//anjeng
சுவீடனுக்கு சீவன் போகுது!
பால்டிக் கடலில் வெடிக்கக் கூடிய எந்தப் போரிலும் சுவீடனின் அமைவிடம் முக்கி
யத்துவம்மிக்கது. கடலின் நடுவே அமை
ந்திருக்கின்ற கொட்லான்ட் (Gotland) என்
னும் சுவீடிஷ் தீவு பூகோள ரீதியில் பாது
காப்புக் கேந்திரம் ஆகும்.பால்டிக் கடலின்
ஆதிக்கத்தைக் கையில் வைத்திருக்க
விரும்பும் சக்திகள்-அது ரஷ்யாவாக இருந்தாலும் சரி நேட்டோவாக இருப்பி
னும் சரி – முதலில் அந்தத் தீவைக் கைப்
பற்றியாக வேண்டும்.
ரஷ்யாவின் கலினின்கிராட் கடற்படைத்
தளத்துக்கு (Kaliningrad naval base) வடக்கே
சுமார் முந்நூறு கிலே மீற்றர்கள் தொலை
விலும் – ரஷ்யாவின் பரம எதிராளிகளும்
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளு
மாகிய லித்துவேனியா ( Lithuania) லத்
வியா(Latvia),எஸ்தோனியா(Estonia)ஆகிய
மூன்று முக்கிய கிழக்கு ஐரோப்பிய நாடு
களுக்கு எதிர்த்திசையில் மேற்குப் பக்கத்
திலும் – அமைந்திருப்பதால் கொட்லான்ட்
தீவு குறித்து ரஷ்யா, சுவீடன் இருநாடுக
ளுக்குமே அச்சம் உள்ளது. எனினும் அமைதியை விரும்புகின்ற சுவீடனோ
கொட்லான்ட் தீவில் தனது படைபலத்தை நிறுவிப் பாதுகாப்பையும் அதன் கேந்திர முக்கியத்தையும் பேணும் விடயத்தில்
அசிரத்தையாக இருந்து வருகிறது.
ஆனால் கொட்லான்ட் தீவை “மூழ்கடிக்க
முடியாத ஒரு விமானந்தாங்கிக் கப்பல்”
(“an unsinkable aircraft carrier) என்று வர்ணிக்கின்ற அமெரிக்கத் தளபதிகள் எப்போதும் அந்தத் தீவின் மீது தங்களது தீவிர கவனத்தைக் கொண்டுள்ளனர்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக ரஷ்யா அதன் பாரிய கடற்படைக் கப்பல்
கள் சிலவற்றை பால்டிக் கடலில் சுவீடனு
க்கு நெருக்கமாக நகர்த்தியது.அதனால் அங்கு பதற்றம் உருவானது.அச்சுறுத்த
லைக் கருத்திற்கொண்டு சுவீடன் உடன
டியாகவே தனது அறுபதாயிரம் துருப்புக்
களையும் போர் டாங்கிகளையும் கொட்
லான்டில் தரையிறக்கித் தயார் நிலை
யில் வைத்தது. கடந்த பல பத்தாண்டு
களில் முதல் முறையாகத் துப்பாக்கியு
டன் சீருடையினரையும் இராணுவ வாக
னங்களையும் தெருக்களில் கண்ட தீவு
வாசிகள் ஆச்சரியமடைந்தனர்.”ரஷ்யர்
கள் வருகிறார்கள்” என்ற பீதியும் வதந்தி
களும் கிளம்பின.
அதேசமயம், சுவிடனின் தலைநகரம்
மற்றும் மூன்று அணு நிலையங்கள்,
விமான நிலையம்,அரசகுடும்ப மாளிகை
போன்ற பகுதிகளுக்கு மேல் ஆட்கள் இன்றிப் பறக்கும் பெரிய மர்ம ட்ரோன்
கள் சில தென்பட்டன என்ற தகவல்
நாடெங்கும் பரவியது. ட்ரோன்களின் பின்னணி என்ன என்பது தெரியவர
வில்லை. எனினும் அது ரஷ்யாவின்
வேலை என்று சிலர் நம்புகின்றனர்.
ரஷ்யா சுவீடனின் நிலைகளைத் தாக்கு
வதானால் அவற்றை நோட்டமிட்டு அறிய
வேண்டும் என்று அவசியம் இல்லை. இது சும்மா சுவீடனைச் சீண்டும் நோக்
கம் கொண்ட செயலாக இருக்கலாம்
என நம்பும் சுவீடன் புலனாய்வுச் சேவை
யினர் உண்மையை அறிவதற்காக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
நேட்டோ பாதுகாப்புக் கூட்டணியில்
இணையாமல் தானும் தன்பாடுமாக
இராணுவ “அணிசேராக்” கொள்கை
யுடன் தனித்து விலகி இருக்கின்ற
அமைதியான நாடு சுவீடன். ஆயினும் வரலாற்று ரீதியாக அது ரஷ்யாவின்
அச்சுறுத்தல்களைச் சந்தித்து வந்திருக்
கிறது. தற்போது ரஷ்யா உக்ரைனை
ஆக்கிரமிக்கும் முஸ்தீபுகளில் இறங்கி
யிருப்பதால் அமெரிக்கா தலைமையி
லான நேட்டோ நேச நாடுகளுக்கு சுவீ
டனின் தயவும் ஒத்துழைப்பும் மிகமிக அவசியமாகியுள்ளது.
பால்டிக் கடலோர நேட்டோ நாடுகளான
லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா
ஆகிய மூன்றில் ஒன்றை ரஷ்யா தாக்கு
வதற்கு முயன்றால் நேட்டோ ஒப்பந்த விதிகளின் படி அமெரிக்கா அந்த நாடு
களுக்கு உதவ நேரிடும். அமெரிக்கப் போர் விமானங்கள் பால்டிக் கடல் மீது
பறப்பதைத் தடுப்பதற்காக கொட்லான்ட்
தீவை ரஷ்யா ஆக்கிரமித்து அங்கு அதன்
ஏவுகணைகளை நிறுத்த முயற்சிக்கலாம்
எனவே அமெரிக்கா அந்தத் தீவில் தனது
ஆதிக்கத்தை வைத்திருப்பதற்கே விரும்
புகிறது.
இந்தப் பின்னணியில் சுவீடன் நேட்டோ
வில் முழுமையாக இணைய வேண்டும்
என்பதற்கான நகர்வுகள் மேலும் முக்கி
யத்துவம் பெற்றுவருகின்றன.கிழக்கில்
இருந்து வருகின்ற அச்சுறுத்தலை எதிர்
கொள்வதற்காக சுவீடனும் பின்லாந்தும்
தாமதிக்காமல் மேற்கோடு (நேட்டோவில்) இணைந்திடவேண்டும் என்ற கோரிக்கை
கள் வலுத்து வருகின்றன.
(படங்கள் :கொட்லான்ட் தீவில் சுவீடிஷ்
டாங்கிகள் மற்றும் தீவின் அமைவிட
வரைபடம்)

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
ஒரு நாட்டைப் பற்றி அறிவதற்கு அந்த நாட்டின் இலக்கியங்கள் எவ்வளவுக்குப் பிற மொழி மாற்றம் செய்யப்படுகின்
றன என்பதும் முக்கியமானது.பள்ளி நாட்களில் படித்த உக்ரைன் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவின் நாவல்கள் அந்த தேசத்தில் பிறந்து வாழ்ந்தது போன்ற உணர்வனுபவங்களைத் தந்திருக்கின்
றன.(அச்சமயம் அது சோவியத் ஒன்றி
யம் )
எந்த “இஸங்”களாலும் ஈர்க்கப்படாவிடி
னும் டிசெம்பர் 1991 இல் சோவியத் ஒன்
றியம் உடைந்து பல நாடுகளாகச் சிதறு
ண்ட நாளின் இரவில் எனது நாட்குறிப்
பில் அதனை மிக வருத்தத்துடன் பதிவு செய்தது இப்போதும் நினைவிருக்கிறது.
அதற்கு அந்த நாளைய மொஸ்கோ அயல் மொழிப் பதிப்பகத்தின் நாவல் களைப் படித்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.ஒரு தேசத்தின் ஆன்
மாவை இலக்கியங்களூடாக உணர்ந்து
கொண்ட அனுபவம் தந்த வருத்தமாகக் கூட அது இருந்திருக்கலாம்.தற்சமயம் உக்ரைன் மீது சூழ்ந்துள்ள போர் மேகங்
கள் அந்தப் பழைய நாட்களை மீட்டுப் பார்க்கச் செய்கின்றன.அவ்வளவுதான்.
