//anjeng

தமிழ்தேசிய நினைவெழிச்சி நாளில் தமிழ்கலை வடிவங்கள் எங்கே?
28-10-2025
ப.பார்தீ
புலம்பெயர் தேதங்களில் தமிழ்தேசிய நினைவெழிச்சிநாளில் (ஓரிரண்டு கலை வடிவம் தாண்டி )புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் கலைவடிவங்களைப்பற்றி நாம் பேசியாகவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.
மக்கள் கலை என்பது ஒரு சமூகத்தின் நாளாந்த வாழ்வியல், தொன்மம் தொடர்ச்சி, நம்பிக்கை, தொழில், உணர்வு ஆகியவற்றிலிருந்து இயல்பாக உருவாகும் வடிவம். இதுமக்களின் கூட்டு அனுபவத்தின் வெளிப்பாடு. எளிமையான வடிவில் உருவானதும், தலைமுறைகளாக பரவுவதும் இதன் சிறப்பு. பாடல், நடனம், ஓவியம், கைவினை, கதையாடல் போன்ற வடிவங்களில் மக்கள் கலை உயிரோடு இன்றும் வாழ்கிறது.
பறை (இசையோடு இசையில்லாமல் நாட்டார் பாடல் வடிவங்கள்)ஒருகாலத்தில் எங்கள் கிராமங்களின் இரத்த ஓட்டம். போர்க்காலத்தில் அது எச்சரிக்கைத் தாளமாயும், சடங்குகளில் வாழ்வு இறப்பு வட்டாரத்தின் விடுதலை ஆற்றுப்படுத்தல் மொழியாகவும் இருந்தது. இன்று அந்தத் தாளம் தேசிய நினைவில் ஒலிக்காதபோது, அதன் அரசியல் இடம்பிடிப்பு சக்தி குறைந்து வருகிறது. பறையென்பது வெறும் கருவி அல்ல அது ஒடுக்கப்பட்டோரின் போராட்ட வரலாறு. அதை நினைவு நாள்களில் புறக்கணிப்பது, தமிழ்த் தேசியத்தின் வரலாற்றையே காயமாக்கி நிழல் செய்யும்.
கூத்து, (கோலாட்டம் கும்மி)அடிப்படையில் மக்கள் நீதிமன்றம். கிராமம் முழுவதும் கலந்துரையாடும் மேடை. அங்கு தெய்வங்களும் அறமும் மனிதர்களின் குரலில் மீள எழுதப்பட்டன. வன்னி, கிழக்கு, யாழ் ஆகிய பகுதிகளில் கூத்து சமூக சிதைவுகளுக்கு எதிரான விமர்சன ஆற்றலாக இருந்தது. ஆனால் இன்றைய நினைவு மேடைகளில் கூத்து காணாமல் போகிறது. சர்வதேச வடிவமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வுகளில் இந்த மக்கள் கலைகளின் உடல் மொழி சேர இடமில்லையா?அதன் சிதைவு என்பது மக்களின் வாழ்வை வலியை வெளிப்படச் சொல்லும் வாய்ப்பின் சிதைவும்தான்.
கதைகள் (வில்லுப்பாட்டு)சொல்வது கேட்பது முன்பிருந்தது கிராமகளில் இரவை மெல்ல திறந்து வெளிச்சமாக்கும் குரலாக. வீரப்பாடல்கள், பெண்விடுதலை கதைகள், மண்ணின் ஞானத்தை சொல்லும் மென்மையான பாட்டுகள் இவை அனைத்தும் தேசிய நினைவு இடத்திலிருந்து தவிர்க்கப்படும்போது, தமிழரின் மனவளர்ச்சி பொக்கிஷமே அலட்சியப்படுத்தப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது தமிழ்கதைகள் ஒவ்வொன்றும் அடிமைச் சூழலை மறுத்த எழுச்சியின் செறிவான வடிவம். குழந்தைகளுக்கு தமிழுணர்வை அறந்தைகடத்தும் அதை தேசிய மேடைகளில் பயன்படுத்தாமை, கலாசாரச் சிதைவின் வேகத்தைக் கூட்டுவதாக உணரமுடிகிறது.
