும் சர்வதேச உலகத்தின் காதுகளுக்கும் எட்டாமல் போய் உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தமிழ் மக்களுக்கு போதிய அளவு சாதகமாக இல்லாவிடினும், தமிழீழத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் அனைத்தும் சர்வதேச சமூகத்திற்கு அவ்வப்போது செய்திகளை விடுத்தவண்ணமே உள்ளன.
இந்த செய்திகளின் பின்னணியில் தமிழீழ மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் வகையில் சர்வதேச சக்திகளுடன் நாம் இணைந்து பயணிக்கவேண்டும்.
சிங்கள அரசின் சதிகளில் ஒன்றாக இலங்கை குடி மக்களின் ஐனநாயக விருப்பத்திற்கு எதிரான சம்பவமாக மகிந்த ராஐபக்ச மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். 2018 ஆண்டின் முழு ஐனநாயக விரோத செயற்பாடக மகிந்த ராஐபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட அரசியல் கேலிக்கூத்து இலங்கைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முடக்குவதற்கு சர்வதேச அளவில் பாரிய முனைப்புக்களை எடுத்த இலங்கை அரசின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஐபக்சவின் குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் ஆட்சி அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் மாற்றப்பட்டது.
எனினும் மகிந்த ராஐபக்ச பாராளுமன்ற உறுப்பினர்களை திரை மறைவில் விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவண்ணம் இருந்துள்ளார். இதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சிகளின் கூட்டு அரசியல் அமைப்பான நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசு திடீர் என்று முறிக்கப்பட்டு எதுவித ஐனநாயக வரையறைகளுக்கும் உட்படாமல் மகிந்த ராஐபக்ச அதிரடியாக பிரதமர் ஆக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மகிந்த ராஐபக்ச மீண்டும் பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டமைக்கு, மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு கூறிய விளக்கம் சிறுபிள்ளைத்தனமாக அமைந்துள்ளது.
ஐனநாயக முறைகளுக்கு எதிராக தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு சாதகமாக எவ்வாறு வேண்டுமானாலும் காரணம் கூறிவிடலாம். அந்த வகையிலேயே மைத்திரிபால சிறிசேன தான் கொலை செய்யப்பட இருந்தாகவும், அதன் பின்னணியில் கூட்டு அரசின் பிரதிநிதியான ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்கதான் இருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன கூறிய காரணம் சர்வதேச நாடுகளினாலும் ஐனநாயகத்தை ஏற்றுக்கொள்ளும் அமைப்புக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மகிந்த ராஐபக்ச மீண்டும் பிரமதராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த நாடுகளின் வரிசையில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
பிராந்திய ரீதியில் இலங்கையை எந்த நாடு கைக்குள் வைத்திருப்பது எனும் போட்டியின் அடிப்படையிலேயே 2009 ஆண்டு வரை இடம்பெற்ற ஆயுதப்போராட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு மேற்குலக நாடுகளும் ஆசிய நாடுகளும் தங்கள் சக்திக்கும் அதிகமாக இலங்கைக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கின. ஆயுத வழங்கலின் உறவின் தாக்கம், போருக்கு பின்னரான இலங்கையை துண்டாடல் வரை அழைத்துச்சென்றுள்ளது.
ஐப்பான், சீனா, அமெரிக்கா, மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியமைக்கும் தற்போது இலங்கையை துண்டாடுவதிலும் முக்கிய பங்கு வகித்துவருகின்றன. இவ்வாறு இலங்கையை துண்டாடுவது ஏனைய நாடுகளுடன் உறவைப்பேணுவது மற்றும் பிராந்திய ரீதியில் இலங்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து நட்புநாடுகளுடன் நட்பு பாராட்டுவது போன்ற விடயத்தில் எந்த அரசியல்வாதி ஒத்துழைக்கின்றார் என்பதன் அடிப்படையிலேயே எந்த கட்சி நாட்டை ஆளுவது என்று போட்டி ஏற்பட்டுள்ளது.