உக்ரைன் 1991 இல் சோவியத் ஒன்றி
யத்தில் இருந்து பிரிந்து தனி நாடானது.
வரலாற்றில் சோவியத் சாம்ராஜ்ஜியங்
களை எடுத்துப் பார்த்தாலும் சோவியத் யூனியனை நோக்கினாலும் அவற்றின் பிரிக்க முடியாத பகுதியாகத் – தூணாக- (pillar of the Soviet Union) உக்ரைன் இருந்து வந்திருக்கிறது. மொழி, பண்பாடு, அரசி
யல்,பொருளாதார ரீதியாகச் சோவியத்
துடன் பின்னிப் பிணைந்திருந்த தேசம் அது.புரட்சிகளின் போது உக்ரைன் மக்கள் புரிந்த தியாகங்கள் சோவியத் ஒன்றியத்தை நிமிர வைத்தன. சோவியத் ஒன்றியத்திலே ரஷ்யாவுக்கு அடுத்து உக்ரைன் தான் மிகப் பெரிய நிலப்பரப்பு.
உலகத்துக்கு மிகச் சிறந்த படைப்பு இலக்கியங்களை வழங்கிய மண் என்பதை விட உலகம் முழுவதுக்குமான “தானியக் களஞ்சியம்” என்று அதனைக் கூறுவதே பொருத்தம்.ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் தானியக்
களஞ்சியமாகத் திகழ்ந்த உக்ரைன் இன்று ஐரோப்பாவின் களஞ்சியமாக மாறிவிட்டது. அடுத்து அது நேட்டோவின்
உறுப்பினராகப் போகிறது என்பதே அங்கு போர் மேகங்கள் சூழந்திருப்பதற்
கான காரணமாகும்.
சோவியத் ஒன்றியம் உடைந்த போது
ஒரு டக்ஸி ட்ரைவராக இருந்தவர் விளா
டிமீர் புடின். கேஜிபி உளவு அமைப்பின்
உறுப்பினராக மாறிய அவர் படிப்படியாக
அதிகாரங்களைத் தக்கவைத்து-எதிரா
ளிகளைப் “போட்டுத் தள்ளி” – ரஷ்யா
வைத் தனது இரும்புப் பிடியின் கீழ் கொண்டு வருவதில் வெற்றிகண்டார்.
அதிபராக நீண்டகாலம் பதவியில் நீடிக்
கிறார்.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்
அனைத்தும் ரஷ்ய நாகரீகத்துக்கு உட்பட்
டவை. அவை தனித்தனி நாடுகளாக இருப்பதற்குத் தகுதியற்றவை என்ற
ஒரு கோட்பாட்டை புடின் திரும்பத் திரும்ப
வலியுறுத்தி வருகிறார். அவர் மீண்டும்
ஒரு சோவியத் சாம்ராஜ்ஜியத்தைக்
கட்டியெழுப்புவதற்கு கற்பனைபண்ணு
கிறார். தனது கட்டுரை ஒன்றில் அவர்
ரஷ்யாவையும் உக்ரைனையும் “ஒரே மக்
கள்” என்கிறார். உக்ரைனையும் அயல்
நாடாகிய பெலாரஸையும் சேர்த்து ரஷ்ய நாகரீகம்”(“Russian civilisation”) என்று கூறி
ஒரே நாடாகக் கருதுகிறார். மீண்டும் ஒரு
சோவியத் ஒன்றியத்தைக் கட்டியெழுப்பு
வதற்கு உக்ரைனைத் தன்னோடு வைத்தி
ருப்பதே அவரது எண்ணம். உக்ரைன்
மக்கள் இதனை எதிர்க்கிறார்கள்.அங்கு
ள்ள புதிய தலைமுறை ஐரோப்பாவுடன் இணைவதையே விரும்புகின்றது.அங்கு
ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபரைத் தூக்கி
எறிந்த மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு அரசுத் தலைமையை வகிப்பவர் ஒரு
யூத இனப் பூர்வீகம் கொண்டவர். ஐரோ
ப்பாவின் சுதந்திரச் சந்தைகளுடன் உக்
ரைனை இணைப்பதற்கு விரும்புகிறார்.
உக்ரைனில் 2004 மற்றும் 2014 ஆம் ஆண்
டுகளில் இரண்டு தடவைகள் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சிகளுமே ரஷ்ய மேலாதிக்
கத்தை நிராகரித்தன.ஐரோப்பா(நேட்டோ)
நோக்கிய பாதையைத் திறந்து விட்டன.
இதுவே அங்கு இருநாட்டு எல்லைகளி
லும் தற்போது உருவாகியுள்ள போர்ப் பதற்றத்தின் மூலக் கதை ஆகும்.
உக்ரைனின் இறைமை அது ரஷ்யாவுடன்
சேர்ந்திருப்பதிலேயே தங்கியிருக்கிறது
என்று சொல்பவர் புடின்.2015 இல் உக்ரை
னின் ஒரு பகுதியாகிய கிரிமீயா குடாப்
பகுதியை ஆக்கிரமித்து ரஷ்யாவுடன்
இணைத்துக் கொண்டார்.அதன் பிறகு
அங்கிருந்து உக்ரைனுக்கு இராணுவ வழிகளில் நெருக்குதல் கொடுத்து வரு
கிறார்.
தனது எல்லையில் உள்ள உக்ரைனில்
நேட்டோ கால் பதிப்பது தனது சோவியத்
கனவைத் தகர்த்துவிடும் என்பதை புடின்
நன்கறிவார். அதற்காக உக்ரைனை ஆக்
கிரமிக்க முனைகிறார். எல்லையில் அவர் படைகளைக் குவிப்பது நிஜமான போர் ஒன்றுக்கான முஸ்தீபாகத் தெரிய
வில்லை. உக்ரைன் நேட்டோவில் சேர்க்
கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை
மேற்குலகிடம் இருந்து பெற்றுக் கொள்
வதற்கான ஓர் அழுத்தமாக மட்டுமே அதைக் கருதவேண்டியுள்ளது. எனினும் எதிர்பாராத விதமாகப் போர் மூண்டால் ரஷ்யாவின் படைபலத்தை எதிர்கொள்
வதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட நேட்டோ நாடுகள் உக்ரைனைப் பலப்படுத்துவதற்காகப் பேரழிவு ஆயுதங்
களை அந்நாட்டில் குவித்துவருகின்றன. உக்ரைன் அதன் முன்னரங்குகளைப் பாதுகாப்பதற்குரிய வெடிமருந்துகள், போர்த் தளவாடங்கள்(front-line defenders) அடங்கிய 90 தொன் ஆயுதப் பொருள்
களை அமெரிக்கா அங்கு இறக்கியுள்ளது
நேட்டோவோடு இணைந்த கிழக்கு ஐரோ
ப்பிய நாடுகளில் மட்டுமன்றி டென்மார்க், சுவீடன்,நோர்வே போன்ற நாடுகளிலும் கூட எல்லைப் பகுதிகளில் கவச வண்டி
களது நகர்வுகளைக் கண்டு மக்கள் அதி
சயிக்கின்றனர்.
ஐரோப்பா இதுபோன்ற போர் ஆயத்தக்
காட்சிகளைக் காண்பது கடந்த பல தசாப்
தங்களில் இதுவே முதல் முறை. ரஷ்யா
உக்ரைனை ஆக்கிரமித்தாலும் நேட்டோ
நாடுகள் போரில் நேரடியாகத் தலையி
டுமா? போரைத் தவிர்க்க ரஷ்யாவின் நிபந்தனைகள் என்ன?ரஷ்யாவை அடி
பணிய வைப்பதற்கு மேற்கு நாடுகள் வைத்திருக்கின்ற பொருளாதார ஆயுதம் எது? என்பன போன்ற பல விவரங்களை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

(படம் :உக்ரைன் எல்லையில் பல்குழல்
பீரங்கிகள். நன்றி :ரோய்ட்டர்)
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
“அலரி மாளிகையைவிட்டு வெளியேறமாட்டேன்” என்று அடம்பிடித்துக்கொண்டு பிரதமர் பதவியை தனது கழுத்துப்பட்டியைப்போல கொழுவியவாறு கடந்த ஒக்டோபர் மாதம் ஜனநாயகம் பேசிய ரணிலை –
இன்று, அதே ஜனநாயகத்தை சாட்டைபோல வீசி அந்த அலரி மாளிகையிலிருந்து கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள் ராஜபக்ச சகோதரர்கள்.
