//anjeng #பிரான்ஸ் – Mukadu https://www.mukadu.com Fri, 15 Apr 2022 22:41:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 பாரிஸ் நொர்த் டாம் தேவாலயத்தின் அடியில் மீட்கப்பட்ட கல்லுப் பேழை! https://www.mukadu.com/2022/04/15/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2/ Fri, 15 Apr 2022 22:41:57 +0000 http://www.mukadu.com/?p=26273 பாரிஸ் நொர்த் டாம் தேவாலயத்தின் அடியில் மீட்கப்பட்ட கல்லுப் பேழை!
திறந்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு

பாரிஸ் நொர்த் டாம் மாதா கோவிலின் நிலத்தடியில் இருந்து புராதன கற்பேழை
ஒன்று அண்மையில் மீட்கப்பட்டிருக்கி
றது. 2019 இல் தீக்கிரையாகிய மாதா தேவாலயத்தின் கூரை உட்பட அதன்
கட்டுமானங்களைப் புனரமைக்கும் பணி
கள் தற்சமயம் அங்கு நடைபெற்று வரு
கின்றன. அதன் போது தேவாலயத்தின்
உள்ளே ஒரு பகுதியில் தரை தோண்டப்
பட்ட சமயம் சுமார் இருபது மீற்றர் ஆழத்
தில் கல்லினாலான புராதன சவப்பேழை
(sarcophagus) ஒன்று கண்டுபிடிக்கப்பட்
டது.

மனித உருவிலான – நன்கு பாதுகாக்கப்
பட்ட-அந்த மர்மப் பேழை 14 ஆம் நூற்றா
ண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும்
என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்
கள் நம்புகின்றனர்.அவர்கள் பேழையை
திறக்காமலேயே அதன் உள்ளே இருக்கி
ன்ற பொருள்களை என்டோஸ்கோபிக் கமரா (endoscopic camera) மூலம் ஆய்வு
செய்துள்ளனர். எலும்புக் கூட்டின் மேற்
பகுதி, இலைகளாலான தலையணை,
துணி மற்றும் சில பொருள்களை உள்ளே
அடையாளம் கண்டுள்ளனர்.பாதுகாப்
பான இடம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்
கின்ற அந்தப் பேழை விரைவில் தென் மேற்கு நகரமாகிய துளுசில் (Toulouse)
அமைந்துள்ள தேசிய தடயவியல் மருத்
துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்
பட்டுத் திறந்து பரிசோதிக்கப்படவிருப்ப
தாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருடையது என்ற அடையாளம் தெரி
யாத அந்த மனித எச்சம் எவ்வாறு, ஏன்
நொர்த் டாம் தேவாலயத்தின் அமைவி
டத்தின் கீழ் புதைக்கப்பட்டது? கடந்த பல
நூற்றாண்டுகளாக அது அங்கேயே இரு
ந்துவந்ததா,அல்லது அங்கு மீளப் புதைக்
கப்பட்டதா?

அதன் அடக்க வடிவமைப்பு முறை, அதன்
காலம், இறந்தவரது சமூக நிலை என்பன
சொல்கின்ற செய்தி என்னவாக இருக்
கும்?

இவை போன்ற பல கேள்விகளை எழுப்
கியிருக்கின்ற அந்தக் கற்பேழை தொடர்
பான புதிர்களை அறிவதற்காக பிரான்
ஸின் கத்தோலிக்கர்கள் உட்பட நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்
ளனர்.

பாரிஸின் உலகப் புகழ் பெற்ற சின்னங்
களில் ஒன்றாகிய – 12 ஆம் நூற்றாண்
டைச் சேர்ந்த (Gothic)-நொர்த் டாம் மாதா தேவாலயத்தின் உயர்ந்த மரக் கூம்புக் கூரை உட்பட அதன் பெரும் பகுதிகள் தீயினால் எரிந்து அழிவுண்டமை தெரிந்
ததே.

— குமாரதாஸன்.

]]>
பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு! https://www.mukadu.com/2022/01/04/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af/ Tue, 04 Jan 2022 16:13:35 +0000 http://www.mukadu.com/?p=26162 பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள்
வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

அறிவியலால் ஆயுளைக் கூட்டலாம்
என்றவர்கள் தடுப்பூசி ஏற்றாமல் சாவு

பிரான்ஸில் 1980 களில் அறிவியல் புனைகதைத் தொடர் நிகழ்ச்சிகள் மூலம்
பிரபலமடைந்த தொலைக்காட்சி நட்சத்
திரங்களான இரட்டைச் சகோதரர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் கிலக்காகி அடுத்தடுத்து உயிரிழந்திருக்
கின்றனர்.

