//anjeng #ரஷ்யா #உக்ரேன் #பிரான்ஸ் – Mukadu https://www.mukadu.com Sat, 09 Apr 2022 21:20:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 பிரிட்டிஷ் பிரதமர் ஜோன்சன் கீவ் நகருக்குத் திடீர் விஜயம்! https://www.mukadu.com/2022/04/09/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a/ Sat, 09 Apr 2022 21:20:24 +0000 http://www.mukadu.com/?p=26263 பிரிட்டிஷ் பிரதமர் ஜோன்சன்
கீவ் நகருக்குத் திடீர் விஜயம்!


உக்ரைனுக்கு 120 கவச வாகனங்கள்
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உதவி

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்
சனிக்கிழமை உக்ரைன் தலைநகர் கீவு
க்குத் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்
டார். அதன்போது உக்ரைன் படைகளுக்கு
120 இராணுவக் கவச வாகனங்களையும்
புதிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தொகு
தியையும் வழங்கினார் என்று “நம்பர் 10” பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் 100 மில்லியன் பவுண்ட்ஸ் பெறு
மதியான இராணுவ உதவிகளும் அறிவி
க்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 24 இல் ரஷ்யா போரைத்
தொடக்கிய பிறகு கீவ் நகருக்குச் சென்று
அதிபர் ஷெலன்ஸ்கியை நேரில் சந்திக்
கின்ற வல்லரசுத் தலைவர் ஜோன்சன்
என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கீவ்
நகர வீதிகளில் நடந்து பார்வையிடும் படங்களைச் செய்தி ஊடகங்கள் வெளி
யிட்டுள்ளன. அங்கு வைத்து அதிபர்
ஷெலன்ஸ்கியை “சிங்கம்” என்று புகழ்ந்
தார் ஜோன்சன்.

“உக்ரைன் கணிப்புகளை மீறி, ரஷ்யப் படைகளைக் கீவ் நகரின் வாயில்களில் இருந்து பின்னுக்குத் தள்ளி, 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனையை அடைந்துள்ளது. இந்தப் போரில் இங்கி
லாந்து அவர்களுடன் உறுதியாக நிற்கி
றது என்பதை நான் இன்று தெளிவு
படுத்தியுள்ளேன். நாங்கள் நீண்ட காலத்திற்கு இவ்வாறு ஐக்கியமாய் இருப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.

உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் கவச வாகனங்களை ஏற்கனவே விநியோகித்
துள்ளன. ஆனால் பிரிட்டன் அதன் நவீன ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதியை (Harpoon anti-ship missile systems) வழங்குகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் நேட்டோ நாடு ஒன்று
இதுபோன்ற ஆயுத தளபாட உதவியை
வழங்குவது இதுவே முதல் முறை ஆகும்.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போரில்
தப்பி வெளியேறிக் கொண்டிருந்த நூற்
றுக்கணக்கான மக்களால் நிறைந்திருந்த
ரயில் நிலையம் ஒன்றை ரஷ்யப்படைக
ளின் ஏவுகணைகள் தாக்கியதில் ஐம்பது
க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவத்
துக்குப் பின்னரே பிரிட்டனின் இந்தப் புதிய இராணுவ உதவிகள் அறிவிக்கப்
பட்டுள்ளன.

ஜரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன்(European Commission President Ursula von der Leyen)
வெள்ளிக்கிழமை கீவ் நகருக்குச் சென்
றிருந்தார்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
தெற்கு ஒடெசா துறைமுக நகர் மீது புதிதாகத் தாக்குதல்கள் ஆரம்பம்!! https://www.mukadu.com/2022/04/03/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%9f%e0%af%86%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0/ Sun, 03 Apr 2022 11:48:06 +0000 http://www.mukadu.com/?p=26255 தலைநகர் கீவ் பகுதிகளிலிருந்து
ரஷ்யப் படைகள் முற்றாக வாபஸ்
புறநகரங்களில் பேரழிவுக் காட்சி

தெற்கு ஒடெசா துறைமுக நகர் மீது
புதிதாகத் தாக்குதல்கள் ஆரம்பம்!!

உக்ரைன் தலைநகர் அமைந்துள்ள
பிராந்தியம் அடங்கலாக வட பகுதியில் இருந்து ரஷ்யா தனது படைகளை மீள
அழைத்துள்ளது.கீவ் புறநகர் பகுதிகளை முற்றுகையிட்டிருந்த படைகள் அங்கிரு
ந்து வெளியேறியதை அடுத்துப் பொது
மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத்
தொடங்கியுள்ளனர். புற நகரத் தெருக்
கள் எங்கும் அழிவுண்ட பிரதேசங்களாக
காட்சியளிப்பதை அங்குள்ள செய்தியா
ளர்கள் விரித்துள்ளனர். ரஷ்யப்படைக
ளின் சேதமடைந்த டாங்கிகளும் வாகன
ங்களும் வீதிகளில் வரிசையில் கிடக்கின்
றன. அங்காங்கே மனித சடலங்களும்
தரையில் கிடப்பதை படங்கள் காட்டுகின்
றன. பூட்சா (Boutcha) என்ற புறநகர வீதி
ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில்
சடலங்கள் வரிசையில் கிடப்பது கண்டுபி
டிக்கப்பட்டுள்ளது.ரஷ்யப்படைகள் புரிந்த
மிலேச்சத்தனமான படுகொலை அது என
உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.

தலைநகர் கீவைக் கைப்பற்றுகின்ற
முற்றுகை ரஷ்யப் படைகளுக்குப் பலத்த
இழப்புக்களுடன் கூடிய பின்னடைவை
ஏற்படுத்தி விட்டுள்ளது என்று போரியல்
நிபுணர்கள் கூறுகின்றனர். உக்ரைன் படைகளது “சூட்டுவலு” மேற்குலக நாடு
கள் வழங்கிய ஆயுதங்களால் மிக உச்ச அளவில் இருந்தமையே ரஷ்யாவுக்குப் பலத்த இழப்புகளைக் கொடுத்துள்ளது.