விடுதலைப்புலிகள் உட்பட தன்னோடு உறவாடிய எல்லாத்தரப்பிற்குள்ளேயும் வெடி வைத்து தனது பிரித்தாளும் சூட்சுமங்களை அரங்கேற்றி விளையாடிய ரணிலுக்கு “பதிலுபகாரமாக” அவரது ஐக்கிய தேசிய கட்சியை சல்லி சல்லியாக உடைத்து பொறுக்கி எடுத்துக்கொண்டு போகச்சொல்லியிருக்கிறார்கள் ராஜபக்ஷக்கள்.
“ஒட்டுமொத்த கிரிமினல்களும் கிரீடம் சூடிக்கொண்டு நின்று இந்த நாட்டை ஆளப்போவதாக அறைகூவுகிறார்களே” – என்று ஆளுக்காள் முழியை பிதுக்கினாலும், ராஜபக்ஷக்களின் இந்த வெற்றியை இலகுவாக எடைபோட்டுவிடமுடியாது.
இதன் பின்னணியில் மகிந்த என்ற “சிங்களவர்களின் பிரபாகரன்” கடந்தவந்த பாதையும் அதற்காக அவர் போட்ட கணக்குகளும் உலகளாவிய ரீதியில் மிகப்பெறுமதிவாய்ந்த அரசியல் சூத்திரங்கள். அவற்றை அணுகுவதும் அவிழ்ப்பதும் அவர்போன்ற ஒரு சிலரால் மாத்திரமே முடியும்.
அரசியலில் விழ விழ எழுந்துவிடக்கூடிய அசாத்தியமான திறமைகொண்டவர் மகிந்த என்பது அவரது வரலாறு அறிந்தவர்கள் தெரிந்திருக்கக்கூடும்.
ஒரு காலத்தில், சிறிலங்கா சுதந்திர கட்சி என்ற பலமான அமைப்பு ஜேஆரினால் கொடூரமாக துண்டாடப்பட்டு, சிறிமாவின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அந்தக்கட்சியிலிருந்தவர்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அடைக்கலம் தேடினால்தான் தலை தப்பும் என்றளவுக்கு கட்சி தாவி அந்தப்பராம்பரிய கட்சியே அம்மணமாக நின்றபோது, அப்போதிருந்து அந்தக்கட்சிக்கு ஆடை கட்டத்தொடங்கியவர் மகிந்த.
கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை மீளக்கட்டியெழுப்பி, எங்கெங்கோ இருந்தவர்களையெல்லாம் கட்சிக்குள் கொண்டுவந்து, தன்னை முன்னிறுத்தாமல் கட்சியை முன்னிறுத்திக்கொண்டு அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர். பின்னர், சந்திரிகா ஜனாதிபதியானபோது அவரது அரசில் அமைச்சராகி, தொடர்ந்தும் “கட்சிக்காக” என்ற விடயத்தில் உறுதியாக நின்றுகொண்டவர்.
அரசியலின் அடிமுதல் நுனிவரை தெரிந்த அந்த உழைப்புத்தான் அவரை 2005 இல் நாட்டின் ஜனாதிபதியாக்கியது.
2015 தோல்வியை அவர் எதிர்பார்க்கவே இல்லை. பிடரியில் அடித்து கிரீடத்தை பறித்துவிட்டதைப்போல திகைத்துப்போயிருந்தார். பெருந்தோல்வியோடு தலை கவிழ்ந்தபடி சொந்த ஊருக்கு சென்றபோது, சிங்கள மக்கள் சாரி சாரியாக பஸ்களில் அவரிடம் சென்றார்கள். எல்லோருக்கும் பாற்சோறு கொடுத்துவிட்டு “தன்னை தமிழர்கள் தோற்கடித்துவிட்டார்கள்” – என்று அவர்களது இதயத்தில் இறங்கி நின்று பேசினார்.
அன்றைக்கு அவர் முடிவெடுத்தாரோ இல்லையோ, சிங்கள மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள், தங்கள் தலைவனை மீண்டும் அரியணை ஏற்றுவதென்று.
தோல்வியின் வலி உள்ளே அவரை உருட்டியபடியே இருந்தது. 70 வயதிலும் பாதயாத்திரை போனார். அரசுக்கு எதிரான போராட்டத்தில் கோமளிக்கூட்டங்களான விமல் வீரவங்ஸ போன்றோருடன் எல்லாம் நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் போனார்.
தான் ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் தனக்கு எழுந்து நின்ற அந்த நாடாளுமன்றத்தில், மற்றவர்கள் வரும்போது அவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திக்கொண்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி என்ற நினைப்பை அப்படியே மூட்டைகட்டி வைத்துவிட்டு நான்கு வருடங்களாக ஒரு இலக்கோடு திட்டத்தை வகுத்துக்கொண்டே வந்தார்.
வன் சக்திகளை டீல் பண்ணுவதற்கு கோத்தாவை இறக்கிவிட்டார். சிங்கள லிபரல்களை டீல் பண்ணுவதற்கு சாமல் ராஜபக்ஷவை இறக்கவிட்டார். “தக்க வகையில்” டீல் பண்ணவேண்டிய பெரும் பெரும் டீல் மண்டைகளை கழுவுவதற்கு பசிலை இறக்கிவிட்டார். சிறுபான்மையினரோடு டீல் பண்ணுவதற்கு மகன் நாமலை இறக்கிவிட்டார். திட்டங்களை புதுப்பித்துக்கொண்டேயிருந்தார்.
தனக்கு முன்னாலிருந்து எல்லா வேலிகளையும் எல்லா முட்களையும் இஞ்ச் இஞ்சாக தெரிந்துவைத்திருந்த காரணத்தினால், எங்கு குனியவேண்டும் எங்கு குதிக்கவேண்டும் என்று நேர்த்தியாக தெரிந்து வைத்திருந்தார்.
2015 இல் தோற்றார்.
2018 இலும் ஒக்டோபர் புரட்சியில் தோற்றார்.
ஆனால், 2019 இல் சொல்லிவைத்தது போல அடித்தார்.
ஆட்சியை பிடித்தார்.
அதுவும் சும்மா வெற்றியில்லை வெற்றிலையில் மைபோட்டு பிடித்த வெற்றியும் இல்லை.
இலங்கையின் வரலாறு காணாத சாதனை மிகுந்த வெற்றி. அதுவும் ஒட்டுமொத்த சிங்களவர்களையும் தனது கைக்குள் வைத்துக்கொண்டு, தமிழர்களை கசக்கி எறிந்த வெற்றி.
உண்மையை சொல்லப்போனால், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிங்கள படைகளினால்தான் தோற்கடிக்கப்பட்டார்கள். 2019 ஜனாதிபதி தேர்தலில்தான் சிங்கள மக்களினால் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
இவ்வளவு விடயங்களையும் வாசிக்கும் ஒரு தேசியக்குஞ்சுக்கு எனக்கு மண்டையிலேயே வெடிவைக்கவேணும் போலத்தானிருக்கும். ஆனால், இந்த உண்மைவரலாற்றில் இருக்கின்ற உழைப்பையும் அரசியல் சூழ்ச்சிகளையும் அரசியல் பாதைகளையும் பயிலாதவரை தமிழர்கள் “வீடிழந்த விக்னேஸ்வர்களாகத்தான்” அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கவேணும்.
வெறுமனே வீரத்தமிழர்கள், சூரத்தமிழர்கள் என்று நாக்கை வெளியில் தள்ளிக்கொண்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடித்திரிவதல்ல வீரம். வீழ்ந்தால் எழுவதும், சமயத்தில் விட்டுக்கொடுப்பதும்கூட வீரம்தான்.