போக்டனோஃப் (Bogdanoff) சகோதரர்கள்
என அழைக்கப்பட்ட இகோர்(Igor) மற்றும்
கிறிச்க்கா (Grichka) இருவரும் ரஷ்யாவை
பூர்வீகமாகக்கொண்டவர்கள்.பிரான்ஸில்
1949 இல் பிறந்தவர்கள். 72 வயதான இருவரும் வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத நிலையில் பாரிஸ் பொம்பிடு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் சேர்க்கப்பட்டு ஆறு நாள்கள் இடைவெளியில் அடுத்த
டுத்து உயிரிழந்தனர் என்று அறிவிக்கப்
படுகிறது.

சகோதரர்கள் இருவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி எதனையும் ஏற்றிக்
கொள்ளவில்லை என்பதை அவர்கள்
தரப்பு வழக்கறிஞர் ஒருவர் உறுதிப்
படுத்தியுள்ளார். கடந்த டிசெம்பர் மாத
நடுப்பகுதியில் இருந்து இருவரும் மருத்
துவமனையில் சிகிச்சைபெற்று வந்தனர்

பிரான்ஸில் முதலாவது தொலைக்காட்சி
புனைகதை நிகழ்ச்சியைத்(science fiction show) தயாரித்துத் தாங்கள் இருவருமே அதனை நேரடியாகத் தோன்றித் தொகுத்துவழங்கி வந்த போக்டனோஃப் இரட்டையர்கள், அந்நாட்களில் அதன் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற அறிவியல் சகோதரர்களாக விளங்கினர்.1979 முதல் தொடர்ந்து 8ஆண்டுகள்”Temps X” என்ற பெயரில் அந்த நிகழ்ச்சி TF1 தொலைக்
காட்சியில் ஒளிபரப்பாகிப் புகழ் பெற்றது அதன் பிறகு இருவரும் அறிவியல்புனை கதை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்
ளனர்.

அமெரிக்காவின் நாசா வரை கவனத்தை
ஈர்த்த அவர்களது அறிவியல் புனைவுகள்
விஞ்ஞான உலகில் ஒரு தரப்பாரால் புகழப்பட்ட அதே வேளை மறுதரப்பில்
மிகவும் தரக்குறைவானவை என்று கூறி விமர்சித்து ஒதுக்கப்பட்டு வந்தன. முனை
வர் பட்டத்துக்காக இருவரும் சமர்ப்பித்த
விண்வெளி அறிவியல் தொடர்பான ஆய்
வுக்கட்டுரையைப் பிரான்ஸின் விண்ணி
யல் ஆய்வு நிலையமாகிய CNRS”குறை
வான அறிவியல் பெறுமானம் கொண்
டவை”என்று கூறி நிராகரித்திருந்தது.

தங்களை “வேற்றுக்கிரக வாசிகள்” எனக்
கூறிக் கொண்ட இந்த இரட்டையர்கள்
முகத்தோற்றங்களை மாற்றிக்கொள்வ
தற்காகப் பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சை
களைச் செய்து அபூர்வமாகத் தோன்றி
னர். கன்னங்கள், நாடிப் பகுதிகளில் செய்யப்பட்ட விகாரமான பிளாஸ்ரிக் சிகிச்சைகளால் ரசிகர்கள் மத்தியில் கேலிக்கு உள்ளாகினர்.இருவரும் உள் நாட்டிலும் உலகெங்கிலும் பரவலாக அறியப்பட்டமைக்கு முகங்களை மாற்றிக் கொள்வதற்காக அந் நாட்களில் செய்யப் பட்ட அறுவைச் சிகிச்சைகளும் காரணமா
கின.

அறிவியல் வளர்ச்சிகளால் மனிதனின்
ஆயுள் காலத்தை அதிகரிக்க முடியும் எனக் கூறிவந்தவர்கள் அறிவியல் உல
கம் கண்டுபிடித்த ஆயுதமாகிய கொரோ
னாத் தடுப்பூசியை ஏன் எற்றிக் கொள்ள
வில்லை என்ற கேள்விகள் அவர்களது மரணத்தின் பின்னர் எழுப்பப்பட்டு வருகின்றன. இருவரும் தடுப்பூசிக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை அவர்
களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்ற
னர். நீண்டகால நண்பரான முன்னாள்
அமைச்சர் ஒருவர்,”தடுப்பூசி வைரஸை
விடவும் உடலுக்கு ஆபத்தானது என்று
இரட்டையர்கள் நம்பினர்” என்று கூறியி
ருக்கிறார்.உடலின் நோய் எதிர்ப்புச் சக்
தியே வைரஸை எதிர்க்கப் போதுமானது
என்று அவர்கள் கூறிவந்துள்ளனர்.

பிரான்ஸில் பெரும் தொற்றுப் பரவல்
காலத்தில் நிகழ்ந்துள்ள இவர்களது மர
ணங்கள் தடுப்பூசியின் முக்கியத்துவத்
தின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளன.

— குமாரதாஸன்.

]]>
சுயநிர்ணயத்துக்கு எதிராக கலிடோனியா வாக்களிப்பு! https://www.mukadu.com/2021/12/12/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be/ Sun, 12 Dec 2021 20:20:09 +0000 http://www.mukadu.com/?p=26150 சுயநிர்ணயத்துக்கு எதிராக
கலிடோனியா வாக்களிப்பு!