வடக்கில் இருந்து திருப்பி அழைத்த தனது படைகளைக் கொண்டு தெற்கிலும்
கிழக்கிலும் தாக்குதல்களைத் தீவிரமாக்
குவதற்கு மொஸ்கோ முயற்சித்து வருகி
றது.போரின் 36 ஆவது நாளான இன்று
(ஞாயிறு) நாட்டின் தென் மேற்கே அமைந்
துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த
ஒடெசா(Odessa) துறைமுக நகரம் மீது ரஷ்யா கடும் ஏவுகணைத் தாக்குதல்
களை நடத்தியுள்ளது. அங்குள்ள எரிபொ
ருள் குதங்களை தரை,கடல் வழி மூலமாக
ஏவுகணை கொண்டு தாக்கி அழித்து விட்
டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு தெரி
வித்துள்ளது.

போர் ஒரு புறம் நீடிக்கும் அதேசமயம்
துருக்கியின் மத்தியஸ்தத்தோடு நடை
பெறும் பேச்சுக்களில் உக்ரைன் முன்
வைத்த அமைதி யோசனைகளை
மொஸ்கோ பிரதிநிதிகள்”வாய் மூலம்”
ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரி
விக்கப்படுகிறது.

*நேட்டோவில் உக்ரைன் இணையாது-
*ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய
லாம்..
*கட்டம்கட்டமாக ரஷ்யா படைகளைத் திரும்பப் பெறும்-
*கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள டொன்பாஸ் பிராந்தியத்துக்குத் தன்
னாட்சி-
*கிரீமியா தொடர்பில் உக்ரைன் விலகி
இருக்கும் –
*அமெரிக்கா தவிர்ந்த – நேட்டோவில் இல்லாத- ஒரு நாட்டில் ஷெலான்ஸ்கி – புடின் அதிபர்கள் சந்திப்பு-

இந்த யோசனைகளை உள்ளடக்கிய
திட்டத்தையே உக்ரைன் முன்வைத்து
ருந்தது.

படங்கள் :கீவுக்கு அருகே அழிவுகளுடன்
காட்சி தரும் புறநகர வீதி. 2.ஒடெசா துறைமுக நகரில் ரஷ்யத் தாக்குதலில்
எரிகின்ற எண்ணெய்க் குதம்.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
ரஷ்யா போரை நிறுத்தினால் உக்ரைன் நடுநிலை பேணும்! https://www.mukadu.com/2022/03/29/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ Tue, 29 Mar 2022 19:50:14 +0000 http://www.mukadu.com/?p=26247 துருக்கிப் பேச்சு முன்னேற்றம்!
ரஷ்யா போரை நிறுத்தினால்
உக்ரைன் நடுநிலை பேணும்!

நேட்டோவில் சேராது ஆனால்
ஐ. ஒன்றியத்தில் இணையும்

உக்ரைன் – ரஷ்யா சமாதானக் குழுக்
கள் இடையே துருக்கியில் இன்று நடை
பெற்ற நேரடிப் பேச்சுக்கள் குறிப்பிடக்
கூடிய முன்னேற்றத்தை எட்டியிருப்ப
தாக அங்காராவில் அந்நாட்டின் வெளி
விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா போரை நிறுத்தித் தனது படை
களை முற்றாக வெளியேற்றுமானால்
அதற்குத் தனது தரப்பு விட்டுக்கொடுப்
பாக நேட்டோவில் இணையும் விருப்பத்
தை உக்ரைன் கைவிடும். அத்துடன்
டொன்பாஸ் பிராந்தியத்தைத் தற்காலி
கமாகத் தனது பிடியில் இருந்து விலக்கி
விடவும் அது இணக்கம் தெரிவித்துள்
ளது.

பேச்சு மேசையில் உக்ரைன் தரப்பு முன்
வைத்த திட்டங்கள் வருமாறு :

?பாதுகாப்பு உத்தரவாதம் :சட்ட ரீதியாக
உத்தரவாதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
உத்தரவாதம் ஒன்றை மேற்கு நாடுகளி
டம் இருந்து உக்ரைன் எதிர்பார்க்கிறது.
நேட்டோ வழங்குகின்ற பாதுகாப்புக்கு
நிகரான அல்லது அதைவிடச் சிறந்ததாக
அந்த உத்தரவாதம் அமைய வேண்டும்.

நாங்கள் சர்வதேச பொறிமுறை ஒன்று
டன் கூடிய பாதுகாப்பு உத்தரவாதத்தை
எதிர்பார்க்கிறோம். உத்தரவாத நாடுகள்
நேட்டோ உடன்படிக்கையின் சரத்து 5
போன்று விரைந்து பாதுகாப்பு உதவி அளிக்கும் விதமான விதிகளோடு அது
அமையவேண்டும் – என்று உக்ரைன்
தரப்புப் பிரதிநிதி கூறியிருக்கிறார்.

?நேட்டோ :பாதுகாப்பு உத்தரவாதம்
நடைமுறைக்கு வந்தவுடன் நேட்டோவில்
இணைவது என்ற தனது அபிலாசையை
உக்ரைன் கைவிடும்.

?பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்த பிறகு தனது எல்லைக்குள் வெளிநாட்டு
படைத் தளங்கள் எதனையும் உக்ரைன்
வைத்திருக்க மாட்டாது.

?பாதுகாப்பு உத்தரவாத உடன்படிக்கை
உக்ரைன் ஜரோப்பிய ஒன்றியத்தில்
இணைவதைக் கட்டுப்படுத்தாது என்பது
கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

உக்ரைன் தரப்பின் இந்த யோசனைகள்
அடங்கிய திட்டத்தை ரஷ்யா சாதகமாகப்
பரிசீலிக்க இணங்கியுள்ளது. சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இன்றைய
பேச்சுக்களின் முன்னேற்றத்தைக் குறிக்கின்ற ஒரு சாதக சமிக்ஞையாக
தலைநகர் கீவின் சுற்றுவட்டாரம் உட்பட
உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்யா
வின் போர் நடவடிக்கைகள் தணிக்கப்பட
வுள்ளன என்று ரஷ்யப் பிரதிநிதிஅறிவித்
துள்ளார்.