தமிழர்கள் போர்க்குற்றவாளி போர்க்குற்றவாளி என்று கடந்த பத்து வருடங்களாக குடல் தெறிக்க கத்தியவனை இன்று சிங்கள தேசம் தனது தலைவன் என்று அறிவித்துவிட்டது. “உங்களுக்கு கண்களுக்கு கொடூரமான குற்றவாளியாக தெரிபவன்தான் எங்களது தலைவன்” என்று இன்று கோத்தபாய உட்பட அனைவருக்கும் வெள்ளையடித்து வெளியே விட்டிருக்கிறது சிங்கள தேசம். தமிழ் மக்களின் முகங்களில் ஓங்கி அறைந்திருக்கும் இந்த ஆணையிலிருந்து வெளியே வருவதென்றால் –
– ஒரே ஒரு வழிதானுள்ளது.
– அதுதான் மகிந்த வழி.
ப.தெய்வீகன்
]]>
சிறிலங்காவில் இன்று நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் உருவாகப்போகும் ஆட்சியானது அடுத்து ஒரு தசாப்த காலத்துக்கு அந்த நாடு எவ்வாறு உருப்படப்போகிறது என்பதற்கு பதில் சொல்லப்போகிறது. இந்த தேர்தலின் பின்னணியில் இருக்கின்ற விநோதமான உண்மைகளையும் சமன்பாடுகளையும் அரசியல்வாதிகள் புரிந்துவைத்திருக்கிறார்களே இல்லையோ இனிமேல் மக்கள் புரிந்துகொண்டால்தான், கைக்காசு மிஞ்சுமளவுக்காவது பிரயோசனம் வந்து சேரும்.
1) கோத்தபாய தரப்பு இந்தத்தேர்தலில் தோல்வியடைந்தால், மகிந்த தரப்புக்கு கிடைக்கப்போகும் hat-trick தோல்வியாக இது அமையும். ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலிலும் தோற்று – குறுக்கு ஒழுங்கை வழியாக வந்து பிரதமர் பதவியை முழுங்கப்பார்த்த அந்த முயற்சியும் தோல்வியுற்று, கடைசியில் இந்த தேர்தலிலும் தோல்வியுற்றால் – அது அவர்களுக்கு சகடை போட்ட குண்டுபோலத்தானிருக்கும்.
அவர்களுக்கு முன்னர் ஏற்பட்ட இரண்டு தோல்விகளும் சிறுபான்மையினரால்தான் ஏற்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் மைத்திரிக்கு வாக்களித்து காரியத்தை சாதித்தனர். பிரதமர் பதவி விகாரத்திலும் தமிழ் – மூஸ்லிம் எம்பிக்களை எவ்வளவு கிளப்புவதற்கு பார்த்தும் முடியாது போன விஷயமாக மகிந்த தரப்பு தோற்றுப்போனது. ஆகவேதான், இன்றைய தேர்தலில் மகிந்த தரப்பு தங்களுக்கு கிடைக்க முடியாது என்று கருதும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை இயன்றளவு சிதறடிப்பதற்கு வழிபார்த்துவிட்டு, சிங்கள மக்களிடம் ஒட்டுமொத்தமாக காலில் விழுந்திருக்கிறது.
ஆக, சிறுபான்மையின மக்கள் இன்றைய தேர்தலை பார்க்கவேண்டிய வியூகம் எப்படியிருக்கும் என்றால், சஜித்தை பயன்படுத்தி கோத்தாவுக்கு விழக்கூடிய சிங்கள வாக்குகளை பதிலுக்கு சிதறடித்து, வெற்றியை தமக்காக்கிக்கொள்ளவேண்டும். இதன் மூலம் சஜித்தை ஆட்சிக்கு கொண்டுவரவேண்டும். இதனைத்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் செய்திருக்கிறது. ஏனெனில், சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் தேர்தல்கள், யாரைக்கொண்டுவருவது குறித்தானது அல்ல. யாரைக்கொண்டுவரக்கூடாது என்பது குறித்த அடிப்படையிலேயே இருக்கவேண்டும். இது சிறிலங்காவில் மாத்திரமல்ல, உலகெங்கிலுமுள்ள அரசியல் தத்துவம். அதனைச்செய்வதற்கு முதலில் தேர்தலில் பங்குகொள்ளவேண்டும்.
2) 2015 ஆம் ஆண்டு தமது கை விழுந்துபோனதிலிருந்து தொடர்ச்சியாக தமது யுத்தவெற்றி வாதத்தை மூலனமாக வைத்து அரசியல் செய்துகொண்டுவருபவர்கள் மகிந்த தரப்பு. கடந்த நான்கு வருடங்களாக அவர்கள் ஓயவே இல்லை. ஐக்கிய தேசிய கட்சி போலவோ சிறுபான்மை கட்சிகளைப்போலவோ சாக்கு கட்டிலில் படுத்துக்கிடந்துவிட்டு அவ்வப்போது எழுந்தோடிச்சென்று அரசியல் செய்யவில்லை. ஓயாது தங்களை இந்த ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பணி செய்தவர்கள். அவர்கள் எல்லா கணக்குகளும் சரியா அமைந்தால், இன்று அவர்களது வெற்றி உறுதிப்படுத்தப்படுமானால், அது அவர்களது முயற்சிக்கு கிடைத்த வெற்றியென்றுவிட்டு, புட்டத்தை தட்டிவிட்டு போகவேண்டியதுதான். ஏனெனில், அவர்களை எந்த வகையிலும் விமர்சிக்கும் வகையில் இலங்கையின் எந்த அரசியல் தரப்பும் வேலை செய்யவில்லை. அரசியில் அணிகள்தான் முக்கியமே திவிர, ஆட்கள் அல்ல. அதனை சரியாக புரிந்து வேலை செய்தவர்கள் மகிந்த தரப்பினர்.
3) 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர், இலங்கை நாடாளுமன்ற அரசியலுக்குள் சென்றுவிட்ட, தமிழரின் அரசியலானது அதன் உறுதிப்பாட்டுடன் இணைந்து பயணிக்கவேண்டிய நிலையிலேயே உள்ளது. கொழும்பை குழப்பி அந்த குட்டையில் எமக்குத்தேவையான மீனைப்பிடிக்கலாம் என்ற காலமெல்லாம் போய்விட்டது. குழப்பிவிட்டு, பிடிப்பதற்கு இப்போது எங்களிடம் “கொக்கியே” இல்லை. வந்தது விக்கி மாத்திரம்தான். அதுவும், ஏதேதோ பேசிக்கொண்டு முக்கியபடியுள்ளது.
ஆக, கொழும்பு அரசியல் எவ்வளவுக்கு எவ்வளவு ஸ்திரமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவுதான் தமிழருக்கு எதையாவது பெற்றுக்கொள்ளலாம். அதற்காககத்தான், இவ்வளவு காலமும் தொடர்ந்தும் மத்தியிலுள்ள அரசு விழுந்துவிடாமல் முட்டுக்கொடுப்பது மாத்திரமல்லாமல், விரும்பிய அரசினைக்கொண்டு வருவதற்கும் முயற்சிகளையும் செய்துகொண்டேயிருக்கிறது தமிழ் கூட்டமைப்பு. இந்த தடவை தேர்தலிலும் அதனைத்தான் செய்திருக்கிறது. ஆனால், அதற்காக சம்பந்தரின் வேட்டியை உருவுவதிலேயே குறியாக நிற்கின்ற கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், விக்கி தரப்பெல்லாம், ஒட்டுமொத்த தமிழ் மக்களையே அம்மணமாக்கிவிட்டு, அந்த வேட்டியில் கோத்தபாயவுக்கு தலைப்பாகை கட்டுவதற்கு வெறிபிடித்து நிற்கும் அழகைப்பார்க்கும்போது, காறி உமிழவேண்டும் போலிருக்கிறது.