கடலாதிக்கப் போட்டியில் கேந்திர
மையமாக மாறும் பசுபிக் தீவுகள்

“நீங்கள் நியூ கலிடோனியாவின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு பிரிந்து சென்று சுதந்திரதேசமாக வாழ விரும்புகிறீர்களா?”

பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகப்
பிராந்தியங்களில் ஒன்றான நியூ
கலிடோனியா தீவின் மக்கள் இந்தக் கேள்விக்கு “இல்லை” என்று பதிலளித்
திருக்கிறார்கள். மூன்றாவது முறையாக இந்தக் கேள்வியை நிராகரித்துள்ள அவர்கள் பிரான்ஸின் கீழ் இணைந்து
வாழும் விருப்பத்தை மீண்டும் உறுதிப்
படுத்தியிருக்கின்றனர். ஆனால் சுயாட்சி
கோரும் பழங்குடி மக்கள் சார்ந்த சுதந்திர
இயக்கத்தினர் இந்தத் தேர்தலைப் பகிஷ்
கரித்திருந்தனர். கொரோனா வைரஸ்
தொற்று நோயால் பிரசார நடவடிக்கை
களைப் பரந்த அளவில் முன்னெடுக்க முடியாத நிலை இருப்பதைக் காரணங்
காட்டித் தேர்தலை அடுத்த ஆண்டு செப்ரெம்பர் வரை ஒத்திவைக்குமாறு
அவர்கள் கோரியிருந்தனர்.

பழங்குடி இனத்தவர் வாழ்கின்ற பகுதி
களில் இன்றைய வாக்களிப்பு மிக மந்தமாக இருந்தது என்பதை சுயாதீன
ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இன்றைய வாக்களிப்பில் அரைவாசிக்
கும் குறைவாக 43.90% வீத வாக்குகளே
பதிவாகி உள்ளன. அவற்றில் பிரிவினை
க்கு எதிராக 96.49% வீதமானோரும் ஆதரவாக 3.51% வீதமானோரும் வாக்க
ளித்திருக்கின்றனர்.ஏற்கனவே 2018
2020 களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு
களிலும் பிரிவினையை எதிர்க்கின்ற
தரப்பினரே வெற்றிபெற்றிருந்தனர்.

சுயநிர்ணய வாக்களிப்பின் முடிவுகள்
குறித்து மகிழ்ச்சி வெளியிட்டிருக்கின்ற
அதிபர் மக்ரோன்,”பிரான்ஸ் இன்றிரவு
மேலும் அழகுடன் மிளிர்கிறது.அது நியூ
கலிடோனியாவையும் தன்னகத்தே
கொண்டிருப்பதால் “என்று கூறியிருக்
கிறார்.அதிபர் தேர்தலை எதிர்கொள்
கின்ற பின்னணியில் கலிடோனியா
மக்களது தீர்ப்பு மக்ரோனுக்கு ஆறுத
லான ஒரு செய்தியாக வந்திருக்கிறது.

சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் வாக்கா
ளர்களைக் கொண்ட நியூ கலிடோனியா
தீவுக்கூட்டம் (archipelago) பசுபிக் கடலில்
ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கே இரண்டா
யிரம் கிலோ மீற்றர்கள் தொலைவில்
அமைந்திருக்கிறது.

அங்குள்ள “கனாக்”(Kanak) என்கின்ற பழங்குடி இனத்தவர்களது கிளர்ச்சியை அடுத்து 1988 இல் செய்து கொள்ளப்பட்ட ஓர் உடன்படிக்கையே பிரான்ஸின் காலனித்துவத்தை முடிவுக்குக் கொண்டு
வந்து கலிடோனியாவுக்குச் சுயாட்சி வழங்குவதைத் தீர்மானிப்பதற்கான மூன்று கட்ட சுயநிர்ணய வாக்கெடுப்பு
களை நடத்த வழி செய்தது. அதன்படி
இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது
மூன்றாவது இறுதி வாக்கெடுப்பு ஆகும்.

பழங்குடி மக்களின் பகிஷ்கரிக்கு
மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள
இன்றைய தேர்தலை சுதந்திரத்துக்கு ஆதரவான இயக்கம்”போர்ப்பிரகடனம்”
என்று கூறி நிராகரித்திருக்கிறது.
தேர்தலை ரத்துச் செய்யுமாறு ஐ. நா.
சபையிடம் கோரவுள்ளதாக அது தெரி
வித்திருக்கிறது.

பிரான்ஸின் 13 கடல் கடந்த தீவுகளில்
வறுமை, தொழில் வாய்ப்பின்மை போன்ற பல காரணங்களால் அமைதி
யின்மை நிலவுகின்றது. தாங்கள் கவனிப்பின்றிக் கைவிடப்பட்டதான உணர்வு அங்கு வசிப்போர் மத்தியில் மேலெழுந்துள்ளது.

