//anjeng #கொரனா – Mukadu https://www.mukadu.com Tue, 04 Jan 2022 16:13:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு! https://www.mukadu.com/2022/01/04/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af/ Tue, 04 Jan 2022 16:13:35 +0000 http://www.mukadu.com/?p=26162 பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள்
வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

அறிவியலால் ஆயுளைக் கூட்டலாம்
என்றவர்கள் தடுப்பூசி ஏற்றாமல் சாவு

பிரான்ஸில் 1980 களில் அறிவியல் புனைகதைத் தொடர் நிகழ்ச்சிகள் மூலம்
பிரபலமடைந்த தொலைக்காட்சி நட்சத்
திரங்களான இரட்டைச் சகோதரர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் கிலக்காகி அடுத்தடுத்து உயிரிழந்திருக்
கின்றனர்.

போக்டனோஃப் (Bogdanoff) சகோதரர்கள்
என அழைக்கப்பட்ட இகோர்(Igor) மற்றும்
கிறிச்க்கா (Grichka) இருவரும் ரஷ்யாவை
பூர்வீகமாகக்கொண்டவர்கள்.பிரான்ஸில்
1949 இல் பிறந்தவர்கள். 72 வயதான இருவரும் வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத நிலையில் பாரிஸ் பொம்பிடு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் சேர்க்கப்பட்டு ஆறு நாள்கள் இடைவெளியில் அடுத்த
டுத்து உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்
படுகிறது.

சகோதரர்கள் இருவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி எதனையும் ஏற்றிக்
கொள்ளவில்லை என்பதை அவர்கள்
தரப்பு வழக்கறிஞர் ஒருவர் உறுதிப்
படுத்தியுள்ளார். கடந்த டிசெம்பர் மாத
நடுப்பகுதியில் இருந்து இருவரும் மருத்
துவமனையில் சிகிச்சைபெற்று வந்தனர்

பிரான்ஸில் முதலாவது தொலைக்காட்சி
புனைகதை நிகழ்ச்சியைத்(science fiction show) தயாரித்துத் தாங்கள் இருவருமே அதனை நேரடியாகத் தோன்றித் தொகுத்துவழங்கி வந்த போக்டனோஃப் இரட்டையர்கள், அந்நாட்களில் அதன் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற அறிவியல் சகோதரர்களாக விளங்கினர்.1979 முதல் தொடர்ந்து 8ஆண்டுகள்”Temps X” என்ற பெயரில் அந்த நிகழ்ச்சி TF1 தொலைக்
காட்சியில் ஒளிபரப்பாகிப் புகழ் பெற்றது அதன் பிறகு இருவரும் அறிவியல்புனை கதை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்
ளனர்.

அமெரிக்காவின் நாசா வரை கவனத்தை
ஈர்த்த அவர்களது அறிவியல் புனைவுகள்
விஞ்ஞான உலகில் ஒரு தரப்பாரால் புகழப்பட்ட அதே வேளை மறுதரப்பில்
மிகவும் தரக்குறைவானவை என்று கூறி விமர்சித்து ஒதுக்கப்பட்டு வந்தன. முனை
வர் பட்டத்துக்காக இருவரும் சமர்ப்பித்த
விண்வெளி அறிவியல் தொடர்பான ஆய்
வுக்கட்டுரையைப் பிரான்ஸின் விண்ணி
யல் ஆய்வு நிலையமாகிய CNRS”குறை
வான அறிவியல் பெறுமானம் கொண்
டவை”என்று கூறி நிராகரித்திருந்தது.

தங்களை “வேற்றுக்கிரக வாசிகள்” எனக்
கூறிக் கொண்ட இந்த இரட்டையர்கள்
முகத்தோற்றங்களை மாற்றிக்கொள்வ
தற்காகப் பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சை
களைச் செய்து அபூர்வமாகத் தோன்றி
னர். கன்னங்கள், நாடிப் பகுதிகளில் செய்யப்பட்ட விகாரமான பிளாஸ்ரிக் சிகிச்சைகளால் ரசிகர்கள் மத்தியில் கேலிக்கு உள்ளாகினர்.இருவரும் உள் நாட்டிலும் உலகெங்கிலும் பரவலாக அறியப்பட்டமைக்கு முகங்களை மாற்றிக் கொள்வதற்காக அந் நாட்களில் செய்யப் பட்ட அறுவைச் சிகிச்சைகளும் காரணமா
கின.