நாகரீகம் எவ்வளவு வளர்ந்தாலும் மண்பாண்டக் கைவினை, குச்சிப் பொருட்கள், பனைப் பண்பாடு தமிழரின் மண்ணின் வேர்களைச் சான்றிடும் சிற்பங்கள் ஓவியங்கள். நினைவு நிகழ்வுகளில் இடம் பெறாமல் போகும்போது, கலை பிரிவில் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் வாழ்வியல் வரலாற்றை கடத்தும் அழிவின் சுவர்களைத் தொடுகின்றன. ஒரு மக்கள் தேசிய நினைவில் தங்கள் தொழிலின் தடத்தை காட்சிப்படுத்தாதபோது , அந்தத் தொழில் பண்பாடு தலைமுறையால் அறிய முடியமலே போகிறது .
ஏன் இந்தப் புறக்கணிப்பு?அல்லது ஏன் தமிழ்தேசியவுணர்வுசார்ந்து இந்த பொருப்பின்மை?
நினைவு நிகழ்வுகள் சர்வதேச பார்வையின் கீழ் மிக ஒழுங்கான, ஒலி–ஒளி சார்ந்த, எங்கள் ஆதி வடவங்கள் தணிக்கப்பட்ட ஒரு வடிவமைப்பில் நிறுத்தப்படுவதால், மக்கள் கலைகளின் கூச்சலான உடல் நினைவுகள் அங்கு அடக்கப்படுகின்றன. தேசியம் ஒரு அழகியல் வடிவம் அல்ல; அது ஒரு மக்கள் உணர்ச்சி வடிவம். ஆனால் இன்று நினைவு மேடைகள் அந்த உணர்ச்சியில் இருந்து பிரிக்கப்பட்டதுபோல தோன்றுகிறது. இது எதிர்காலத்தில் “தமிழ் மொழி தேசிய கலாசாரம்” என்ற கருத்தையே ஒரே மாதிரிப் காட்சியாக்கிவிட கூடிம் விடக்கூடும்.
ஈழத் தமிழர் வரலாறு, சிதைந்து இழைந்து மீண்டும் மீண்டுமெழும் ஓளி. அதன் வெளிச்சமாய் ஒலிக்கும் முதற்பாட்டுகள் பறைத்தாளம், கூத்து மெய்யாட்டம், வாழ்வியல் கதைகள் இவை அனைத்தும் ஒருகாலத்தில் பொதுநினைவின் முதுகெலும்பாக இருந்தன. தேசிய காயங்களையும் எதிர்ப்பையும் தாங்கிய இக் கலைவடிவங்கள் இன்று “நினைவெளிச்சிநாள்” பீடங்களில் காட்டுப்பூக்கள் போல தள்ளிவைக்கப்பட்டு; மெலிந்தும் மறைந்தும் வருகின்றன. இந்தக் கலைகள் தங்கள் உயிர் பெற்று வீறுகொண்டது தமிழ் மக்களின் சமூகச் சுழற்சியிலும் அரசியல் அடையாளங்களிலும் தான். ஆனால் இன்று நாம் அமைக்கும் நினைவு மேடைகளில் அவை பங்கேற்காதபடியால், தமிழ் தேசிய அடையாள உணர்வுத் தாய்மண்ணிலிருந்து மெதுவாகப் பிரிக்கப்படுகின்றன.இளந்தலைமுறைக்கான எடுத்துகூறல் கேள்வியாக்கப்பட்டுவிட்டது.
]]>கொரோனா வைரஸ் பெருந்தொற்று மானிடசமூகத்தினை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள இக்கட்டான இத்தருணத்தில், ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுச் சென்றார் என்ற துயரமான செய்தியினை அறியத்தருகின்றோம்.