நியூ கலிடோனியாவின் இன்றைய வாக்
களிப்பு அங்கு 1980 களில் உருவான வன்
முறைகள் போன்ற பதற்ற நிலைமையை
உருவாக்கி விடலாம் என்று சிலர் அஞ்சு
கின்றனர். தீவின் பாரம்பரிய வழித் தோ
ன்றல்களான “கனாக்” இனத்தவருக்கும்
அங்கு வசிக்கின்ற பிரெஞ்சு வெள்ளை இனத்தவருக்கும் இடையிலான வேறு
பாடுகளே அங்கு கிளர்ச்சிக்கு வழிவகுத்
தது.

நியூ கலிடோனியாவில்
சீனா கால்லூன்றுமா?

பிரான்ஸின் மிகப் பெரிய கடல்கடந்த பிராந்தியங்களில் ஒன்றாகிய
அழகிய நியூ கலிடோனியாத் தீவுக்
கூட்டங்கள் அவற்றின் நிக்கல் (nickel) உலோக வளம் காரணமாக உலக சக்தி
களால் குறிவைக்கப்பட்டுள்ளன. உலகின் மொத்த நிக்கல் தாது வளத்தில்
பத்து வீதமானவை தீவுக் கூட்டங்களில்
செறிந்துள்ளன.மொபைல் தொலை
பேசிகள், பற்றரிகள், துருப்பிடிக்காத
இரும்பு போன்றவற்றைத் தயாரிப்பதற்கு
நிக்கல் பிரதான பொருளாகப் பயன்படு
கிறது.

அதேசமயம் பிரான்ஸின் பசுபிக் கடல்
ஆதிக்க உரிமை கோரலுக்கான முக்கிய
பிடிகளில் ஒன்றாக இத் தீவுக் கூட்டங்கள்
உள்ளன. பசுபிக் கடலில் பிரான்ஸின்
உரிமைகள் மற்றும் இராணுவப் பிரசன்
னத்துக்கான நியாயாதிக்கத்தை நியூ கலிடோனியாவே வழங்குகிறது. கலி
டோனியா சுதந்திர தேசமாக மாறுவது சீனா அங்கு ஆழக் கால் பதிப்பதற்கு வழிவகுத்துவிடும் என்று மேற்குலக நிபுணர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

“அங்கு பிரான்ஸின் பிடி தளருமானால்
சீனா தன்னை அங்கு வலுவாக நிலை
நிறுத்தக் கூடிய சகல ஏது நிலைகளும்
காணப்படுகின்றன” – என்று பிரான்ஸின்
சர்வதேச உறவுகள் தொடர்பான ஆய்வா
ளர் ஒருவர் செய்தி ஊடகம் ஒன்றிடம்
தெரிவித்திருக்கிறார். அந்தப் பிராந்தி
யத்தின் ஏனைய நாடுகளான பிஜி (Fiji) வனாட்டு(Vanuatu) சொலமன் தீவு (Solomon Islands) பப்புவா நியூ ஹினியா (Papua New Guinea) போன்றன ஏற்கனவே
சீனாவின் கண்காணிப்பின் கீழ் வந்துள்
ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்,
“சீனா தனது முத்து மாலையை ஆஸ்திரே
லியாவின் வாசல் அருகே நியூ கலிடோ
னியாவில் கொண்டுவந்து முடிச்சுப்போட
ஆயத்தமாகிறது” என்று கூறியிருக்கி
றார்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையில் ஒருவர் சிக்கினார்! https://www.mukadu.com/2021/12/07/%e0%ae%95%e0%ae%b7%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/ Tue, 07 Dec 2021 19:22:36 +0000 http://www.mukadu.com/?p=26141 கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையில் ஒருவர் சிக்கினார்!
பாரிஸ் விமான நிலையத்தில் கைது!!

பிரபல சவுதி அரேபியா பத்திரிகையாளர்
ஜமால் கஷோக்கியை இஸ்தான்புலில் உள்ள தூதரகத்தினுள் வைத்துச் சித்திர
வதை செய்து கொன்ற மரணப் படை
உறுப்பினர்களில் ஒருவர் எனச் சந்தேகிக்
கப்படும் நபர் பாரிஸில் வைத்துக் கைது
செய்யப்பட்டிருக்கிறார்.

பாரிஸ் றுவாஸி (RoissyCharles-de-Gaulle Airport) விமான நிலையத்தில் இருந்து
றியாட்டுக்குப் பயணமாகவிருந்த சமயத்
தில் எல்லைப் பாதுகாப்புப் பொலீஸார்
Khalid Alotaibi என்னும் 33 வயதுடைய
அந்த நபரைக் கைது செய்தனர் என்று
செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி விடுத்திருந்த சர்வதேச பிடியா
ணையின் கீழ் அவர் பொலீஸ் தடுப்புக்
காவலில் வைக்கப்பட்டுள்ளார். Khalid Alotaibi என்ற பெயருடைய கடவுச் சீட்டை
காண்பித்தே அவர் பயணம் செய்யவிருந்
தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர்
சமர்ப்பித்த பெயர் விவரங்கள் உறுதியா
னால் நாளை புதன்கிழமை அவர் பாரிஸ்
நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்செய்யப்படு
வார் எனக் கூறப்படுகிறது.