அறிவியல் வளர்ச்சிகளால் மனிதனின்
ஆயுள் காலத்தை அதிகரிக்க முடியும் எனக் கூறிவந்தவர்கள் அறிவியல் உல
கம் கண்டுபிடித்த ஆயுதமாகிய கொரோ
னாத் தடுப்பூசியை ஏன் எற்றிக் கொள்ள
வில்லை என்ற கேள்விகள் அவர்களது மரணத்தின் பின்னர் எழுப்பப்பட்டு வருகின்றன. இருவரும் தடுப்பூசிக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை அவர்
களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்ற
னர். நீண்டகால நண்பரான முன்னாள்
அமைச்சர் ஒருவர்,”தடுப்பூசி வைரஸை
விடவும் உடலுக்கு ஆபத்தானது என்று
இரட்டையர்கள் நம்பினர்” என்று கூறியி
ருக்கிறார்.உடலின் நோய் எதிர்ப்புச் சக்
தியே வைரஸை எதிர்க்கப் போதுமானது
என்று அவர்கள் கூறிவந்துள்ளனர்.

பிரான்ஸில் பெரும் தொற்றுப் பரவல்
காலத்தில் நிகழ்ந்துள்ள இவர்களது மர
ணங்கள் தடுப்பூசியின் முக்கியத்துவத்
தின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளன.

— குமாரதாஸன்.

]]>
பிரான்ஸ் தினசரி நடவடிக்கைகளில் ‘சுகாதாரப் பாஸ்’ கட்டாயமாகின்றது. https://www.mukadu.com/2021/07/12/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Mon, 12 Jul 2021 20:06:04 +0000 http://www.mukadu.com/?p=26073 மக்களது தினசரி நடவடிக்கைகளில்
‘சுகாதாரப் பாஸ்’ கட்டாயமாகின்றது

ஓகஸ்ட் முதல் உணவகங்களுக்கும்
ரயில் பயணங்களுக்கும் அவசியம்

வைரஸ் சோதனைக்கு இனி கட்டணம்
தடுப்பூசி போட நிர்ப்பந்திக்கும் உத்தி

டெல்ரா போன்ற வைரஸ் திரிபுகளது அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காக முன்னரைப் போன்று நாட்டை மூடி முடக்காமல் தடுப்பூசியைக் கட்டாயமாக்
கும் வகையிலான கட்டுப்பாடுகளை
அதிபர் மக்ரோன் அறிவித்திருக்கிறார்.

தடுப்பூசி கட்டாயம் என்று பகிரங்க நிலைப்பாட்டை எடுப்பதைத் தவிர்த்து விரைவாக அனைவரும் தடுப்பூசி ஏற்
றிக்கொள்வதற்கு அழுத்தம் தரும் வித
மாகக் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டுள்
ளன.

ஆனால் மக்கள் போதிய எண்ணிக்கை
யில் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முன்
வராதவிடத்து நாட்டு மக்கள் அனைவருக்
கும் அதனைக் கட்டாயமாக்குகின்ற கேள்வி எழுப்பப்படபலாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

நாளாந்த நடவடிக்கைகளில் சுகாதாரப் பாஸை (Le pass sanitair) படிப்படியாகக்
கட்டாயமாக்குகின்ற முடிவுகளை அதிபர்
மக்ரோன் வெளியிட்டிருக்கிறார். அதன்
முதற் கட்ட விரிவாக்கம் ஜூலை 21 ஆம் திகதி தொடங்குகிறது. அன்று முதல்
50 பேருக்கு மேல் கூடுகின்ற சகல நிகழ்வுகளிலும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுகாதாரப்
பாஸ் கட்டாயம் ஆகும்.தொடர்ந்து ஓகஸ்ட் மாதம் முதல் உணவகங்கள்,
அருந்தகங்கள், சினிமா, நவீன சந்தைகள் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கும் நீண்டதூர ரயில், பஸ் பயணங்கள் போன்றவற்றுக்கும் சுகாதாரப் பாஸ் வைத்திருப்பது
கட்டாயமாக்கப்படும்.