4) ஆனால், சம்பந்தரைப்பொறுத்தவரை, கஜே – விக்கி – சிவாஜி வகையாறாக்கள் போடுகின்ற குதியோட்டத்தையும் நல்ல காரியமாகவே பார்க்கிறார். ஏனென்றால், இந்த தேர்தலில் மாத்திரமல்ல எந்த தேர்தலிலும் எல்லா தமிழ் கட்சிகளும் ஓரணியில் நின்றால், அது சிங்கள மக்களுக்கு மிகப்பெரியதொரு அச்சுறுத்தலாக அமைந்திருக்கும். அந்த தமிழர் ஒற்றுமையை காண்பித்து, “பார்த்தீர்களாக மக்களே” என்று சிங்கள மக்களை நோக்கி விழித்து, கோத்தா தரப்பு, எப்போதுமே தமிழரை அச்சுறுத்தல்மிக்கதொரு சக்தியாக சிங்கள மக்கள் மத்தியில் கட்டியமைத்திருப்பர். இப்போதைக்கு, சிங்கள மக்கள் மத்தியிலிருக்கும் தமிழர் தொடர்பான ஒரேயொரு திருப்தியான விடயம் என்றால், அது “தமிழர்கள் ஒற்றுமையில்லாதவர்கள்” – என்பது மாத்திரமே. ஆக, அதையே வைத்து சம்பந்தரும் அரசியலை செய்திருக்கிறார். ஏனென்றால், சம்பந்தருக்கு நன்றாகவே தெரியும். தமிழர்களின் மத்தியில் காமடியன்கள் போடுகின்ற குதியோட்டத்தை தமிழர்கள் ஒருபோதும் கணக்கெடுப்பதில்லை என்று. விக்கியும் கஜேயும் தொன்றுதொட்டு இன்றுவரைக்கும் போடுகின்ற எல்லா ஆட்டங்களையும் சம்பந்தர் கண்களை மூடிக்கொண்டே ரசிப்பதற்கு காரணமும் இதுதான்.
ஒற்றுமை என்பது ஒரு கலைச்சொல். அவ்வளவுதான். அதற்கு அரசியில் உள்ள அர்த்தமே வேறு. அதனை தமிழர்களின் மத்தியில் புரிந்துகொண்டவர்களில் சம்பந்தர் தலைமையானவர்.
இவற்றின் பின்னணியில் இன்று நடைபெறப்போகும் வெட்டாட்டத்தை பார்ப்போம்!
ப. தெய்வீகன்
]]>
அமெரிக்காவுக்கு காத்திருக்கும் சவால்!
இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அடுத்தபடியாக இப்போது இலங்கையில் அதிகம் பரபரப்பாக பேசப்படுவது, அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு பற்றிய கதைகள் தான்.
அமெரிக்கா – இலங்கை இடையே செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இரண்டு நாடுகளினதும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கும் சவாலானதாக உள்ளன.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே, திருகோணமலையில் அமெரிக்கா தளம் அமைப்போகின்றது என்றும், இலங்கையில் கால் வைக்கப் போகிறது என்றும், மஹிந்த அணியில் இடம்பெற்றிருக்கின்ற திஸ்ஸ விதாரண, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்கள் கூறிவந்தனர்.
ஆனால், அதற்கான வாய்ப்புகளே இல்லை என்று மறுக்கப்பட்டு வந்திருக்கின்ற போதும் அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டு வருகின்ற வேகமான நெருக்கம், எதுவும் நடக்கலாம் என்றொரு கருத்தையே பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு, முன்னெப்போதும் இல்லாதளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள நிலையிலும் இலங்கையில் தளம் ஒன்றை அமைக்கின்ற அளவுக்கு அமெரிக்கா செல்லவில்லை என்பதே உண்மை.
இலங்கையில் அமெரிக்கா தளம் ஒன்றை அமைக்கும் திட்டத்துக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் வரும் என்பதையும், இந்தியாவும் விரும்பாது என்பதையும், அமெரிக்காவும் அறியும், இலங்கை அரசாங்கமும் அறியும்.
எப்போதும் தனது காலடியில் இருக்க வேண்டும் என்று விரும்பும் இந்தியாவுக்கு, அமெரிக்க தளம் ஒன்று இலங்கையில் அமைவது அச்சுறுத்தலானதாகவே இருக்கும்.
இப்போதைய சூழலில் அமெரிக்காவும் இந்தியாவும் நட்பு நாடுகளாக இருக்கலாம். அதுவே நிலையானது நிரந்தரமானது என்று கூற முடியாது. எனவே அமெரிக்காவோ வேறு எந்த நாடோ இலங்கைத் தீவில் தளம் அமைத்து நிலை கொள்வதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது, அனுமதிக்காது.
இலங்கையில் அமெரிக்கா தளம் அமைக்க முனையும் போதும் இந்தியப் பெருங்கடலில் தனக்கு அருகேயுள்ள பகுதியில் பதற்ற நிலை, தீவிரமடையும் என்பதை இந்தியா அறியும்.
அப்படியானதொரு நிலையானது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே பிராந்திய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், இந்தியாவுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டும் இலங்கையில் தளம் ஒன்றை அமைத்து அதனைச் சீண்டுவதற்கு அமெரிக்கா முற்படாது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸும் வேறு பல தூதரக அதிகாரிகளும், இலங்கையில் தளம் அமைக்கும் திட்டம் ஏதும் அமெரிக்காவுக்கு கிடையாது என்றும், அதற்கான திட்டங்கள் எதையும் முன்வைக்கவில்லை என்றும் திரும்பத் திரும்ப மறுத்தாலும், அந்த வதந்தி இன்னமும் மாறி மாறி சுற்றிக் கொண்டே இருக்கிறது.
இலங்கையில் அமெரிக்காவின் தளம் அமைவதற்கான சூழலும், வாய்ப்பும் இல்லை என்பது, திஸ்ஸ விதாரண போன்ற மஹிந்த விசுவாசிகளுக்கு நன்றாகவே தெரிந்தாலும், சிங்கள மக்களை உசுப்பேற்றுவதற்கு, அவர்கள் மத்தியில் தற்போதைய அரசுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி விடுவதற்கும் இது போன்ற வதந்திகள் அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றன.
இந்த வதந்திகளை முறியடித்துக் கொண்டே இரு தரப்பு பாதுகாப்பு உறவுகள் ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் அமெரிக்காவும் இலங்கையும் சவால்களை எதிர்கொள்கின்றன.
இலங்கையுடன் சோபா எனப்படும் படைகளை நிலைப்படுத்தல் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது என்ற கதை கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே அரசியல் வட்டாரங்களில் உலாவி வந்தது.
1995ஆம் ஆண்டு சந்திக்கா குமாரதுங்க அரசாங்கத்துடனும், அதற்குப் பின்னர், 1997ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடனும், அமெரிக்கா செய்து கொண்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு காலாவதியாகிய நிலையில் அதனைப் புதுப்பிக்க அமெரிக்கா முற்பட்டதில் இருந்தே இந்த கதைகள் உலாவத் தொடங்கி விட்டன.
மஹிந்த அணியைச் சேர்ந்த விமல் வீரவன்ச, ஜேவிபியின் பிமல் ரத்நாயக்க போன்றவர்கள் தான் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு உடன்பாட்டு முன்மொழிவு தொடர்பான தகவல்களை வெளியிட்டனர்.
அப்போது இலங்கையும் சரி அமெரிக்காவும் சரி புதிய பாதுகாப்பு உடன்பாடு எதுவும் முன்மொழியவில்லை என்றே கூறி வந்தன. அமெரிக்கா புதிதாக எந்த உடன்பாட்டு முன்மொழிவையும் சமர்ப்பிக்கவில்லை என்று இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் கூறியிருந்த நிலையில் இப்போது புதிய உடன்பாடு குறித்து பேசப்பட்டு வருவதாக கூறியிருக்கின்றன.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையும் அமெரிக்காவும், கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டை புதுப்பித்துக் கொண்டிருந்தன.
அதில் மேலும் திருத்தங்கள் செய்யவுள்ளதாகவும், காலமாற்றத்துக்கு ஏற்ப புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட உள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் கடந்த வாரம் கூறியிருந்தார்.
சோபா உடன்பாட்டினால் இலங்கையின் இறைமைக்கு ஆபத்து வராது என்றும் அவர் கண்டியில் திட்டவட்டமாக கூறியிருந்ததன் மூலம் சோபா உடன்பாட்டை இலங்கையுடன் செய்து கொள்ளும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என்பது உறுதியாகியிருக்கிறது.
அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாட்டு வரைவின் சில உள்ளடக்கங்கள் பெரும் சந்தேகங்களையும் பீதியையும் சிங்கள அரசியில் மட்டங்களில் ஏற்படுத்தியிருக்கின்றன.