கடந்த சில நாட்களாக மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐயா அவர்கள், இன்று மதியம் 14மணியளவில் உயிர்பிரித்தார் என்ற செய்தி மருத்துமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவதிலும் தன்னை இளைஞராக மனங்கொண்டு உறுதியுடனும், துடிப்புடனும் நமக்கெல்லாம் வழிகாட்டி நின்ற மூத்தமரம் சாய்ந்தது கண்டு அனைவரும் ஆறாப்பெருந்துயரில் நிற்கின்றறோம்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிகருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தோழமையோடு நாம் அனைவரும் துனை நிற்போம்.
நன்றி
LIFT
ஈழத்தமிழர் திரைப்பட சங்கம்
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரும், பொலிஸாரும் பரிசோதனை நடவடிக்கையினை கடந்த மாதம் 30 திகதி மேற்கொண்டிருந்தனர்.
பாவனையாளர் அதிகார சபையினரால் இன்று எரிபொருள் மாதிரியை நீதிமன்றத்தில் முற்படுத்தாது நேரடியாக கொலநாவ எரிபொருள் கூட்டுத்தாபன ஆய்வு கூடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், 10 நாட்களுக்குள் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததன் பின்னர் நிலைப்பாட்டை தெரிவிப்பதாகவும் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாம் பெறும் டீசல் தொடர்பில் சந்தேகம் அடைந்து நேற்று இரவு வாகனத்திற்கு டீசல் நிரப்பிய பின் வெற்று கலன்களிலும் டீசலை பெற்றுள்ளார். அப்போது அந்த டீசலில் மண்ணெண்ணெய் மணம் வீசுவதாக உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து வவுனியா நகரில் உள்ள பிறிதொரு எரிபொருள் நிலையத்தில் வெற்றுப் போத்தல் ஒன்றில் டீசலைப் பெற்று வந்து இரு டீசல்களையும் ஒப்பிட்டு பார்த்த போது டீசலில் மண்ணெய்ணெய் கலந்துள்ளதாகவும், இரு டீசல்களுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதையும் இனங்கண்டுள்ளார்.
இதனையடுத்து வவுனியா பாவனையாளர் அதிகாரசபையினருக்கு முறைப்பாட்டை மேற்கொண்டதுடன், வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் தமிழ் மொழி மூலமான தொலைபேசி அழைப்பு முறைப்பாட்டு பிரிவுக்கும் தனது முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸார் டீசல் மாதிரிகளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெற்று அதனை சுயமாக பரிசோதித்த போது வேறுபாடு காணப்படுவதாக தெரிவித்து அந்த மாதிரிகளை சீல் செய்து முறைப்பாட்டை பதிவு செய்து எடுத்துச் சென்றனர்.
அங்கு வருகை தந்த பாவனையாளர் அதிகாரசபை உத்தியோகத்தர்களும் மூன்று வெற்றுப் போத்தல்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரந்து டீசலை பெற்று அங்கு கடமையில் நின்ற ஊழியரின் கைவிரல் அடையாளத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்து ஊழியர்கள் மற்றும் விசாரணைக்காக வந்த பொலிசார் முன்னிலையில் அதனை சீல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.
மூன்று மாதிரிகளில் ஒரு மாதிரியை எரிபொருள் நிரப்பு நிலையத்திடம் வழங்கியுள்ளனர்.
இதேவேளை முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறும் நிலையில் குறித்த எரிபொருள் நிலையத்தில் தொடர்ந்தும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பாவனையாளர்களால் மேலும் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் பரிசோதனை அறிக்கை வரும் வரை தம்மால் தற்காலிகமாக சீல் வைக்க முடியும் எனவும் பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

அறிவித்ததைப் போன்று நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபை நெல்லைக் கொள்வனவு செய்யாததால் குறைந்த விலையில் தனியாரிடம் நெல்லை விற்க வேண்டிய நிலையில் மன்னார் மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.
காலபோக நெற் செய்கையின் அறுவடைகள் முடியும் நிலையில் உள்ளளன. வடக்கு மாகாணத்தில் நெல் சந்தைப் படுத்தும் சபை, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுடைய நெல்களைக் கொள்வனவு செய்வதாக அந்தந்த மாவட்டச் செயலகங்கள் தெரிவித்தன.