இதேவேளை, அதிபர் மக்ரோன் இன்று
மாலை மீண்டும் ஒரு தடவை புடினுடன்
தொலைபேசி வழியே பேசினார். மரியு
போல் நகரில் இருந்து மக்களை வெளி
யேற்றுவதற்கான சர்வதேச மீட்பு முயற்சி
க்குப் புடினின் இணக்கத்தைப் பெறுவ
தற்காக மக்ரோன் அவருடன் தொடர்பு கொண்டார்.போரின் தற்போதைய கட்
டத்தில் அவ்வாறான ஒரு மீட்பு சாத்திய
மில்லை என்று புடின் கூறியுள்ளார்
என எலிஸே மாளிகை பின்னர் தெரிவித்
துள்ளது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
மேற்குலகால் வெல்லமுடியாத புதிய தலைமுறை போராயுதம்! “ஹைப்பர்சோனிக்”ஏவுகணை. https://www.mukadu.com/2022/03/20/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/ Sun, 20 Mar 2022 06:40:03 +0000 http://www.mukadu.com/?p=26235 “ஹைப்பர்சோனிக்”ஏவுகணையால் ஆயுதக் கிடங்கை அழித்தது ரஷ்யா!

மேற்குலகால் வெல்லமுடியாத
புதிய தலைமுறை போராயுதம்!

ரஷ்யா மிக அண்மைக் காலத்தில் அறி
முகப்படுத்திய”ஹைப்பர்சோனிக்” ஏவு
கணைகளை உக்ரைன் போரில் பயன்
படுத்தியதை முதல் முறையாக உறுதிப்
படுத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து 600
கிலோமீற்றர்கள் மேற்கே இவானோ-
ஃபிராங்கிவ்ஸ்க் (Ivano-Frankivsk) பிராந்
தியத்தில் உக்ரைன் படைகளது ஆயுதக்
கிடங்கு ஒன்றை ஹைப்பர்சோனிக் ஏவு
கணைகளால் தாக்கி அழித்துவிட்டதாக
ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு சனியன்று
தெரிவித்துள்ளது.

அடுத்த தலைமுறை ஏவுகணை என்று
அதிபர் புடினால் 2018 இல் அறிமுகப்படுத்
தரப்பட்டிருந்த “கின்ஷால்” (Kinzhal) எனப்
பெயரிடப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுக
ணைகள் மூலமே அந்தத் தாக்குதல் நடத்
தப்பட்டிருக்கிறது. மிக் போர் விமானங்
கள் மூலம் பயன்படுத்தக் கூடிய இந்த
வான் வழித் தரை இலக்கைத் தாக்கு
கின்ற நீண்ட தூர ஏவுகணைகள் (long-
range air-to-ground missile) ரஷ்யா கடந்த
பத்து ஆண்டுகளுக்குள் தயாரித்த சவால்
மிக்க போராயுதம் ஆகும்.மணிக்கு 6,000 கிலோமீற்றர்களுக்கும் அதிக வேகத்தில்
-ஒலிவேகத்தை விடப் பல மடங்கு அதிக
விரைவில் -பறக்கவல்ல இந்த ஹைப்பர்
சோனிக் ஏவுகணைகளை அமெரிக்கா
உட்பட நேட்டோ படைகளிடம் தற்சமயம்
உள்ள வான் பாதுகாப்புக் கவசங்கள்
(air defense systems) எதனாலும் தடுத்து
விட முடியாது என்று ரஷ்யா கூறுகிறது.
அதேவேளை இந்த ஏவுகணையில்
வழக்கமான குண்டுகளையும் தேவைப்
பட்டால் அணுகுண்டுகளையும் பொருத்த
முடியும்.

இரண்டாயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி இலக்குகளைத் தாக்கவல்ல ரஷ்யாவின் “கின்ஷால்”(Kinzhal) அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பாதுகாப்புச் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க வல்லரசு தனது ஹைப்பர்
சோனிக் ஏவுகணையை 2024 ஆம் ஆண்டு பாவனையில் சேர்ப்பதற்கு
உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸின் பாது
காப்பு அமைச்சர் 2019ஆம் ஆண்டு இரா
ணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் பரி
சோதனைகள் கடந்த ஆண்டு இறுதி
யில் நடத்தப்படும் என்பதை அறிவித்தி
ருந்தார். சீனா ஏற்கனவே தனது ஹைப்
பர்சோனிக் ஏவுகணையைக் காட்சிப்
படுத்தியுள்ளது.

(படம் :ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்
றைச் சுமந்து பறக்கும் மிக் போர் விமா
னம்.)
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
ஐரோப்பாவின் கவனத்தை ஈர்க்க உக்ரைனின் முயற்சி. https://www.mukadu.com/2022/03/13/%e0%ae%90%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%88%e0%ae%b0%e0%af%8d/ Sun, 13 Mar 2022 08:31:11 +0000 http://www.mukadu.com/?p=26231 ஈபிள் கோபுரம் தாக்கப்படும்
காட்சியுடன் போலி வீடியோ!

ஐரோப்பாவின் கவனத்தை
ஈர்க்க உக்ரைனின் முயற்சி

பாரிஸ் நகரம் குண்டுத் தாக்குதலுக்கு
இலக்காகுவது போன்ற”டம்மி” காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை உக்ரைன்
வெளியிட்டிருக்கிறது.உக்ரைனின் நா
டாளுமன்றமாகிய ராடா (Rada)வெள்ளி
யன்று தனது ருவீற்றர் தளத்தில் வெளி
யிட்ட அந்தக் காணொலி உலகெங்கும்
சமூகவலைத் தளங்களில் வைரலாகப்
பரவியுள்ளது.

பதற்றத்தை ஏற்படுத்தும் அந்த வீடியோ
உக்ரைனின் நிலைமை மீது ஐரோப்பா
வின் கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்
ளது.

பாரிஸ் நகரம் மீது போர் விமானங்கள்
குறுக்கும் மறுக்குமாகப் பறக்கின்றன.
இளம் பெண் ஒருவர் ஈபிள் கோபுரம் முன்
பாகப் படம் ஒன்றை எடுக்கிறார். சிறிது
நேரத்தில் கோபுரத்தைக் குண்டுகள் தாக்
குகின்றன. இன்னொரு காட்சியில் பாரிஸ் ஒபேரா அரங்கை (Opéra Garnier)
சூழவுள்ள பகுதிகளைக் குண்டுகள் தாக்
குகின்றன. பின்னணியில் பெண் ஒரு
வர் பிரெஞ்சு மொழியில் ஏதோ பேசுகி
றார். அவரது குரல் குழந்தைகளின் அழு
குரல்களால் சூழப்படுகிறது.