பிரபல பத்திரிகையாளரான ஜமால்
கஷோக்கி சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தலைமறை
வாக இருந்து ஊடகப் பணியாற்றிவந்த
வர். தனது திருமணத்துக்கான ஆவணம் ஒன்றைப் பெறுவதற்காக அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 2ஆம் திகதி துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபியாத் தூதரகத்திற்குச்
சென்ற பின்னர் காணாமற்போயிருந்தார்

சவுதி அரசாங்கத்தின் பணிப்பின் பேரில்
அங்கிருந்து விசேட விமானத்தில் வந்த
மரணப்படையணி ஒன்றைச் சேர்ந்தவர்
கள் தூதரகத்தினுள் வைத்து கஷோக்கி
யைச் சித்திரவதை செய்து உடலைப் பல
துண்டங்களாக அரிந்து கொன்றனர் என
நம்பப்படுகிறது. ஆனால் அவரது உடல்
எச்சங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட
வில்லை. பாரிஸில் கைது செய்யப்பட்டி
ருக்கின்ற Khalid Alotaibi என்ற பெயருக்
குரிய நபரும் சவுதி அரேபியாவின் மரண
ப்படையில் ஒருவர் என்று அமெரிக்கா
மற்றும் துருக்கி அதிகாரிகளால் குறிப்
பிடப்படுகிறார். அவரும் அவரோடு அப்
படையில் இடம்பெற்றவர்கள் எனப் பெயர் வெளியாகிய வேறு பலரும்
ஷெங்கன்(Schengen) எல்லைகளுக்குள் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்
கிறது.

நியூயோர்கில் இருந்தவாறு கஷோக்கி
சவுதி அரேபிய அரச குடும்ப ஆட்சியைக்
கடுமையாக விமர்சித்து வந்த காரணத்
துக்காக எம்பிஎஸ்( MBS)என்று அழைக்
கப்படும் சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானே (Crown Prince Mohammed bin Salman) அவரை தனது
ரகசிய ஏஜென்டுகள் மூலமாகப் பழி
தீர்த்தார் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
இளவரசருடைய மெய்க்காவலர்கள் உட்படப் படுகொலையில் தொடர்புபட்ட
குழுவினருக்கு எதிராகத் துருக்கியில்
வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்
பட்டுவருகின்றன.

கஷோக்கி படுகொலை நடந்து மூன்று
ஆண்டுகளின் பின்னர் பிரான்ஸின்
அதிபர் மக்ரோன் கடந்தவாரம் சவுதி
இளவரசர் மொஹமட் பின் சல்மானை
நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.
கஷோக்கி படுகொலைக்குப் பின்னர்
சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்து
இளவரசரைச் சந்தித்த முதலாவது மேற்கு நாட்டுத் தலைவர் அவரே ஆவார்.
கொலை மற்றும் மனித உரிமை மீறல்
களுக்காகச் சர்வதேச அளவில் கண்டிக்
கப்பட்டுவருகின்ற இளவரசரை மக்ரோன்
சந்தித்ததற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்
தமை குறிப்பிடத்தக்கது.
குமாரதாஸன்.

]]>
சென் நதியில் மிதவைப் படகுகளில் பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா. https://www.mukadu.com/2021/07/24/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95/ Sat, 24 Jul 2021 21:18:36 +0000 http://www.mukadu.com/?p=26094 சென் நதியில் மிதவைப் படகுகளில்
பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா

தனித்துவம் மிக்க புரட்சி நிகழ்வாக
ஏற்பாடாகும் என்கிறார் மக்ரோன்

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்
விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பாரிஸ் நகரில் சென் நதியின் மீது மிதவைப் படகுகளிலும் அதன் கரைகளி லும் நடத்தப்படவுள்ளது.தனித்துவமான தும் – நினைவில் நிலைக்கக் கூடியது மான-ஒர் உணர்வுபூர்வ நிகழ்வாக அது ஏற்பாடு செய்யப்படும்.

அதிபர் மக்ரோன் இவ்வாறு தெரித்திருக்
கிறார்.ரோக்கியோவில் ஆரம்பமாகி
யுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்த அவர் அதன் பின்னர் பிரான்ஸின்
பிரபல விளையாட்டுச் செய்திப் பத்திரி
கையான L’Equipe ஊடகத்துக்கு செவ்வி
அளித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின்
தலைவர் ரொனி எஸ்ராங்கே (Tony Estanguet) அவர்களின் எண்ணத்தில்
உருவாகிய இந்த இடத் தெரிவை அதிபர்
மக்ரோன் உறுதிப்படுத்தியுள்ளார் என்று
L’Equipe பத்திரிகை தெரிவித்துள்ளது.