இலங்கைக்கு வரும் அமெரிக்க படையினர் தவறுகளை இழைத்தால் இலங்கையின் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்களிக்கும் ஒரு விதிமுறையும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட விலக்கு உரிமை ஆபத்தானது, இலங்கையின் இறைமையை மீறுகின்ற விடயம் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க்கொடி உயர்த்தியிருந்தன.
இதற்கு பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமெரிக்காவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதுபற்றி நடத்திய பேச்சுகளின் போது அமெரிக்க படையினருக்கு சட்ட விலக்குரிமை அளிக்க முடியாது என்று தெரிவித்து விட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அது மாத்திரமின்றி கோத்தபாய ராஜபக்சவினால் கையெழுத்திடப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டில் அமெரிக்க படையினருக்கு சட்ட விலக்கு அளிக்கும் பிரிவும் இருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு உடன்பாடுகளையும் தனக்குத் தெரியாமல் கையெழுத்திட கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார் என்றும் ஒரு தகவல் உள்ளது.
திலக் மாரப்பன சட்டமா அதிபராக இருந்தவர். சட்ட நிபுணர்களில் ஒருவர். பாதுகாப்பு அமைச்சராகவும் நாட்டின் தலைவராகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் போது அவருக்கு தெரியாமல் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
அவ்வாறான உடன்பாடு வலுவற்றது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதுபோலவே நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதிக்கு தெரியாமல் இலங்கையுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டினால் எந்தப் பயனும் கிடைக்காது என்பது அமெரிக்காவுக்கும் தெரியும்.
அப்படியிருக்க இரண்டு நாடுகளும் சோபா உடன்பாட்டில் அவ்வளவு விரைவாக கையெழுத்திடும் நிலை உருவாகும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
அதேவேளை அமெரிக்காவைப் பொறுத்தவரையில் கொழும்பில் தனக்குச் சாதகமான ஒரு அரசாங்கம் இருக்கும் போதே தமக்குத் தேவையான உடன்பாடுகளை செய்து கொண்டு விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
சோபா உடன்பாட்டை நோக்கி அமெரிக்கா நகர்த்தும் காய்களில் இருந்து அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை மிகவலுவான நிலையில் வைத்திருப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறது. அதற்காகவே தற்போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கான உச்சபட்ச முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
இலங்கையின் வரலாற்றில் அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் மிக நெருங்கிய உறவுகளும் ஒத்துழைப்புகளும் நிலவிய காலப்பகுதியாக 2015 – 2019ஐ சந்தேகமின்றிக் குறிப்பிடலாம்.
பாதுகாப்பு ரீதியாக இரண்டு நாடுகளும் இந்தக் காலப்பகுதியில் தான் மிக நெருக்கமான ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனை மேலும் விரைவாக்கிக் கொள்வதற்கும் அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கும் சோபா உடன்பாட்டை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா முற்படுகிறது.
அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கிளார்க் கூப்பர் இந்த வாரம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணமும் இதனை அடிப்படையாகக் கொண்டது தான்.
இவர் இலங்கையில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் கலந்துரையாடவுள்ள முக்கியமான விடயங்களில் பிராந்திய பாதுகாப்பு, அமைதிகாப்பு, கண்ணிவெடிகள், வெடிபொருட்களை அகற்றல், தீவிரவாத முறியடிப்பு மற்றும் ஏனைய பரஸ்பர நலன்கள் கொண்ட விவகாரங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.
இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை உச்சநிலைக்கு கொண்டு செல்ல விரும்பும் அமெரிக்காவுக்கு சிங்கள – பௌத்த தீவிரவாத நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் உள்ள இடதுசாரிகளும் தான் சவாலாக இருக்கின்றார்கள்.
அவர்கள் எப்போதும் அமெரிக்காவைச் சந்தேகத்துடன் பார்க்கின்ற நிலை காணப்படுவதுடன் அமெரிக்காவை வைத்து அரசியல் நடத்தியும் வருகின்றனர்.
இவர்களைச் சமாளித்து இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடுகளை வலுப்படுத்திக் கொள்வது அமெரிக்காவுக்கு ஒன்றும் அவ்வளவு இலகுவானதாக இருக்கும் போலத் தெரியவில்லை.
எழுத்தாளர் Subathra
]]>
அடுத்தடுத்து என்ன நடக்கும்? மைத்திரியை அண்மிக்கும் நெருக்கடிகள்!
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலை குண்டுதாக்குதல்களை நடத்திய குண்டுதாரிகளுடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்து அமைச்சர் றிசாட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
எனினும் இவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் எவ்வித கருத்தையும் கூறவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் ஜனாதிபதிக்கு 24 மணி நேர காலக்கெடு வழங்கியிருந்தார்.
அமைச்சர் றிசார்ட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்க இந்த காலக்கெடுவை வழங்குவதாக அத்துரலியே ரதன தேரர் கடந்த 28ஆம் திகதி அறிவித்திருந்தார்.
அத்துடன், ஜனாதிபதி இந்த காலக்கெடுவுக்குள் மேற்படி மூவரையும் பதவிகளில் இருந்து நீக்கவில்லை என்றால், பெரிய தீர்மானத்தை எடுக்க போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
எனினும் இந்த விடயம் தொடர்பான எந்த நகர்வுகளையும் ஜனாதிபதி எடுத்ததாக தெரியவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அமைச்சர் றிசார்ட் பதியூதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவியில் இருந்து நீக்குமாறு கோரியுள்ளதுடன், இந்த மூன்று பேருக்கும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் தற்போது கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் பயன்படுத்தப்படுகிறது.
அவர் அங்கு கடுமையான இனவாதத்துடன் செயற்படுவதாக தமிழ் – சிங்கள மக்களிடையே குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்படுகிறது. இலங்கையில், ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது கிழக்கின் ஆளுநராக ஹிஸ்புல்லாவே இருந்தார்.
இதற்குப் பின்னரும், அவர் இனவாதமாக செயற்பட்டுள்ளார். தமது சமூகத்தினருக்காக மட்டும் தான் அவர் செயற்பட்டுள்ளார். இது ஆளுநர் ஒருவருக்கான தகுதியல்ல. அவர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், மேல் மாகாணத்தின் ஆளுநர் அசாத் சாலியும் கடுமையான போக்குடன் நடந்து கொள்கிறார். அமைச்சர் றிசார்ட் பதியூதீனும் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு குற்றங்களில் நாட்டில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவை பாரதூரமான விடயங்களாகும். இதனால், இவர்கள் மூவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இந்த நடவடிக்கையை ஜனாதிபதி உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
எனது உயிர் போனாலும், இந்த விடயங்களில் இருந்து நான் என்றும் பின்வாங்க போவதில்லை என்பதையும் கூறி கொள்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயத்தை நாம் சாதாரணமாக பார்க்க முடியாது.
கடந்த காலத்தில் பௌத்த துறவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் சாதகமான பதில்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அத்துரலிய ரத்ன தேரரின் எதிர்ப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்விதமான பதிலை வழங்க போகிறார் என்பது கேள்விக்குறியே.
ஜனாதிபதி, பௌத்த பிக்குமாரின் கோரிக்கைக்கு கட்டுப்படுவாரா? இல்லையெனில் இவர்களை எதிர்த்து ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி, றிசார்ட் பதியூதீன் ஆகியோருக்கு ஆதரவாக செயற்படுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
]]>ஐநா தீர்மானம் மற்றும் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் என்னுடன் பேச அனுமதி வழங்காமல் இருக்க உத்தேசித்துள்ளேன்; இந்த விவகாரத்தை அப்படியே மூடிவைத்து விட வேண்டும் என்று கூறும் திமிர் எங்கிருந்து வந்தது இலங்கை அதிபருக்கு? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிவந்த நிலையில், இது தொடர்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈழத் தமிழின அழிப்பு தொடர்பாக, 2002 முதல் 2011ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை ஆராய ஐநா மனித உரிமைக்குழு உத்தரவிட்டது.
அந்த விசாரணையின் இவ்வாண்டுக்கான அறிக்கையை கடந்த பிப்ரவரி 22ந் தேதி தொடங்கி இந்த மார்ச் 25ந் தேதி முடியவுள்ள 40ஆவது மனித உரிமைக் கூட்டத் தொடரில் முன்வைத்தார் ஐநா மனித உரிமை ஆணையர் சையத் அல் ஹுசைன்.