“இது உங்களுக்குக் கவலையளிக்கவில்
லையா?” பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அல்லது பெர்லினில் உள்ள பிரண்டன்பேர்க் கதவு(Brandenburg Gate) மீது இடைவிடாத ரஷ்யக் குண்டு வீச்சு நிகழ்ந்தால் அது உங்களுக்குக் கவலையளிக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இன்று உக்ரைன், நாளை, அது ஐரோப்பா முழுவதும் நடக்கும். ரஷ்யா நிறுத்தாது”.

-இவ்வாறு ஐரோப்பாவை நோக்கிக்
கேள்விகளை எழுப்புகிறது உக்ரைன்
நாடாளுமன்றத்தின் வீடியோ.

உக்ரைன் மீது அதிபர் புடினால் கடந்த பெப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட
படையெடுப்பு தலைநகர் கீவ் வரை முன்
னேறியுள்ளது. தலைநகரம் ரஷ்யப்படை
களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.மிகப்
பெரும் மனிதப் பேரவலம் அங்கு தோன்
றியுள்ளது.ரஷ்யாவின் வான் தாக்குதல்
களைத் தடுப்பதற்காக நாட்டுக்கு மேலே
வான் பறப்புத் தடை வலயம் ஒன்றை
அறிவிக்குமாறு உக்ரைன் மன்றாடிக்
கேட்டு வருகிறது. அவ்வாறு செய்வது
போரில் நேட்டோவின் நேரடியான தலை
யீடாக மாறிவிடும். அது மூன்றாம் உலகப்
போருக்கு வழிவகுத்துவிடும் என்று கூறி
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்
உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்து
விட்டன.

இந்தப் பின்னணியிலேயே விரைந்து
உதவி கோரும் விதமாக இவ்வாறு ஒரு
வீடியோவை உக்ரைன் நாடாளுமன்றம்
வெளியிட்டிருக்கிறது.

உக்ரைனின் தலைநகர் உட்பட பல பகுதி
களின் மீதும் இன்று ஞாயிற்றுக்கிழமை
காலை முதல் ரஷ்யப் படைகள் தீவிர
தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. உக்
ரைனின் மேற்குப் பகுதியில் – போலந்து
எல்லைக்கு நெருக்கமாக அமைந்துள்ள
லிவிவ் பிராந்தியத்தில் (Lviv region) அமெ
ரிக்கா உட்பட வெளிநாட்டுப் படையினர்
இணைந்த இராணுவப் பயிற்சி மையத்
தின் மீது இன்று காலை சுமார் எட்டு ஏவு
கணைகள் தாக்கியுள்ளன.சேதவிவரங்
கள் எதுவும் தெரியவரவில்லை.

இந்தப் பகுதி ஊடாகவே பெரும் எடுப்பில்
அகதிகள் போலந்துக்குள் வெளியேறு
கின்றனர். உக்ரைனுக்கான அமெரிக்க
போர்த் தளபாட உதவிகளும் அந்த வழி
யூடாகவே வழங்கப்படுகின்றன. அமெரிக்
காவின் ஆயுத விநியோகங்கள் போர்
இலக்குகளாகக் கருதப்பட்டு அதன் மீது
தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா
எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்
தக்கது.

(*படங்கள் :உக்ரைனின் போலி வீடியோ
காட்சிகள். Fake video footage of Ukraine)

– பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் – நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்?: செ.கார்கி https://www.mukadu.com/2022/03/03/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ Thu, 03 Mar 2022 19:12:50 +0000 http://www.mukadu.com/?p=26226 உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் – நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்?: செ.கார்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் உக்ரைனைச் சேர்ந்த அப்பாவி மக்கள் உயிருக்குப் பயந்து வெளி நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றார்கள்.

இதுவரை உக்ரைன் தரப்பில் 352 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதே போல 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யா இதுவரை உயிரிழப்பு தொடர்பாக எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஊடகங்கள் தொடர்ச்சியாக இந்தப் போரை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான போராக காட்டிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் உண்மையில் இந்தப் போர் ரஷ்யாவுக்கும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ நாடுகளுக்குமான போராகும்.

போர் உக்ரைன் மண்ணில் நடந்தாலும் ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளின் ஆயுத உதவி, பொருளாதார உதவி போன்றவற்றுடன் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

அமெரிக்கா ஏற்கெனவே 600 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ள நிலையில், மேலும் 350 மில்லியன் டாலர் நிதியுதவி செய்திருக்கின்றது.

இவை தவிர கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், ஜப்பான், பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், ருமேனியா, இஸ்ரேல், நெதர்லாந்து, பல்கேரியா, போலந்து, சுலோவாக்கியா, டென்மார்க் மற்றும் செக் குடியரசு நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்துள்ளன.

உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார உதவிகளை செய்வதோடு அல்லாமல் ரஷ்யா மீது அமெரிக்கா, கனடா, பிரிட்டன்,ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து உள்ளன. அத்துடன் பெரும்பாலான சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் கட்டண முறையான ‘ஸ்விப்ட்’ அமைப்பில் இருந்தும் சில ரஷ்ய வங்கிகள் நீக்கப்பட்டு உள்ளன.

ஆனால் அமெரிக்க ஆதரவு ரஷ்ய எதிர்ப்பு ஊடகங்கள் தொடர்ச்சியாக ரஷ்யா இந்தப் போரை திட்டமிட்டு நடத்துவதாக தொடர்ந்து அவதூறு பரப்புகின்றன. அமெரிக்க இராணுவத்தாலும் உளவு அமைப்புகளாலும் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்ற ஆவணங்களையே அவை செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

அவர்கள் தரும் ‘உண்மைச் செய்தி’ என்னவென்றால் சமாதானத்தை விரும்பும் அமெரிக்காவும், மற்ற நேட்டோ நாடுகளும் உக்ரைன் மீது அத்துமீறி படையெடுக்கும் ரஷ்யாவுக்கு புத்தி புகட்டிக்கொண்டு இருக்கின்றன என்பதுதான்.