சென் நதியில் ஆரம்ப விழாவை நடத்தும்
யோசனையை ரொனி எஸ்ராங்கே முதன்
முறையாக முன்வைத்த போது அதனைத்
தான் ஒப்புக்கொள்ளவில்லை என்ற தகவலை வெளியிட்ட மக்ரோன்,
மக்களைச் சென்றடையும் விதமாக-
திறந்த வெளியில் அதனை நடத்துவது
தனித்துவமாகவும் புரட்சிகரமாகவும்
அமையும் என்பதைப் பின்னர் உணர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

உலக மக்களுக்கான ஒர் உன்னதம்
மிக்க இலவச காட்சியாக தொடக்கவிழா
சென் நதியில் பல லட்சம் பேர் முன்னி
லையில் நடத்தப்படும். பார்வைச் செறி
வும், உணர்வும் நிறைந்த ஒரு மறக்கமுடி
யாத நிகழ்வை பல காட்சிகள், இடங்கள்
இசைகள் கலந்து வழங்கக் கூடிய
வல்லமை ஏங்களிடம் உண்டு – என்று
அதிபர் மக்ரோன் மேலும் தெரிவித்திருக்
கிறார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின்
தொடக்க விழா 2024 ஆம் ஆண்டு ஜூலை
26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குமாரதாஸன்.
பாரிஸ்.

]]>
14 வயதில் அகதியாக வந்த சிறுவன் பிரான்ஸுக்குப் பதக்கம் வென்றான்! https://www.mukadu.com/2021/07/24/14-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/ Sat, 24 Jul 2021 21:14:13 +0000 http://www.mukadu.com/?p=26089 14 வயதில் அகதியாக வந்த சிறுவன்
பிரான்ஸுக்குப் பதக்கம் வென்றான்!

ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸ் தனது முதல் பதக்கத்தை
வென்றிருக்கிறது. இன்று நடைபெற்ற
60 கிலோவுக்கு குறைந்த பிரிவு ஜூடோ
போட்டியில் பிரான்ஸின் வீரர் லூகா
மெக்ஹாய்ட்ஸே(Luka Mkheidze) வெண்க
லப் பதக்கம் வென்று சாதனை படைத்தி
ருக்கிறார்.தன்னோடு மோதிய தென்
கொரியா வீரரைத் தோற்கடித்து மூன்றா
வது இடத்தை வென்றுள்ளார்.

“இந்த வெற்றியை மிக மிக மகிழ்வுடன் உணர்கிறேன். ஒலிம்பிக்கில் பங்குபற்றி
ஒரு பதக்கத்தை எடுத்துவரவேண்டும்
என்று சிறுபராயத்தில் கனவு கண்டேன்.
இன்று மூன்றாவது இடத்தை வென்றேன்
என்பதை இன்னும் நம்பமுடியாமல் இருக்
கிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

வீரர் லூகாவின் வாழ்வுக்குப் பின்னால்
பெரிய சோதனை இருக்கிறது.வெளிநா
ட்டினர் பலரைப் போலவே லூகாவும் தனது சிறு வயதில் ஓர் அகதியாகக் குடும்பத்துடன் பிரான்ஸுக்கு வந்தவர்.

ஜோர்ஜியா(Georgia) நாட்டில் 1996 இல் பிறந்த லூகா சிறுவனாக இருந்தபோதே ஜூடோ விளையாட்டில் அந்த நாட்டின் குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர். உள்நாட்டில் ஏற்பட்ட குழப்பம், வறுமை காரணமாக 2009 ஆம் ஆண்டு லூகா தனது தாயாருடன் அங்கிருந்து வெளி யேறி பெலாரஸ் நாடு ஊடாகப் போலந் தில் தஞ்சமடைய நேரிட்டது.அங்கு அகதி முகாம் ஒன்றில் தங்கி வாழ்ந்த லூகா குடும்பத்தினருக்கு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டு அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்தனர்.அத
னால் அங்கிருந்து பயண முகவர்களின் உதவியுடன் சட்டவிரோதமாகப் பிரான் ஸுக்குத் தப்பி வந்தனர்.

போலந்தில் தங்கியிருந்த போதும் பின்னர் பாரிஸின் புறநகரான Villeneuve-
Saint-Georges பகுதியில் வசித்த சமயத்தி
லும் தொடர்ந்து ஜூடோக் கலையை
விடாது பயின்று வந்த லூகா, பின்னர்
அகதிகள் வரவேற்பு நிலையம் ஒன்றின்
பராமரிப்பில் பிரான்ஸின் லூ ஹாவ்
(Le Havre) நகருக்கு இடம்மாற நேர்ந்தது , அது அவரது வாழ்வில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அங்கு அச்சமயம் மேயராக விளங்கிய முன்
னாள் பிரதமர் எத்துவா பிலிப்பின் (Edouard Philippe) உதவியால் 2015 இல் லூகா பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டார். மேயர் பிலிப்பின்
சந்திப்பால் கிடைத்த அந்த உத்வேகத் துடன் விளையாட்டுக் கலையை விடாமல் தொடர்ந்து வந்த லூகா இன்று தனது புகலிட தேசத்துக்கு ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்று வழங்கியுள்ளார்.