யார் நாட்டை ஆண்டால் தங்களுக்கு சாதகம் என்று எண்ணும் நாடுகள், பணத்தை அள்ளிக்கொடுத்து தங்களின் செயலுக்கு ஏற்றதாக ஐனநாயக முறைகளுக்கு எதிராக மகிந்த ராஐபக்சவை தெரிவு செய்து மீண்டும் ஒரு முறை ஐனநாயத்தை குழிதோண்டி புதைத்துள்ளனர்.
மகிந்த ராஐபக்சவை பிரதமராக நியமித்த மைத்திரிபால சிறிசேன, ஐனநாயகத்தை ஏமாற்ற நடத்திய நாடகம், சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. நான்தான் பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்கவும், நான்தான் பிரதமர் என்று மகிந்த ராஐபக்சவும், ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு, பாராளுமன்றத்தில் நடத்தி முடித்த பாராளுமன்ற நாடகம் இலங்கை மக்களை மட்டும் அல்லாமல், அனைத்து ஐனநாயக விரும்பிகளையும் ஏமாற்றியுள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கையின் ஐனநாயகம் பலமுறை துடிக்கத்துடிக்க அறுக்கப்பட்ட வரலாற்றை நாம் பலமுறை கண்டுள்ளோம்.
தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும், ஒன்று பட்டு அணிதிரண்டு நிற்கின்ற சிங்கள அரசு தற்போது தங்களுக்குள் ஏற்பட்டுள்ள தலமைத்துவ மற்றும் அரசியல் போராட்டங்களுக்கு அடித்துக்கொள்வது, தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகளையும் பின்தள்ளும் என்றே எதிர்வு கூறப்படுகின்றது.
இனப்படுகொலையாளியை பிரதமராக நியமித்துள்ளதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச உலகை இலங்கை அரசு கேவலப்படுத்தியுள்ளது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் பிரதமர் ஆக்கியமையை மனித உரிமை அமைப்புக்களும் கடுமையாக விமர்சித்துள்ளன.
மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் இலங்கை எதுவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை. இது தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத ஐக்கிய நாடுகள் சபையே தற்போது இலங்கை அரசை விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழர் தாயகத்தை தொடர்ந்தும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இலங்கை அரச படைகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. தமிழ் மக்கள் வாழ்விடங்களில் சமூக கட்டமைப்பில் குற்றச்செயல்களில் தமிழ் மக்கள் ஈடுபடுவதாக திட்டமிட்டு சதிச்செயல்களை நடத்தும் இலங்கை இராணுவத்தினர் அந்த குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முனைப்புக்காட்டுவதாக தெரிவித்து வடக்கில் சிங்களப்படைகளை தொடர்ந்தும் நிறுத்திவருகின்றன. இந்த படை நிறுவல் தமிழர் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பதுடன் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மக்களின் காணிகளை மக்களிடம் மீள கையளிப்பதற்கு இலங்கைப்படைகள் இலங்கை அரசிடமே பணம் கேட்டு அடம் பிடிக்கின்றமை தமிழ் அரசியல் கட்சிகளின் கையாலகாத தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் நீண்ட காலமாக தரித்து வரும் நிலையில், மைத்திரிபால சிறிசேன மற்றும் படைத்தளபதியினர், அரச படைகள் மக்களின் காணியை விட்டு விலகுவார்கள் என்று சர்வதேச அளவில் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். இருப்பினும், மறுபுறத்தில் காணிகளை விடுவிக்க மக்களின் பணத்தை அரசிடமே கோரி நிர்ப்பந்தம் மேற்கொள்வது மக்களின் மீள் குடியேற்றத்தை தாமதப்படுத்தும் ஒரு செயலாகும்.
வருடந்தோறும் பாதுகாப்பு செலவீனங்களுக்கு என்று பெருந்தொகைப்பணத்தை ஓதுக்கீடு செய்யும் இலங்கை ஏகாதிபத்திய அரசு மக்களின் பணத்தை மீண்டும் மீண்டும் தனது கைக்கூலி இயந்திரத்திற்கு இறைப்பதும் ஒரு வகை மக்கள் புறக்கணிப்பே ஆகும்.