நெல் சந்தைப்படுத்தும் சபையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து இந்த பெரும்போகத்தில் 40 ஆயிரத்து 800 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது என்றும், ஒரு கிலோ சம்பா 41 ரூபாவுக்கும், ஒரு கிலோ நாட்டு 38 ரூபாவுக்கும் நெல் கொள்ளவனவு செய்யப்படவுள்ளன என்றும் அதற்காக மாவட்டச் செயலகங்களுக்கு நிதி விடுவிக்கப்பட் டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலில் நெல் கொள்வனவுகள் இடம்பெற்றன. தொடர்ந்தும் ஏனைய மாவட்டங்களில் கொள்வனவு இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு விவசாயியிடமிருந்தும் நெல் கொள்வனவு செய்யப்படவில்லை.
மன்னார் மாவட்டத்தில் விவசாய பெருநிலப்பரப்பாக உள்ள நானாட்டான், மாந்தை, முசலி, மடு போன்ற பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையின் முதல் கட்ட அறுவடைகள் பரவலாக இடம் பெற்று வருகின்றன.
நெல்சந்தைப்படுத்தும் அதிகார சபை நெல் கொள்வனவில் இன்னும் ஈடுபடாத காரணத்தால் தனியார் வியாபாரிகள் சிவப்பு வெள்ளை சம்பா போன்றவற்றை, 2ஆயிரத்து 100 அல்லது 2ஆயிரத்து 200 ரூபாவுக்கும், கீரி சம்பா 3 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் கொள்வனவு செய்துள்ளனர்.
தற்போது அவற்றையும் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டார்கள். இதனால் அறுவடைசெய்த நெல் மூடைகளை வரம்புகளின் மீது அடுக்கி வைத்து காவல்காக்கின்றனர் மன்னார் மாவட்ட விவசாயிகள்.
“விவசாயத்துக்காக பட்ட கடன்கள் அதற்கான வட்டிகள் ஒரு புறம் குடும்பச் செலவு மறுபுறம் எங்களைத் தாக்குகிறது மாதக்கணக்கில் இரவு பகலாகப் பாடுபட்ட விவசாயிகளுக்கு பலன் எதுவும் கிடைப்பதில்லை.
எந்தக் கஷ்டங்களும் அனுபவிக்காத முதலாளி மார் பலனை அனுபவிக்கின்றார்கள். அரசு கூறியது போல் விரைவாக நெல்சந்தைப்படுத்தும் அதிகார சபை மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை நியாய விலைக்கு கொளவனவு செய்து விவசாயிகளை கஷ்டத்திலிருந்து மீட்க வேண்டும் என்று விவசாயிகள் பெருமூச்சுவிட்டனர்.
“மன்னார் மாவட்டத்தில் அறுவடைகள் நிறைவு பெறாததன் காரணத்தாலேயே நெல்சந்தைப்படுத்தும் சபை கொள்வனவில் ஈடுபடவில்லை.
வழமையாக மன்னார் மாவட்டத்தில் இறுதியாகத்தான் கொள்வனவு இடம்பெறும். எதிர்வரும் புதன் கிழமை கண்டியில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று உள்ளது.
அதை அடுத்துத்தான் எப்போது மன்னாரில் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என்று தெரியவரும் என்று நெல் சந்தைப்படுத்தும் சபையின் கிளிநொச்சிப் பிராந்திய அலுவலகத்தினர் தெரிவித்தனர்.
]]>
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் போது ஊடகப்பணியில் இருந்த நாட்டுப்பற்றாளர் சத்திமூர்த்தி சிறீலங்காப்படையின் குண்டு வீச்சில் மரணத்ததார்.
அவருடைய பத்தாண்டு நினைவேந்தல் தாயகத்திலும் புலம் பெயர் மண்ணிலும் அனுட்டிக்கப்பட்டது
புலம்பெயர் மண்ணில் நடைபெற்ற நினைவேந்தலில் சத்தியமூர்த்தியின் மகள் தந்தை பற்றி நினைவு மீட்டினார்.
தந்தையார் கொல்லப்படும் இரண்டரை வயது குழந்தையாக இருந்தவர்.
பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு சிறுமியாக தன் தந்தையின் கனவை தான் சுமந்திருப்பேன் என்றும் தந்தையை போல கொல்லப்பட்டவர்களுக்காக பாடுபடுவேன் என்றும் தன் சிறு நினைவு மீட்டலில் தெரிவித்தார்.









மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளை பகுதியிலுள்ள நீர்நிலையில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
50 வயதுடைய தேற்றாத்தீவு வைத்தியர் வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஸ்கந்தராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மூன்று நாட்களுக்கு முன் காணாமல்போன நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண விசாரணைகள் இன்று காலை நடைபெற்றதை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.




யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே படுகாயம் அடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதுண்ட இளைஞனே விபத்தில் சிக்கியுள்ளார்.
ரயிலில் மோதுண்டவர் சற்றுத் தூரம் வரை வீசி ஏறியப்பட்டார் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் விபத்து நடந்துள்ளது.

விபத்தில் சிக்கிய இளைஞன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தூக்கி் வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
]]>வவுனியா சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட நால்வரை மாமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாமடுவ பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு முதிரை மரகுற்றிகளை கடத்தப்படுவதாக மாமடுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வவுனியா, சேமமடு பகுதியில் வைத்து முதிரை மரக்குற்றிகளை கடத்தப் பயன்படுத்தப்பட்ட பட்டா ரக வாகனத்தினையும், குறித்த வாகனத்தின் சாரதி உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக்கடத்தல் சம்பவத்தில் பெறுமதி வாய்ந்த 13 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கெ.செனரத் தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணம் – நெடுங்குளம் பகுதியில் 300 ஏக்கர் பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கை அதிகாரிகளால் கைவிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இந்தப் பகுதியில் உள்ள 3000 ஏக்கர் காணி அதாவது 300 பரப்புக் காணியை சுவீகரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் காணி சுவீகரிப்பு சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
உரிமை கோரப்படாத காணியை சுவீகரிக்கவுள்ளதால், காணி உரிமையாளர்கள் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுவீகரிப்பு சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளமையினால், காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைக் கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது காணி சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, யாரும் உரிமை கோர முடியாது, என்றும் அந்தப் பகுதியில் உள்ள 89 பரப்பு காணியை கொண்ட உரிமையாளரை பிரதேச செயலாளர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களை மீறியும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து காணி சுவீகரிப்புத் தொடர்பாக தெரிவித்த பின்னரும், பிரதேச செயலாளர் மிரட்டும் தொனியில் அப்பகுதி மக்களுடன் காணி சுவீகரிப்போம்.
சுவீகரிப்பில் தலையிடக் கூடாது என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தமது காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கமாட்டோம் மீறி சுவீகரித்தால், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து தடுப்போம் என்று கூறியதை தொடர்ந்து, அதிகாரிகளால் காணி அளப்பதை நிறுத்திவிட்டு, பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றினைத் தருமாறும் கோரியுள்ளனர்.
குறித்த போராட்டத்தில், யாழ்.மாநகர பிரதி முதல்வர் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டு, தமது கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





இன்று முல்லைத்தீவு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிளிநொச்சியில் மரம் நாட்டும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
இன்று பகல் 1 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை நிழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டு மரக்கன்றொன்றையும் நாட்டி வைத்தார். (குறித்த நிகழ்வு இலங்கை ரூபவாகினி கூட்டுதாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது)
ஜனாதிபதியுடன் அமைச்சர்கள், பா ம உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 1500 மரக்கன்றுகள் இன்று குறித்த வளாகத்தில் நாட்டி வைக்கப்பட்டது, பல்கலைக்கழக மாணவர்கள், அமைச்சர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மக்கள் மற்றம் மாணவர்களுடன் நெருக்கமாக பழகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலை மாணவர்களிடம் அவர்களின் பாடசாலைகளில் உள்ள தேவைகளையும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.



