நேற்று ஆரம்பமாகிய ஒலிம்பிக் போட்டி
களில் முதல் தங்கப் பதக்கத்தை சீனா
வென்றது. இலகு துப்பாக்கி சுடும் போட்
டியில் சீன வீராங்கனை யாங் கியான் (Yang Qian) முதல் தங்கத்தை வென்று
அந்தப் பெருமையைத் தனதாக்கினார்.

குமாரதாஸன்.

]]>
ஐரோப்பியப் சுகாதாரப் பாஸ் இன்று முதல் நடைமுறைக்கு. https://www.mukadu.com/2021/07/01/%e0%ae%90%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8/ Thu, 01 Jul 2021 07:57:58 +0000 http://www.mukadu.com/?p=26056 ஐரோப்பியப் சுகாதாரப் பாஸ்
இன்று முதல் நடைமுறைக்கு!
30 நாடுகளில் இலகுப் பயணம்

வைரஸ் சோதனைகள், தனிமைப் படுத்தல்கள் ஏதும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே பயணிப்பதற்கான சுகாதாரப் பாஸ் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

“Le Certificat Covid numérique UE” என்று பிரெஞ்சு மொழியில் அழைக்கப்படு
கின்ற EU digital Covid Certificate இன்று ஜூலை முதலாம் திகதி தொடக்கம்
பயணங்களில் ஏற்றுக் கொள்ளப்படும்.

இரண்டு தடவைகள் தடுப்பூசிகளைச் செலுத்தியவர்கள் இந்தப் பயணச் சான்றிதழை site de l’Assurance maladie என்கின்ற அரச சுகாதார காப்புறுதி நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் தரவிறக்கிப் பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுவாக சுகாதாரக் கடவுச் சீட்டு என்று
அழைக்கப்படுகின்ற இந்தச் சான்றிதழில்
காணப்படும் QR Code காகித வடிவத்தி
லும் TousAntiCovid application என்கின்ற
மொபைல் தொலைபேசி டிஜிட்டல் வடி
வத்திலும் பெற்றுப் பயன்படுத்தலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு
கள் அனைத்திலும், மற்றும் ஐஸ்லாந்து நோர்வே, சுவிற்ஸர்லாந்து, லிச்சென்ஸ் ரீயன் (Iceland, Norway, Switzerland, Liechtens tein) ஆகிய நாடுகள் உட்பட சுமார் முப்பது நாடுகளில் பயன்படுத்தலாம்.

சுகாதாரச் சான்றிதழை வைத்திருப்பவர்
தடுப்பூசி ஏற்றியவர், வைரஸ் தொற்று இல்லாதவர், நோய் எதிர்ப்பு தூண்டப்
பட்டவர் என்பது உறுதிப்படுத்தப்படுவ
தால் அவர் விமான நிலையங்களையும்
பயணவழிச் சோதனைகளையும் இலகு
வில் தாண்டிச் செல்ல முடியும்.

பிரான்ஸில் பெரும் எண்ணிக்கையில்
ரசுகர்கள் கூடுகின்ற இன்னிசை அரங்கு
கள் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றுவ
தற்கும் சுகாதாரப் பாஸைப் பயன்படுத்த
முடியும்.

இதேவேளை –

பிரான்ஸில் கொரோனா வைரஸ் சுகாதாரக்கட்டுப்பாடுகள் நேற்று ஜூன்
30 ஆம் திகதியுடன் கிட்டத்தட்ட முற்று முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டன .

நாட்டில் மூன்றாவது வைரஸ் அலை தோன்றியதை அடுத்துக் கடந்த ஆண்டு
ஒக்ரோபரில் அமுல் செய்யப்பட்ட பொது முடக்கக் கட்டுப்பாடுகள் மே மாதம் முதல் மூன்று கட்டங்களாகத் தளர்த்தப்பட்டிருந்
தன. அதன் தொடர்ச்சியான நான்காவது இறுதிக் கட்டம் நேற்று அமுலுக்கு வந்தது .

உணவகங்கள், அருந்தகங்கள் என்பன இருக்கைக் கட்டுப்பாடுகள், வாடிக் கையாளர் வரையறை என்று எந்த வித
சிரமங்களும் இன்றி முழு அளவில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
வர்த்தக நிலையங்கள், சினிமா அரங்குகள் போன்ற பொது இடங்களிலும் ஆட்கள் வரையறை இனிமேல் கட்டாயமாக இருக்காது.
திருமண நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடு
கள் நீங்குகின்றன. ஆயினும் பொதுவான சமூக இடைவெளி தொடர்ந்து பேணப்படவேண்டும்.