இதேவேளை காணி விடுவிப்பு தொடர்பில் மக்கள் நடத்திவரும் போராட்டம் வருடங்கள் இரண்டை தொடுவது மக்களின் மன ஓர்மத்தை எடுத்தியம்புகின்றது. சுழற்சி முறை ஐனநாயக வழி மக்களின் போராட்டம் நீதியானது. எனினும் இந்த போராட்டத்தை சிங்கள அரசும், அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் தமிழ் அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாதது மிகவும் கவலைக்குரியது ஆகும்.
காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் மக்களின் அறவழிப்போராட்டங்களுக்கு பல்கலைக்கழக சமூகம் ஆதரவு கொடுத்து வருவது தமிழ் மக்களின் இளம் சமூதாயத்தின் பொறுப்புணர்வை வெளிக்காட்டுகின்றது.
ஒரு புறத்தில் சிங்கள அரசு மேற்கொண்டுவரும் சமூக சீரழிவுகளுக்கு மத்தியில் இளம் சமூதாயத்தின் தெளிந்த பார்வை தமிழ் மக்களுக்கு ஒரு வகை நிம்மதியை கொடுக்கின்றது. 2009 ஆண்டில் ஆயுதப்போராட்டம் நிறைவுற்றதன் பின்னர் மக்களின் அரசியல் அபிலாசைகள் அனைத்தும் மக்களின் உணர்வுகளின் ஊடாகவே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்கள், மாணவர்கள் என்று அனைவரும் ஒன்று திரண்டு அறவழியில் நடத்தி வரும் போராட்டங்களின் ஊடாக சிங்கள ஏகாதிபத்திய அரசுக்கும், சர்வதேச உலகிற்கும் செய்திகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இதேவேளை மக்களை கண்டு கொள்ளாத தமிழ் அரசியல் கட்சிகளின் பேசு பொருளாகவும், அரசியல் கருப்பொருளாகவும், மக்களும், மாணவர்களும், முன்னெடுத்துவரும் போராட்டங்கள் அமைந்துள்ளமை அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தமாக அமைந்துள்ளது. இந்த நிலையை கட்சிகளும் புறந்தள்ளிவிட முடியாது.
சிங்கள ஏகாதிபத்திய அரசின் மூலத்திட்டமான ஒரு நாடு ஒரு அரசு திட்டத்தை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு புதிய விளக்கங்களை கொடுத்து சிங்கள அரசின் சரியும் அரசியல் திட்டங்களுக்கு முட்டுக்கொடுத்துவருகின்றது.
உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி தாயக மக்களின் சந்திப்புக்கள் மற்றும் கொள்கை விளக்ககூட்டங்களை நடத்தும் கூட்டமைப்பும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணையை மறந்து அரசின் பக்கம் தாங்கள் சாய்வதனை நியாயப்படுத்திவருகின்றனர்.
இதன் அடிப்படையில் வடக்கு மாகாண சபைக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்கத்தவறியமை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீடித்த மௌனம் சாதிக்கின்றமை, இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பில் அமைதி காக்கின்றமை, வடக்கு கிழக்கில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை ஆதரிக்கின்றமை, போர்க்குற்றம் தொடர்பில் சிங்கள அரசுக்கு ஆதரவாக அமைதி பேணுகின்றமை போன்ற பொறுப்பற்ற செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது வெறுப்பை காட்டிவருகின்றனர்.
இந்த வெறுப்பின் ஒரு அங்கமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் வெளிப்பாடாக ஏமாற்றத்தின் தாக்கமாக தாயகத்தில் புதிய கட்சிகளின் தோற்றம் இடம்பெற்று வருகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றத்தவறியுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற மற்றும் நிலையற்ற அரசியல் நிலைப்பாடுகள் தாயகத்தில் பாரிய அரசியல் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் ஆன தமிழீழ விடுதலைப்புலிகளினால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 2009 ஆண்டின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தேவைகள் அடங்கிய எந்த ஒரு பிரச்சனையையையும் தீர்த்து வைக்கவில்லை.