ஆனால் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனைத் தூண்டிவிட்டு தனது காரியத்தை சாதித்துக் கொள்ள அமெரிக்காவும் நேட்டோவும் எப்போதுமே முன்தயாரிப்பு வேலைகளைச் செய்தே வந்துள்ளன. கடைசி எட்டு மாதத்தில் மட்டும் கிரீஸ் நாட்டில் இருக்கும் அதன் தளத்தில் 10,000 அமெரிக்கத் துருப்புகளை நிலை நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. பால்கன் மற்றும் கருங்கடல் பகுதிகளில் சண்டைக்கான தயாரிப்பாக ஒத்திகைப் பயிற்சியை நடத்தியிருக்கிறது. அத்துடன் கருங்கடலில் இதுவரை நடத்தியதிலேயே மிகப்பெரிய போர்ப் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

இன்று ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுப்பதை ஜனநாயகத்தை மீறிய செயலாகப் பார்க்கும் அமெரிக்காவும், நேட்டோவும் யூகோஸ்லாவியாவின் சுய நிர்ணய உரிமையை ஆதரித்ததில்லை. 1999 இல், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி கொசோவோ பிரிவினைக்கு ஆதரவாக 78 நாட்கள் தொடர்ந்து சேர்பியா மீது குண்டுவீச்சு நடத்தியது. இறுதியில் போதைமருந்துக் கூட்டத் தலைவர்களைக் கொண்ட ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுதந்திர கொசோவோ உருவாக்கப்பட்டது.

2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல், ஈராக் மீதான படையெடுப்பு, 2011 இல் லிபியா மீதான அமெரிக்கா-நேட்டோ தாக்குதல் போன்றவை சர்வதேச சட்டங்களை மீறியே நடத்தப்பட்டன. மாவோவின் மொழியில் சொன்னால்

“… உலக யுத்தம் நடக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பவர்களாக நாம் இருக்க முடியாது. யுத்தத்தில் ஈடுபடாத ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானால்கூட, யுத்தத்துக்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது. ஏகாதிபத்தியம் போரிட விரும்பும்போது எந்த ஒப்பந்தமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படப் போவதில்லை…” (மாவோ தொகுப்பு நூல்கள் தொகுதி எட்டு -பக்கம் 527)

அப்படியான சூழ்நிலையில் ரஷ்யா உக்ரைன் பேரில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

இதற்கு முதலாளித்துவவாதிகளும் கம்யூனிஸ்ட்களும் பல்வேறுவிதமான தங்களின் ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடுகளை பதிவு செய்கின்றார்கள். மாவோ சொல்கின்றார்.

“….போர்கள் நீதியானவை எனவும் அநீதியானவை எனவும் இரு வகைகளாக பிரிக்கப்படுவதாக வரலாறு காட்டுகின்றது. முற்போக்கான போர்கள் அனைத்தும் நீதியானவையே. முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இடுகின்ற போர்கள் அனைத்தும் அநீதியானவையே. கம்யூனிஸ்ட்களாகிய நாம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இடுகின்ற நீதியற்ற அனைத்து போர்களையும் எதிர்க்கின்றோம். ஆனால் முற்போக்கான, நீதியான போர்களை எதிர்ப்பதில்லை….” (மாவோ தொகுப்பு நூல்கள் தொகுதி இரண்டு -பக்கம் 197).

அப்படி என்றால் இந்தப் போர் நீதியானதா, முற்போக்கானதா என்ற கேள்வி எழும். எந்த வகையிலும் இந்தப் போர் முற்போக்கானதோ நீதியானதோ கிடையாது. காரணம் இந்தப் போர் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து உக்ரைனில் ஒரு சோசலிச அரசை அமைக்க உக்ரைன் மக்களின் ஆதரவுடன் ரஷ்யா செய்யும் போரல்ல. காரணம் ரஷ்யா ஒரு சோசலிச நாடும் அல்ல.

இரண்டு முதலாளித்துவ நாடுகள் மேலாதிக்கப் போட்டியில் தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. உலக நாட்டாமை அமெரிக்காவும் அதன் அடிமை நேட்டோ நாடுகளும் உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யாவை வீழ்த்த திட்டமிடும் போது தன்னை காப்பாற்றிக் கொள்ள அதற்கு வேறு வழியே இல்லாத போது, இந்தப் போரை ரஷ்யா நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. காரணம் அமெரிக்க மற்றும் நேட்டோவிடம் இருந்து தன் மக்களையும் நாட்டையும் காக்க வேண்டிய பொறுப்பு ரஷ்யாவுக்கு உள்ளது.

ஆனால் இந்தப் போரில் எந்தவித ஏகாதிபத்திய எதிர்ப்போ, முதலாளித்துவ எதிர்ப்போ இல்லாததால்தான் இந்தப் போரை நாம் பிற்போக்கானது, அநீதியானது என்கின்றோம். காரணம் நாளை உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தாலும் ரஷ்யாவால் சுரண்டப்படும் ஒரு நாடாகத்தான் உக்ரைன் இருக்கும்.

அரசியல் அற்ற போர் எதிர்ப்பு என்பது வேடிக்கையானது. இரண்டு முதலாளித்துவ நாடுகள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளும் போது அதில் எந்தவிதமான ஏகாதிபத்திய எதிர்ப்போ, இரு நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் ஒருங்கிணைவோ இல்லாத போது பொத்தம் பொதுவாக போரை எப்படி எதிர்க்க முடியும்?.

தனிச்சொத்துடைமையும், முதலாளித்துவமும் இருக்கும் வரை உலகில் போர்கள் என்பது தவிர்க்க முடியாது. சொத்துடைமை என்பதே போர்களால்தான் வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

“…அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போராக இருக்கையில் போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் என கூறப்பட இயலும்” (மாவோ தொகுப்பு நூல்கள் தொகுதி இரண்டு பக்கம் 202)

இதுதான் எதார்த்தம். உக்ரைன் ரஷ்ய போர் என்பது முதலாளித்துவ போட்டிக்கான, ஏகாதிபத்தியப் போட்டிக்கான ரத்தம் சிந்தும் அரசியல்.

இது வரலாற்றில் தவிர்க்க முடியாத விதி. எந்த எந்த நாடுகள் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றதோ எந்த எந்த நாடுகள் வல்லரசுப் போட்டியில் உள்ளதோ அவை எல்லாம் தங்களுக்குள் அடித்துக் கொண்டும் வெட்டிக் கொண்டும்தான் சாகும்.