அதில் 2009 ஈழத் தமிழின அழிப்பு, படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவையும் இந்த மனித குல விரோத குற்றங்கள் மீதான விசாரணையில் சிங்கள அரசு காட்டிவரும் அலட்சியப் போக்கும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு இடைக்கால நீதி வழங்குவதாக உறுதியளித்தபடி சிங்கள அரசு நடந்துகொள்ளாதது கவலையளிப்பதாக அறிக்கை கூறுகிறது. நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க, நீதியையும் நல்லிணக்கத்தையும் ஒருங்கே கொண்டுசெல்ல வேண்டிய கடமை இலங்கை அரசுக்கும் இலங்கை மக்களுக்கும் உள்ளது என்றும், அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது மிக அவசியம் என்றும் வலியுறுத்துகிறது அறிக்கை.
நல்லிணக்க திட்டங்கள் தொடர்பான பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டுசெல்ல குழுக்கள் அமைக்க வேண்டும்; இலங்கையில் ஐநா மனித உரிமை ஆணைய அலுவலகம் திறக்கப்பட வேண்டும்; ராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர் நிலங்களை விடுவிக்க வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக, பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய கலப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்கிறது அறிக்கை.
மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராகவும்கூட தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுகிறது; காவல்துறையின் அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள், பாலியல் வன்செயல்கள் ஆகியவை தொடர்ந்து நடக்கிறது என்றும் சொல்கிறது அறிக்கை.
இந்தக் குற்றங்களுக்காக, ராணுவத்தின் அனைத்துப் பிரிவினர், உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என வெளிப்படையாகவே எச்சரிக்க வேண்டும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்நிலையில், ஐநா உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்க மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் தேவை என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த அவகாசத்தை வழங்க பிரிட்டன் சார்பில் பிரேரணை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
அதேநேரம், ஐநா நிறைவேற்றும் எந்தத் தீர்மானத்தையும் இனி இலங்கை ஏற்றுக்கொள்ளாது; ஐநா தீர்மானத்தை வைத்துக்கொண்டு ராணுவத்தைத் தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்; எமது ராணுவத்தினரிடம் எவரும் நெருங்க முடியாது, அவர்களைத் தொடவே முடியாது என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா.
அதோடு, இனிமேல் ஐநா தீர்மானம் மற்றும் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் என்னுடன் பேச அனுமதி வழங்காமல் இருக்க உத்தேசித்துள்ளேன்; இந்த விவகாரத்தை அப்படியே மூடிவைத்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இப்படியான திமிர் எங்கிருந்து வந்தது இலங்கை அதிபருக்கு? அது இந்தியாவால் வழங்கப்பட்டதன்றி வேறென்ன? நாம் கூறுவதெல்லாம், ஐநா மனித உரிமைக்குழுவின் உத்தரவை நிறைவேற்றாத சிங்கள இலங்கையும் அதன் இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல் குற்றவாளிகளும் ஐநா பாதுகாப்பு அவை வழியாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே.
பன்னாட்டுச் சட்ட விதிகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட ஐநா உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை உலகத் தமிழர்கள், தமிழக மற்றும் இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாண அரசுகள் செய்ய வேண்டும்.
ஈழத் தமிழின அழிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுதான் அதற்கான நீதியாகும்! அதனைச் சாத்தியமாக்க, ஐநா மனித உரிமைக்குழு அறிக்கை அடிப்படையில் மேல்நடவடிக்கைக்கு அழுத்தம் தரப்பட வேண்டும் என உலகத் தமிழர்களையும் தமிழக மற்றும் இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசுகளையும் கேட்டுக்கொள்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
]]>
இலங்கை அரசியல் வரலாற்றில் இந்தளவு தூரத்திற்கு இனப்பிரச்சனை தீவிரமடைந்துள்ளது என்றால் தென்னிலங்கையில் ஆட்சிப் பீடம் ஏறிய தேசிய கட்சிகளே காரணம்.
தான் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பிரிவினைவாதமாக சித்தரித்து, அதிகாரப் பரவாலக்கல்கள் இடம்பெறுகின்ற போது நாட்டை பிரிப்பதற்கு ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் என்று பிரசாரங்களை மேற்கொண்டு நாட்டை இன்று அதள பாதாளத்தினுள் தள்ளிவிட்டிருக்கிறார்கள்.
தனிச் சிங்களச் சட்டமானது பெரும்பான்மைவாததத்pன் அடையாளமாக காணப்பட்ட நிலையில், அது பண்டாரநாயக்கவின் அதிகார ஆசையின் விளைவு. எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள மக்களை திருப்திப்படுத்த எடுத்த முடிவு நாட்டில் தீவிர பேரினவாத அரசியலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களுக்கு தனிச்சிங்களச் சட்டம் அநீதி இழைத்துவிட்டது என்று உணர்ந்த தந்தை செல்வா உட்பட்ட அன்றைய தமிழ்த் தலைவர்கள் தனிச்சிங்களத்திற்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினர். தமிழுக்கும் சம அந்தஸ்து கோரி பல சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
தமிழ் மக்களின் எதிர்ப்புக் காரணமாக பண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா ஆகிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. ஆனாலும் மாறி மாறி வந்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் அவை தன்னிச்சையாகவே தென்னிலங்கையினால் கிழித்துப் போடப்பட்டன.
தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் காலத்திற்குக் காலம் பல ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இறுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் ரணில் விக்கிரசிங்கவிற்கும் இடையில் ரணில் -பிரபா ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது. அதுவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கிழித்து எறியப்பட்டது.
இவ்வாறு தென்னிலங்கையில் ஆளும் தரப்பு தமிழ் மக்களுக்குத் தீர்வை முன்வைக்க முற்படுகின்ற போதெல்லாம் எதிர்த்தரப்பில் இருப்பவர்கள் எதிர்ப்பை வெளியிட்டு, அனைத்தையும் நாசமாக்கும் வேலையினை காலத்திற்குக் காலம் செய்து வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக மௌனித்து, பத்து வருடங்களை எட்டவுள்ள நிலையிலும், இன்னும் தமிழ் மக்களுக்கான தீர்வு கிட்டவில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தமிழ் மக்களின் ஆணையினை நாசுக்க கையேந்தி வாங்குகின்ற தென்னிலங்கை ஆட்சியாளர்கள், அதிகாரத்தை பங்கி;ட்டு வழங்குவதற்கு மட்டும் தென்னிலங்கையின் ஒப்புதலை எதிர்பார்த்துக் கிடக்கின்றனர்.
அதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 52 நாட்கள் தற்காலிக பிரதமராக செயற்பட்ட காலப்பகுதியில், தமிழ் மக்களுக்கான தீர்வினை தன்னால் மட்டுமே வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இரண்டு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றிய காலப்பகுதியில் அதனை செய்ய விரும்பவில்லை. மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு தமிழ் மக்களின் ஆணையினைக் கேட்கும் வகையில் அதிகாரப் பங்கீடு, தீர்வு என்றேல்லாம் பொய்யான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
மஹிந்தவின் தமிழ் தொடர்பான அக்கறையும், கருசனையும் போலியானவை என்பதை அவரின் செயற்பாடுகள் மீண்டும் நிரூபனம் செய்துள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கும், நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் புதிய அரசியல் அமைப்பினைக் கொண்டு வருவதற்கான முயற்சியினை எடுத்துவரும் வகையில் புதிய அரசியல் அமைப்பிற்கான வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் எனவும், புலம்பெயர் விடுதலைப்புலிகளின் தேவைக்கு ஏற்ப ரணில் அரசாங்கம் செயற்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துவருகின்றார்.
இத்தகைய பிரிவினைவாதக் கருத்துக்களைப் பகிர்ந்து சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அதனூடாக தனது அரசியலை மேற்கொள்ளவதற்கான எத்தனித்துவருகின்றார். மேலும் அவருடன் இருக்கின்ற, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உட்பட்ட தீவிர பேரினவாதத் தலைவர்களும் சிங்கள மக்களை குழப்பும் வகையில் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அதேவேளை பௌத்த குருமார்களையும் அச்சப்படுத்தி அவர்கள் ஊடாக நாட்;டு மக்களை திசைதிருப்பி, ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு இத்தகைய பௌத்த பேரினவாதிகள் முயன்று வருகின்றனர்.