வட மாகாண சபையின் ஆளுனர் பிரித்தானியாவுக்கு விஐயம் செய்து அங்கு தமிழ் மக்கள் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். சிங்கள அரசின் சதித்திட்டங்களின் ஒன்றான தமிழ் மக்களை பிரித்தாளும் சதிக்கிணங்க, வட மாகாண ஆளுனரின் பிரித்தானிய விஐயம் அமைந்தமையும், லண்டனில் அவர் நடத்திய சந்திப்புக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
அரசியல் ரீதியாக தமிழ் மக்களை பின்னடைய வைக்கவும், சர்வதேச அளவில் ஒன்றுபடும் தமிழ் அமைப்புக்களையும், சர்வதேச நாடுகளையும் தமிழ் மக்களைக்கொண்டே தனிமைப்படுத்துவது சிங்கள அரசின் சதித்திட்டமாகும். ஆளுனரின் லண்டன் விஐயத்தை நடத்தி முடித்த தமிழ்க்குழுக்களும், சிங்கள அரசும் தமிழ் மக்களின் ஒன்று கூடலுக்கு எதிராக சில சதிவலைகளையும் பின்னியுள்ளன.
தமிழ் மக்களின் அரசியல் வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் புலம் பெயர் நாடுகளில் உள்ள வலையமைப்பை அறுத்தெறியும் நோக்கில் வடக்கு ஆளுனரின் விஐயம் அமைந்துள்ளது. இந்த பின்னணி பற்றி அறிந்திராத அமைப்புக்கள் ஆளுனர் லண்டன் வருகையை ஆதரித்தமை அவ் அமைப்புக்களின் அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்கு இடமாக்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்கும் அலுவலகத்தை நிறுவிய இலங்கை அரசு அந்த அலுவலகம் ஊடாக எந்த ஒரு தமிழ் இளைஞனையோ அன்றி ஒரு தமிழ் யுவதியையோ கண்டு பிடிக்கவில்லை.
அலுவலகம் அமைப்பதில் தாமதம் காட்டிய இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிப்பதில் மேலும் தாமதத்தை மேற்கொள்ளுகின்றது. தமிழ் மக்களின் வலிகளை விளங்கிக்கொள்ளாத அமைச்சர்களும் அரச தலைவரும் பிரதமரும் உள்ள நிலையில் இந்த அலுவலகம் எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையையும் மேற்கொள்ளாது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிப்பதில் புறக்கணிப்பை மேற்கொள்ளுவதில் இலங்கையின் பெரும்பான்மையின தலைவர்கள் மத்தியில் எந்த மாறுபாடுகளும் இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மக்களின் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கையில், மன்னாரில் புதைகுழி ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டு வரும் மனித வன்கூட்டுத்தொகுதியின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு உள்ளது.
இதுவரை இருநூறுக்கும் அதிகமான மனித வன்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளமை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் பாரிய சந்தேசகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு எடுக்கப்படும் வன்கூட்டுத்தொகுதிகள் குறித்து ஊடகங்கள் பொறுப்புடன் செய்தி வெளியிடவில்லை.
தமிழ் அரசியல் பிரதிகளோ அன்றி அரசோ உரிய கவனம் அல்லது விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கும் நிலை தமிழ் மக்களின் உரிமைகளை புறக்கணிக்கும் நிலையை எடுத்துக்காட்டுகின்றது.
மீண்டும் மீண்டும் என்று 95 தடவைகளுக்கும் அதிகமாக தோண்டப்பட்டதில் 207 மனித வன் கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளின் முன்னர் திருக்கேதீஸ்வரத்தில் தோண்டப்பட்ட புதைகுழியும், அப்புதை குழியில் எடுக்கப்பட்ட மனித வன்கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை விடயமும் அதிர்ச்சிக்குரியது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முற்றிலும் எதிராகவே சிங்கள ஏகாதிபத்திய அரசு புதிய அரசியல் யாப்பை கொண்டு வருகின்றது. சர்வதேசத்தை ஏமாற்றவும், தமிழ் மக்களின் மேன்முறையீட்டை நீர்த்துப்போக செய்யும் வண்ணம், இலங்கையில் அமையும் அரசியல் யாப்பு அமைக்கப்படும்.
அந்த வகையில் சிங்கள கட்;சிகளும், பௌத்த அரசும் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன. ஒரு புறத்தில் தமிழ் மக்களுக்கு அரசியலில் உரிமைகளை வழங்குவது போன்றும் மறுபுறத்தில் பெரும்பான்மை கட்சிகள் அதனை எதிர்ப்பது போன்றும், தோற்றத்தை ஏற்படுத்தி அனைத்து அரசியல் செயல்பாடுகளிலும் இலங்கை அரசு காலம் தாழ்த்தி வருகின்றது.
புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்படும் என்றும் அவ்வரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஆவன செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதும் பெரிய ஏமாற்றத்தையே கொடுக்கும்.
பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் சிங்கள அரசு தனது விசம தன பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தேவைகளில் ஒன்றான இணைந்த வடக்கு கிழக்கை திட்டமிட்டு பிரித்ததும், அதனை ஒருபோதும் இணைக்கமாட்டோம் என்று திடசங்கல்ப்பம் பூண்டு அதற்கேற்ப தமிழ் அரசியல் தலமைகளை விலைக்கு வேண்டியமையும் சிங்கள அரசு மேற்கொள்ளும் ஒரு நீண்ட கால திட்டமே ஆகும்.
வடக்கு கிழக்கு இணைந்த தாயகமே எங்களின் அரசியல் இலக்கு என்று தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் சில தொடர்ந்தும் சிங்கள அரசுக்கு தங்கள் ஆதரவை வழங்கி மக்களை ஏமாற்றி அரசியல் சுகபோகங்களை அனுபவித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சிங்கள அரசு கடந்த இரண்டு தசாப்த காலமாக தமிழ் அரசியல் கட்சிகளை விலைக்கு வாங்கும் நடவடிக்கையை திட்டமிட்டு முனைப்புடன் சிறப்புற நடத்தி வருகின்றது. சிங்கள அரசின் சதிவலைக்குள் சிக்கி நாளுக்கு நாள் இடம்மாறும் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை மாறிக்கொண்டே வருகின்றது.
கொண்ட கொள்கையில் உறுதியின்மை மக்களின் அரசியல் தேவைகள் பற்றிய தெளிவின்மை பணம் மற்றும் பதவி ஆகியவற்றுக்கு விலைபோகும், தலமை போன்றவற்றினால் அழிந்து கொண்டு இருப்பது எங்கள் தமிழ் மக்களும், அவர்களின் எதிர்காலமும் தான். சிங்களம் விரித்த சதிவலை இலங்கையில் மட்டும் அல்லாமல், சர்வதேச அளவில் பாரிய திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
மாவீரர்களின் தியாகத்தின் அடிப்படையிலும், இது வரை காலமும் மக்கள் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகள் மற்றும் அர்ப்பணிப்புக்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் வகையில் தாயகத்தில் கடுந்துயரங்களை சந்தித்து வரும் தமிழ் மக்களும் புலம்பெயர் சமூகமும், தமிழ் தேசிய அமைப்புக்களும், ஒன்று சேர அழைப்பு விடுக்கின்றோம். கடந்த 2009 ஆம் ஆண்டு தாயகத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுந்துயரத்தின் பின்னர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்கள் பிளவுபட்டு பிரிந்துபோய் உள்ளனர்.
தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபட எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக போய்விட்டன. இந்த நிலை இனியும் தொடராமல் இருக்க மக்கள் அனைவரும் மாவீரகளின் தியாகத்தின் முன்னிலையில் ஒன்று சேர வேண்டும்.
காலம் எங்களுக்கு கொடுத்த ஒரு தலை சிறந்த கொடையாளிகளே மாவீரர்கள். அவர்களின் தியாகங்கள் என்றும் வீண் போகக்கூடாது. அதேவேளை எங்கள் மாவீரர்களின் தியாகத்தின் எல்லையை அடுத்த சந்ததிக்கு எடுத்துக்கூறும் நாம் மக்களுக்கான விடுதலையையையும் வேகப்படுத்தவேண்டும்.
மாவீரர்களையும், தமிழ் மக்களின் அரசியல் தேவையையையும் உலக மக்களுக்கு நாம் எடுத்துகூறும் ஒரு சந்தர்ப்பமே நாம் வருடத்தில் ஒரு முறை அனுட்டிக்கும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஆகும். எனவே மக்கள் அனைவரும் மற்றும் அமைப்புக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் மாவீரர் நாளை அனுட்டித்து தமிழ்த்தாயின் ஒரு வயிற்றுப்பிள்ளை என்று உலகிற்கு எடுத்தியம்புவோம். வாருங்கள் சகோதரர்களே வேறுபாடுகளைக்களைவோம். மாவீரர்களின் பெயரால் நாம் சகோதரர்களாக தமிழ் தாயின் மடியில் ஒன்றுசேர்வோம்.