இந்தப் போரை உக்ரைன் நினைத்தால் தவிர்த்திருக்கலாம். நேட்டோ போன்ற கொலைகாரக் கூட்டணியில் இணைந்து உக்ரைனை ரஷ்யாவுக்கு எதிரான தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கும் அதன் முடிவு நிச்சயம் அநீதியானது. இந்தப் போர் ரஷ்யாவின் மீது அமெரிக்க மற்றும் அதன் நேட்டோ நாடுகளால் திணிக்கப்பட்ட போர்.

நாம் போரை நிறுத்து என ரஷ்யாவை பார்த்துச் சொல்லும் அதே வேளையில் பாசிச சக்திகளுடன் சேர்ந்து ரஷ்யாவை அழிக்க வேலை பார்க்கும் உக்ரைனையும் அதற்கு உதவியாக இருக்கும் போர்வெறியர்களையும் எதிர்க்க வேண்டும். ஒரு பக்கச் சார்பு என்பது இங்கே எடுபடாத வெற்று அரசியல்.

– செ.கார்கி

]]>
புடினுடனான பேச்சுக்குப் பின் நம்பிக்கை இழந்தார் மக்ரோன். https://www.mukadu.com/2022/03/03/%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/ Thu, 03 Mar 2022 16:10:13 +0000 http://www.mukadu.com/?p=26223 நிலைமை இன்னும்
படுமோசமாகலாம்….!

புடினுடனான பேச்சுக்குப் பின்
நம்பிக்கை இழந்தார் மக்ரோன்

உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றும் வரை போரைநிறுத்தப் போவதில்லை என்பதில் புடின் உறுதியாக உள்ளார்.
அதனால் போர் நிலைவரம் இன்னும்
மோசமாகலாம் என்று எலிஸே மாளிகை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.

மக்ரோனின் கோரிக்கையின் பேரில்
புடின் இன்று அவருடன் சுமார் ஒன்றரை
மணிநேரம் தொலைபேசியில் பேசினார்.
அந்தப் பேச்சுக்குப் பின்னர் மக்ரோன் அவர் மீது”நம்பிக்கை இழந்துள்ளார்” என்
றும் போர் மேலும் படுமோசமான கட்டத்
துக்குச் செல்லக்கூடும் என்று அவர் எதிர்
பார்கிறார் எனவும் எலிஸே மாளிகை வட்
டாரங்கள் கூறியுள்ளன.

தொலைபேசி உரையாடலில் புடின், உக்
ரைனுடன்”சமரசம் செய்யமுடியாத சண்
டையைத்” தொடரப் போவதாகப் கூறியி
ருக்கிறார்.படை நடவடிக்கை திட்டமிட்டது போன்று முன்னேறிவருகிறது. நாசிஸத்
தின் பிடியில் இருந்து உக்ரைனை முழு
மையாகக் கைப்பற்றும் வரை அது நீடிக்
கும் என்றும் புடின் மக்ரோனிடம் கூறி
னார் என்று தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்
டும் என்று மக்ரோன் விடுத்த கோரிக்
கையைப் புடின் நிராகரித்து விட்டார்.

மக்ரோன் நேற்று மாலை நாட்டு மக்க
ளுக்கு ஆற்றிய உரையில், “புடின் தன் பாட்டில் தனித்தே உக்ரைன் மீதான போரைத் தெரிவுசெய்துள்ளார்” என்றும்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்துவது”தாக்கு
தல்” அல்ல, “துன்புறுத்தலே” என்றும்
கூறியிருந்தார். மக்ரோனின் அந்தக்
கூற்றுக்கள் புடினுக்கு ஆத்திரமூட்டியுள்
ளன என்றும் அதற்காகக் கிரெம்ளின்
தனது கண்டனத்தை வெளியிட்டிருப்ப
தாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்
கின்றன.

உக்ரைன் நாட்டின் தெற்கில் முக்கிய
பெரிய நகரமாகிய கெர்சன்(Kherson)
ரஷ்யப்படைகளிடம் வீழ்ந்திருக்கிறது.
போரில் வீழ்ச்சியடைந்துள்ள முதலா
வது உக்ரைன் நகரம் இதுவாகும்.மரியு
போல்(Mariupol), ஹார்கிவ் ( Kharkiv) ஆகிய அடுத்த பெரிய நகரங்களும்
பலமான தாக்குதலுக்கு இலக்காகியுள்
ளன.

கெர்சன் நகரின் வீழ்ச்சிக்குப் பின்னர்
கருத்து வெளியிட்டிருக்கும் ரஷ்ய வெளி
விவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்
(Sergei Lavrov), அமெரிக்காவை”நாசி ஜேர்
மனியுடன்” ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரைன்
சமாதானப் பேச்சுக் குழுவினருக்கு இடை
யிலான இரண்டாவது சந்திப்பு பெலாரஸ்
நாட்டின் போலந்து எல்லையில் ஆரம்ப
மாகியுள்ளது என்பதை இரு தரப்புகளும்
உறுதிப்படுத்தி உள்ளன.பேச்சு மேசை
யில் தனது நிபந்தனைகளை அதிகரிக்க
வுள்ளதாக மக்ரோனுடனான பேச்சுக்குப்
பின்னர் கிரெம்ளின் அறிவித்துள்ளது.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
கருங்கடல் பாம்புத் தீவை காக்க போரிட்டு மடிந்த 13 சிப்பாய்கள்! https://www.mukadu.com/2022/02/25/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%88/ Fri, 25 Feb 2022 16:04:51 +0000 http://www.mukadu.com/?p=26216 கருங்கடல் பாம்புத் தீவை காக்க
போரிட்டு மடிந்த 13 சிப்பாய்கள்!
உக்ரைன் கௌரவித்து மரியாதை

*செர்னோபில் அணு ஆலையை
ரஷ்யப் படைகள் கைப்பற்றின!

*ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தில்
மொஸ்கோ மீது தடைகள் அறிவிப்பு

*உக்ரைனுக்கு அமெரிக்கா படையை
அனுப்பாது என்பதில் பைடன் உறுதி

தற்போதைய சண்டையில் கருங்கடல்
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. உக்
ரைனை விடவும் அந்தக் கடல் பகுதி ஆதி
க்கம் ரஷ்யாவின் நீண்ட கால இலக்காக
இருந்து வருகிறது.