பொதுமக்கள் தடுப்பூசி ஏற்றிச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் தற்சமயம் இலவசமாக வைரஸ் பரிசோதனைகளைச் செய்கின்ற வசதிகள் (free PCR tests) நிறுத்தப்பட வுள்ளன. மருத்துவரது பரிந்துரை இன்றிச் செய்யப்படுகின்ற சகல விதமான வைரஸ் பரிசோதனைகளுக் கும் வரும் இலையுதிர் காலத்தில் இருந்து கட்டணம் செலுத்த வேண்டி
இருக்கும் என்பதையும் அதிபர் அறிவித்தார்.

நோயாளர் மற்றும் வயோதிபர்கள் போன்ற பலவீனமானவர்களோடு தொடர்புபடுகின்ற பணிகளைச் செய்கின்ற மருத்துவத் துறையினர்
தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாயமாக்
கப்பட்டுள்ளது.

தாதியர், தாதியர் அல்லாத பணியாளர் கள், வீடுகளில் பராமரிப்போர்
மூதாளர் காப்பகப் பராமரிப்போர் என்று பல துறைகள் சார்ந்தவர்களுக்கே ஊசி
கட்டாயமாக்கப்படுகின்றது.(“les personnels soignants et non soignants des hôpitaux, des cliniques, des maisons de retraite, des établissements pour personnes en situation handicap, pour tous les professionnels ou bénévoles qui travaillent au contact des personnes fragiles, y compris à domicile”)

இத்தகைய துறையினர் தடுப்பூசி ஏற்றாவிடில் செப்ரெம்பர் நடுப்பகுதியில்
இருந்து அத்தகையோர் மீது ஒழுக்காற்று
நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கொரோனா நெருக்கடி ஏற்பட்ட பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் அதிபர் மக்ரோன் சுகாதாரக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்காகவும் தளர்த்துவதற்காகவும் தொடர்ச்சியாக ஆற்றிவந்த உத்தியோகபூர்வ தொலைக்காட்சி உரைகளில் இன்றைய உரை எட்டாவது ஆகும்.

பெரும் தொற்று நோயைக் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வருவதில் வெற்றி பெற்று
ள்ளோம் என்பதை தனது உரையின் தொடக்கத்தில் அறிவித்தார் மக்ரோன்.
அதற்காக சுகாதார, மருத்துவத் துறையி
னருக்குத் தனது நன்றிகளையும் வெளி
யிட்டார்.

மக்ரோன் தனது இன்றைய உரையில் வெளியிட்ட மேலும் சில தகவல்கள் :

?பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள்
எங்கும் வரும் செப்ரெம்பர் கல்வியாண்டு
தொடக்கத்தில் இருந்து தடுப்பூசி ஏற்றும்
திட்டங்கள் தொடங்கும்.

?பிரான்ஸின் பெரு நிலப் பரப்புக்கு வெளியே ரியூனியன் (Réunion) மார்ட்டினிக் (Martinique) தீவுகளில் சுகாதார அவசரகால நிலையும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளும் மீளவும்
அமுலாகின்றன.

?சுகாதார நெருக்கடி முடியும் சமயத்தில்
திட்டமிட்டவாறு ஓய்வூதிய சீர்திருத்தத் திட்ட முன்னெடுப்புகள் (La réforme des retraites) ஆரம்பிக்கப்படும்.

?புதிய வைரஸ் தொற்று அதிகரித்து ள்ள அண்டை நாடுகளுடனான எல்லை
களில் சோதனை நடவடிக்கைகள் தீவிர
மாக்கப்படும்.
குமாரதாஸன். பாரிஸ்.

]]>