சர்வதேச அளவில் அடையாளம் காணப்பட்ட எமது தேவையினை பூர்த்தி செய்ய, எமது பாதையில் இருந்து விலகிச்சென்றுள்ள புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்களும் தாயகத்தில் உள்ளவர்களும் எங்கள் மாவீரர் தியாகத்தையும் தாயக தமிழர்களையும் நினைவில் நிறுத்தி ஒன்று திரள வேண்டும். என்றென்றும் இந்த பூமிப்பந்தில் எங்கள் மாவீர செல்வங்களின் தியாகம் நிலைத்திருக்கும்.
தாயகம் மலரும். கனவு நனவாகும். இது நிச்சயம்.
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
27.11.2018

தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன் ஆகிய உடன்பிறப்புக்களில் முதலாவதாக வீரச்சாவை அணைத்துக் கொண்ட லெப்டினன்ட் இன்பமுதனின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாவீரர்கள் கணிசமானோர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். இரண்டிற்கும் மேற்பட்ட மாவீரர்களைக் கொண்ட குடும்பங்கள் மிகச் சிறிய எண்ணிக்கையே.

இவர்களில் வடமராட்சி கிழக்கு, தாழையடி, ஆழியவளைச் சேர்ந்த லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தர்சன் மற்றும் கப்டன் வளவன் ஆகியோரின் குடும்பமும் அடங்கும். இவ் உடன்பிறப்புக்கள் மூவரும் ஓராண்டிற்குள்ளாகவே தாயக விடுதலைக்கான கடமையின்போது தம்மை ஆகுதியாக்கிக் கொண்டுள்ளனர்.
ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் வன்னி பெருநிலப்பரப்பை சிறிலங்கா படைகளில் வல்வளைப்பிற்குள் செல்லாது தடுப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தவேளை 19.10.1998 அன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில்,
லெப்டினன்ட் இன்பமுதன் (முத்துக்குமார் கலைஞானச்செல்வன்) தனது குடும்பத்தின் முதல் வித்தாக விழி மூடினார்.
இவர் வீரச்சாவைத் தழுவி ஏழு மாதங்களிற்குள் 01.05.1999 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற சமரின்போது,
லெப்.கேணல் தேவநேயன் (தர்சன்) (முத்துக்குமார் கலைஞானசேகர்) 10 கடற்புலிகளுடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இம் மாவீரர்களின் உயிர்கொடையால் வழங்கற் படகுகள் பாதுகாப்பாக கரைசேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
லெப்.கேணல் தர்சன் வீரச்சாவைத் தழுவி நான்கரை மாதத்தில் 15.10.1999 அன்று அம்பகாமம் பகுதி நோக்கி முன்னகர முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரின்போது விழுப்புண்ணடைந்து மறுநாள் 16.10.1999 அன்று லெப்டினன்ட் இன்பமுதனின் முதலாம் ஆண்டு நினைவு நாளிற்கு மூன்று நாட்கள் முன்பாக,
கப்டன் வளவன் (முத்துக்குமார் குகதாஸ்) அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மூன்று உடப்பிறப்புக்களையும் லெப். இன்பமுதன் வீரச்சாவைத் தழுவிய இன்றைய நாளில் ஒருசேர நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
]]>1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.
ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது.
எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.

அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது M16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.
வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப்பூக்கள்.
இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.
அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின.

மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது.
அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான்.
கோப்பாய் – கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.
சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின.
மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது.

“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ”
காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார்.
தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூவிக் கொண்டிருந்தார்.
அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம், ‘என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வழிகாட்டிச் சென்ற பாதையில் பயணங்களைத் தொடருவோம்.
அவர் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்தத் தேசமும் அவரின் வரலாற்றைச் சுமந்திருக்கும்.
]]>