கடந்த வியாழன் அதிகாலை ரஷ்யா போரைத் தொடக்கியபோது முதலில்
உக்ரைனுக்குச் சொந்தமான கருங்கடல்
தீவில் படை இறக்கம் ஒன்றைச் செய்தது
பாம்புத் தீவு (Snake Island) என்று பொது
வாக அழைக்கப்படுகின்ற அந்தச் சின்
னஞ்சிறிய தீவை உக்ரைன் எல்லைக்
காவல் படையைச் சேர்ந்த 13 வீரர்கள்
கடைசிவரை நின்று காவல்காத்து வந்த
னர். Serpent Island என்றும் சொல்லப்படும் அந்தத் தீவை நெருங்கிய ரஷ்யக் கடற்
படைக் கப்பல் ஒன்றில் இருந்து 13 வீரர்
களையும் சரணடையும் படி செய்தி அனுப்பப்பட்டது. அதை ஏற்க மறுத்த அவர்கள் கடைசி வரை சரணடைய மறுத்துப் போரிட்டு உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவிடம் மண்டியிட மறுத்த அந்த வீரர்கள் எதிரிக்கு அனுப்
பிய கடைசி வீடியோச் செய்தி உலகெங்
கும் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
நெட்டிசன்கள் அதனைப் பகிர்ந்து வரு
கின்றனர்.

சண்டையில் சக படைப் பிரிவுகள் பின்வாங்கிய பிறகும் தீவை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே நின்று
போரிட்ட13 எல்லைக் காவல் வீரர்களும் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் அழிக்கப்பட்டனர் என்பதை உறுதிசெய்
துள்ள உக்ரைன் அதிபர் , அவர்களது வீரத்தையும் தேசப்பற்றையும் மதித்து “நாட்டின் நாயகர்களாகக் (“heroes of Ukraine.”) கௌரவித்திருக்கிறார்.

இதேவேளை,

வரலாற்றில் மிகப் பேரழிவை ஏற்படுத்
திய அணுக் கசிவு விபத்து நடைபெற்ற செர்னோபில் (Chernobyl) பிரதேசத்
தைக் கடும் சண்டைக்குப் பிறகு ரஷ்யப் படைகள் கைப்பற்றி விட்டன என்பதை உக்ரைன் அரசு உறுதிசெய்திருக்கிறது.

செர்னோபிலில் அமைந்திருந்த அணு ஆலையின் நான்கு உலைகளில் ஒன்றில் கடந்த 1986 ஆம் ஆண்டு வெடிப்பு ஏற்பட்
டது.பெரும் அணுக்கசிவினால் அயல் பிரதேசங்கள் அழிந்தன.இன்னமும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்ற
ஆலை தற்சமயம் இரும்புப் போர்வைக்
குள் மூடப்பட்டு அணுக்கதிர் வீச்சு அபா
யம் தடுக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதி
யில் இடம்பெறுகின்ற சண்டையின்
போது அணு உலை தாக்கப்படலாம் என்ற
அச்சம் நிலவுகிறது.

உக்ரைனின் வடக்கே பெலாரஸ் எல்லை
யில் தலைநகர் கீவில் இருந்து 90 கிலோ
மீற்றர் தொலைவில் செர்னோபில் அமை
துள்ளது. உக்ரைன் படைகளால் நன்கு பாதுகாக்கப்பட்ட செர்னோபில் பிராந்தி
யத்தின் வீழ்ச்சி ரஷ்யப் படைகள் பெலா
ரஸ் வழியாகக் கீவை நெருங்கிவருவதை
யே காட்டுகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் ஐரோப்பாவின்
ஏனைய எல்லைகளுக்குள் பரவாது தடுக்க வேண்டும் என்று ஜேர்மனிய
சான்சிலர் ஒலப் சோல்ஸ் தெரிவித்திருக்
கிறார். அணு ஆயுதங்களை வைத்துள்ள
உலக சக்திகள் போரில் சம்பந்தப்பட்டிருப்
பதால் உக்ரைன் போர்ப் பதற்றம் எல்லை கள் தாண்டி உலகெங்கும் பரவியிருக்
கிறது.

அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய தொலை
க்காட்சி உரையில் அதிபர் ஜோ பைடன்
உக்ரைனுக்கு மேலும் நிதி மற்றும் ஆயுத உதவிகளை அறிவித்த போதும் தனது துருப்புகளை அனுப்புவதில்லை என்ற வோஷிங்டனின் முந்திய முடிவை மீண்
டும் உறுதிப்படுத்தியுள்ளார்.காலப் போக்
கில் ரஷ்யாவை மிகக் கடுமையாகப் பாதி
க்கக் கூடிய பொருளாதாரத் தடைகள் பல
வற்றையும் அமெரிக்கா அறிவித்திருக்கி
றது.ரஷ்யாவோடு கைகோர்த்துப் போரில்
இணைந்துள்ள பெலாரஸ் நாட்டின் மீதும்
மேலும் புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்
ளன.

அதேசமயம் நேற்றிரவு பிரெசெல்ஸ் நக
ரில் கூடிய ஐரோப்பிய ஒன்றியத்தின்
27 உறுப்பு நாடுகளது தலைவர்கள் மிக
நெருக்கடி காலக் கூட்டம் ஒன்றில் ரஷ்
யா மீதான கடும் பொருளாதாரத் தடை
களை முடிவுசெய்தனர். இந்தக் கூட்டத்து
க்கு முன்பாக அதிபர் மக்ரோன் மீண்டும்
ஒருதடவை ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் போரில்
தாக்கத்தை ஏற்படுத்தவல்ல பதில்கள்
எதனையும் புடினிடமிருந்து பெற்றுக்
கொள்ள முடியவில்லை என்று கூறப்படு
கிறது.

(படம் :1கருங்கடலில் உக்ரைனின் முதல்
காவல் நிலையான பாம்புத் தீவு.


2. அழிவுகளை ஏற்படுத்திய செர்னோ
பில் அணு மின் ஆலை.)