குமாரதாஸன்

]]>
2022 அதிபர் தேர்தல் களம் மாறுகிறது மக்ரோனுக்கு சவாலாகிறார் சேவியர். https://www.mukadu.com/2021/06/28/2022-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/ Mon, 28 Jun 2021 21:00:30 +0000 http://www.mukadu.com/?p=26053 2022 அதிபர் தேர்தல் களம் மாறுகிறது
மக்ரோனுக்கு சவாலாகிறார் சேவியர்!

பிரான்ஸில் நடைபெற்று முடிந்த பிராந்திய சபைகளுக்கான (Les élections régionales) தேர்தலில் அடித்த வலது சாரி
ஆதரவு அலை அடுத்த ஆண்டு நடைபெற வுள்ள அதிபர் தேர்தலின் கள நிலைவ
ரங்களை மாற்றி அமைக்கும் என எதிர்வு
கூறப்படுகிறது.

அதிபர் மக்ரோனுக்கும் மரின் லூ பென் னுக்கும் மட்டுமான பலப்பரீட்சை என்று
கணிக்கப்பட்ட எலிஸே மாளிகைக்கான போட்டியில் இப்போது மூன்றாவது புதிய சக்தியாக வலது சாரி கன்சர்வேட்டிவ்
பிரமுகர் சேவியர் பெர்ட்ரான்ட் (Xavier Bertrand) உள் நுழைகிறார்.

முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்கோஷி யின் ரிப்பப்ளிக்கன் கட்சிப் பிரமுகரான
சேவியர், நாட்டின் பெரிய பிராந்தியங்க
ளில் ஒன்றாகிய Hauts-de-France பிராந்தி
யத்தின் தலைவராக 2015 இல் தெரிவாகி
இருந்தார். இந்த முறை தேர்தலிலும் அவர் தனக்கு அடுத்த படியாகக் களத்தில்
நின்ற மரின் லூ பென் கட்சியின் வேட்
பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்று
ள்ளார். தனது சொந்தப் பிராந்தியத் தேர்தலில் வென்றால் அடுத்த கட்டமாக எலிஸே மாளிகைக்கான பந்தையத்தில் இறங்குவார் என்பதை வாக்களிப்புக்கு
முன்னராகவே சேவியர் பெர்ட்ரான்ட்
பகிரங்கமாக அறிவித்திருந்தார். வெற் றிக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட அவர் , அடுத்த கட்டமாக தேசியஅளவில் மக்களைச் சந்திப்பதற்குத் தயாராகிறார் என்பதைக் கோடிகாட்டியுள்ளார்.

தங்களது அதிபர் வேட்பாளர் யார் என்பதை ரிப்பப்ளிக்கன் கட்சி வரும் நவம்பர் மாதம் அறிவிக்கும் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 13 பிராந்தியங்களில்
ரிப்பப்ளிக்கன் கட்சி ஆட்சியில் இருந்த சகல பிராந்தியங்களையும் அது மீளக்
கைப்பற்றி உள்ளது.அதனால் ஏற்பட் டிருக்கின்ற உத்வேகம் அந்தக் கட்சியை மீண்டும் மைய அரசியல் அரங்கில் தூக்கி நிமிர்த்தி விட்டுள்ளது.

2017 இல் நடந்த அதிபர் தேர்தலின் போது
நாட்டின் பாரம்பரிய கட்சிகளான ரிப்பப்ளிக்கன் மற்றும் சோசலிஸக் கட்சி
கள் இரண்டின் சார்பிலும் கவர்ச்சிகர
மான தலைவர்கள் எவரும் களத்தில்
தோன்றியிருக்கவில்லை. மையவாதி
யாகத் தன்னைக் காட்டிக் கொண்ட மக்
ரோன் அச்சமயம் வெற்றியைத் தனதாக் கிக் கொள்வதற்கு அது வாய்ப்பாகியது.

ஆனால் இந்த தடவை கள நிலைவரம்
அதிபர் மக்ரோனுக்கு அவர் எதிர்பார்க்
கின்ற அளவுக்கு வாய்ப்பாக அமையாது
என்பதை பிராந்தியத் தேர்தல் பெறுபேறு
கள் காட்டி உள்ளன. மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கை என்றாலும் பாரம்ப
ரிய கட்சிகள் இரண்டுமே தத்தமது பிராந்தியங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. மரின் லூ பென் கட்சிக்கு ஒரு பிராந்தியம் கூடக் கிடைக் கவில்லை. மக்ரோனின் கட்சியின் நிலையும் அதுவே.

ஆளும் கட்சியின் படுதோல்வியை அடுத்து அதிபர் மக்ரோன் தனது பிரதம
ரையும் அமைச்சரவையையும் மாற்றி
அமைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. ஆனால் பிரதமர் ஜீன் காஸ்ரோவை அடுத்துவரும் மாதங்களு
க்குள் பதவி நீக்கப்போவதில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

(படம் :56 வயதான சேவியர் பெர்ட்ரான்டும் அவரது துணைவியும்)

குமாரதாஸன். பாரிஸ்.

]]>