உண்மையில் அதிகாரப் பகிர்வு என்பது நாட்டை ஒன்றுபடுத்துமே அன்றி பிளவிற்குள் கொண்டு செல்லாது. உலகில் முதன்மை ஜனநாயக நாடாக அறியப்;படும் சுவிஸில் பூரணமான அதிகாரப் பகிர்வு 26 மண்டலங்களுக்கும் (CANTONS) வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பிட்டளவு இராணுவத்தினர் சொந்தமாக வைத்திருப்பதற்கும் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் அதிகாரங்களை மாநிலங்களுக்கு வகுத்து வழங்கியுள்ளன. உண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள இன ரீதியான முரண்பாடுகளை உரிய வகையில் தீர்ப்பதற்கு சமாந்திரமாக பொருளாதார அபிவிருத்திகளும், அதிகாரப் பங்கீடுகளும் சகல தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும். அதிலும் யுத்தத்தின் கொடுமையினால் சகலவற்றையும் இழந்து தவிக்கின்ற தமிழ் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தி என்பது முக்கிய கூறாக இருக்கின்றது. இதனூடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மாற்ற வேண்டும்.
மேலும் வடக்கு கிழக்கு இணைப்பினை அடிப்படையாகக் கொண்ட, அதிகாரப் பகிர்வினை வலியுறுத்திப் பெற்றுக் கொள்வதன் ஊடாக எதிர் காலத்தில் ஏற்படும் இன ரீதியான ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும் தவிர்த்துக் கொள்ளலாம். இலங்கை அரசியலில் பண்டாரநாயக்க அன்று போட்ட இனவாத அரசியல் எதிர்காலத்திலும் தொடரப் போகிறது. ஆகவே ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் இருப்பையும் பாதுகாக்கும், வகையில் கூட்டமைப்பினர், பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிற்கு கொடுத்த ஆதரவினை அடிப்படையாகக் கொண்டு, உரிய அதிகாரப் பகிர்வினையும் தீர்வினையும் பெற்றுக் கொள்வதே சிறந்த சாணக்கியமாகும்.
பேரிவாத சிந்தனைவாத அரசியல்வாதிகளின் பொய்யான பிரசாரங்களுக்கு அஞ்சாமல் தற்துணிவுடன் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கள அர்ப்பணிப்புடன் பணியாற்றி, தமிழ் மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்பதே ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
பா.யூட்
]]>இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என இந்திய ஊடகமாக தினமணி தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரணில் விக்ரமசிங்க அதிபர் மைத்ரிபால சிறிசேனாவால் 50 நாள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவுகள் அரசியல் சாசனத்துக்கு முரணானவை என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்துவிட்டதன் பின்னணியில் வேறுவழியில்லாமல்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரணில் விக்ரமசிங்கவை அவர் மீண்டும் பிரதமராக நியமித்திருக்கிறார்.
கடந்த ஓர் ஆண்டாகவே அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருக்கவில்லை.
இலங்கையில் கடந்த ஜனவரி 2015-இல் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கிடையே மட்டுமல்ல, சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தன.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆட்சி அமைத்தன என்றாலும்கூட, இரண்டு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்பதுதான் யதார்த்த உண்மை.
உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. அதன் விளைவாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரிவு பெரும் வெற்றி அடைந்தது.
அதிபர் சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அதனால் ஆட்சி கவிழும் என்று எதிர்பார்த்த அதிபரின் எண்ணம் பொய்த்தது முதலே, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரம் காட்டத் தொடங்கினார் அதிபர் சிறிசேனா.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக, துணிந்து போர்க்கொடி தூக்கினார் அவரது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனா.
அதிபர் ராஜபக்சவை எதிர்த்து கடந்த 2015-இல் நடந்த அதிபர் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்றபோது அவர் இலங்கை அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடனான தலைவராக உயர்ந்தார்.
இவையெல்லாம் இப்போது பழங்கதையாகி விட்டிருக்கிறது. கடந்த அதிபர் தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு வாக்குறுதி அளித்ததுபோலவே இலங்கை அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு அதிபர் சிறிசேனா முற்றுப்புள்ளி வைத்தார்.
என்றாலும்கூட, அதிபரான பிறகு தனது அதிகாரம் கை நழுவிப் போவதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதைத்தான் அவரது நடவடிக்கைகள் எடுத்துரைக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் தற்போது அவர் எடுக்கும் முடிவுகளும், செயல்படும் முறைகளும்.
ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த தேசிய ஐக்கிய அரசு கொண்டுவந்த அரசியல் சாசன திருத்தங்களின் அடிப்படையில் இலங்கை உச்சநீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அதிபர் சிறிசேனா தன்னிச்சையாக கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றியதும், புதிய பிரதமராக மகிந்த ராஜபட்சவை அதே நாளில் நியமித்ததும் மட்டுமல்ல, ரணில் விக்ரமசிங்கவுக்குப் பெரும்பான்மை ஆதரவு காணப்படும் நாடாளுமன்றத்தை நவம்பர் 9ஆம் தேதி கலைத்து உத்தரவிட்டதும் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் சாசனத்தின் புதிய திருத்தங்களின்படி, நான்கரை ஆண்டுகள் நிறைவு பெறாமல் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. அப்படியே கலைப்பதாக இருந்தால், நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் நாடாளுமன்றத்தை அதிபர் கலைக்க முடியாது என்று இலங்கை அரசியல் சாசன சட்டப் பிரிவு 70(1) தெளிவுபடுத்துகிறது.
இதன் அடிப்படையில்தான் இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அதிபர் சிறிசேனாவின் உத்தரவுகள் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.
முந்தைய மகிந்த ராஜபக்சவின் செயல்பாடுகளின் விளைவாக இலங்கை ஏற்கெனவே மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. மிக அதிகமான வட்டிக்கு சீனாவிலிருந்து கடன் வாங்கி அதன் பாதிப்பில் சிக்கியிருக்கிறது.
இந்தியாவின் நலனுக்கு எதிராக கடந்த 2014-இல் ராஜபக்ச, சீனாவின் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதனால்தான் ஏற்பட்டது.
அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பெய்ஜிங்குக்குச் சென்று வந்ததைத் தொடர்ந்துதான் அதிரடி முடிவுகளை மேற்கொண்டு இலங்கையில் அரசியல் குழப்பத்துக்கு வழிகோலினார் என்பதை மறந்துவிட முடியாது.
இதன் பின்னணியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக சீனா செயல்படுவது தெளிவாகவே தெரிகிறது. வேறுவழியில்லாமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதனால், அதிபருக்கும் இவருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் மறைந்துவிட்டன என்றோ, மனக் கசப்புகள் தீர்ந்து விட்டன என்றோ, ராஜபட்ச முற்றிலுமாகப் பின் வாங்கிவிட்டார் என்றோ கருதிவிடலாகாது.
நாடாளுமன்றம் தனது நான்கரை ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்யும்போது அதிபர் சிறிசேனா இதே அஸ்திரத்தைப் பிரயோகிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
இலங்கையின் அரசியல் குழப்பத்துக்கு இப்போதைக்கு இடைவேளை விடப்பட்டிருக்கிறது. முற்றுப்புள்ளி விழுந்துவிடவில்லை.
]]>இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றபோதும் அடுத்து வரும் இரண்டு வருடக்காலம் தீர்மானமிக்கதாக இருக்கும் என்று தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டும். பொதுத்தேர்தல் 2020ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டும்.

இதற்குள் மாகாண சபை தேர்தல்களும் நடத்தப்பட வேண்டியுள்ளன. இந்தநிலையில் குறித்த மூன்று தேர்தல்களிலும் மூன்று முக்கிய கூட்டமைப்புக்கள் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் தற்போது இலங்கை அரசியலில் முன்னிலை வகிக்கின்றன.
எனினும் இந்த கட்சிகள், பெரும்பாலும் தேர்தல்களில் போட்டியிடும்போது பாரிய கூட்டமைப்பை அமைத்துக் கொண்டே போட்டியிடும் என்றும் தெ ஹிந்து எதிர்வுக்கூறியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் அரசியல் இன்னும் சில மாதங்களில் மீண்டும் பின்னடைவை காணும் என்று அரசியல் விமர்சகர்களை கோடிட்டு தெ ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
]]>