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்

]]>
எலிஸேயின் நிலக்கீழ் அறையில் நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம்! https://www.mukadu.com/2022/02/24/%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%87%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88%e0%ae%af/ Thu, 24 Feb 2022 17:38:48 +0000 http://www.mukadu.com/?p=26209 “ஐரோப்பாவின் வரலாற்றிலும் நம் வாழ்விலும் ஒரு திருப்புமுனை”

போர் குறித்து மக்ரோன்
நாட்டுக்கு விசேட உரை

விளைவுகளில் இருந்து பிரான்ஸை
பாதுகாப்பேன் என்று உறுதி மொழி

?எலிஸேயின் நிலக்கீழ் அறையில்
நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம்!!!

பிரான்ஸின் அதிபர் மக்ரோன் இன்று நண்பகல் நாட்டு மக்களுக்கு விசேட
உரை ஒன்றை ஆற்றியுள்ளார். மிக அரி
தான நிகழ்வாக அந்த உரை நாளை
நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவை
களிலும் வாசிக்கப்படவுள்ளது.

போர்க் காலத்தில் நாட்டையும் மக்களை
யும் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை
வெளியிடுகின்ற ஓர் உறுதி உரையைப் போன்று அவரது சிற்றுரை அமைந்திருந்
தது. அவரது உரைக்கு முன்பாக நாட்டின்
தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம்
எலிஸே மாளிகையின் ஜூபிட்டர் கட்ட
ளைப் பீடத்தில் (Jupiter command post)
நடைபெற்றது. மாளிகையின் நிலத்தடி
யில் உள்ள போர்க்கால உத்தரவுகள், அணுவாயுதங்களை இயக்குவதற்கான
பணிப்புகளை வழங்கும் கட்டளைப் பீடமே “ஜூபிட்டர் பீடம்” என்று அழைக்கப்படுகி
றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வாயிலில்
போர் மூண்டிருப்பதால் ஒன்றிய நாடுக
ளது தலைமைப் பொறுப்பை வகிக்கின்ற
நாடு என்ற வகையில் பிரான்ஸின் முன்
னெடுப்புகள் இந்தப் போர்க்காலப்பகுதி
யில் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதேசமயம் உக்ரைன் நெருக்கடியைத்
தணிப்பதற்காக புடினுடன் பல தடவை
கள் நேரிலும் தொலைபேசி வாயிலாக
வும் சமரச முயற்சிகளை முன்னெடுத்து
வந்த ஒரே தலைவர் மக்ரோன் ஆவார்.

போரில் நேரடியாகத் தலையிடாத – தலை
யிட முடியாத-நிலையில் உள்ள அமெரிக்
கா, ஐரோப்பா உட்பட்ட மேற்குலகம் ரஷ்
யாவுக்கு எதிராக எடுக்கப் போகின்ற நட
வடிக்கைகளைக் காண்பதற்காக உலகம்
காத்திருக்கின்ற இவ் வேளையில்,”பலவீ
னம் இல்லாத ஒரு பதிலடி நிச்சயம்” என்று மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

பல மாத கால ராஜதந்திரப் பேச்சுவார்த்
தைகளுக்குப் பின்னர் போரைத் தொடக்
கியமைக்காக ரஷ்ய அதிபர் மீது கடும் கண்டனத்தை தெரிவித்த மக்ரோன்,
“பிரான்ஸ் உக்ரைன் மக்கள் பக்கம் நிற்கி
றது” என்று அறிவித்தார்.

போரைத் தவிர்ப்பதற்கு எல்லாவற்றை
யும் செய்துள்ளோம்.செய்து வருகிறோம்.
ஆனால் புடின் வாக்குறுதிகளை மீறிவிட்
டார். பல தசாப்தங்களாக ஐரோப்பாவில்
நீடித்த அமைதி, ஸ்திரத்தன்மை என்பவ
ற்றின் மீது அவர் தாக்குதலைத் தொடுத்
துள்ளார். அவரது போர்ச் செயலுக்கு நாங்கள் பலவீனம் இல்லாமல் பதிலளிப்
போம். இந்த இரவின் நிகழ்வுகள் ஐரோப்
பாவின் வரலாற்றிலும் நம் வாழ்விலும்
ஒரு திருப்புமுனை. இது ஐரோப்பா கண்
டத்தினது புவிசார் அரசியலிலும், எங்கள்
தனிப்பட்ட வாழ்க்கையிலும் விளைவு
களை ஏற்படுத்தும். பிரான்ஸ் அதன் அனைத்து வடிவங்களிலும் உக்ரைனுக்
கான தனது ஆதரவை மேலும் வலுப்படுத்
தும். கடந்த காலப் பிசாசுகள் மீண்டும்
பிறப்பெடுக்கின்ற இந்தக் காலகட்டத்தில்
எங்கள் ஒற்றுமையை விட்டுக் கொடுக்க
முடியாது.இந்த நெருக்கடியின் நேரடியா
னதும் மறைமுகமானதுமான விளைவுக
ளில் இருந்து பிரெஞ்சு மக்களைப் பாது
காப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

-இவ்வாறு மக்ரோன் தனது உரையில்
தெரிவித்தார்.

அதிபர் மக்ரோன் உரையாற்றிய சமயத்
தில் அவருக்குப் பின்புறத்தில் பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினது கொடிகளுடன் உக்ரைன் நாட்டின் கொடி
யும் காணப்பட்டது.

இன்றைய பாதுகாப்புச்சபைக்கூட்டத்தில்
உள்துறை, இராணுவம், வெளிவிவகார
அமைச்சர்கள், பிரதமர் உட்பட பாதுகாப்பு
அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மக்ரோன் நாளை, முன்னாள் அதிபர்க
ளான நிக்கலஸ் சார்க்கோஷி, பிரான்
ஷுவா ஹொலன்ட் ஆகியோருடனும்
ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

]]>
நேட்டோவின் பதில் நடவடிக்கை நாளைய கூட்டத்துக்குப் பின்பே! https://www.mukadu.com/2022/02/24/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/ Thu, 24 Feb 2022 16:14:15 +0000 http://www.mukadu.com/?p=26203 பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள்
உக்ரைன் தலைநகர் நோக்கி நகர்வு!!

வெளியேறும் மக்களால்
?உக்ரைன் தலைநகரில்
பெரும் வாகன நெரிசல்!

அதிபர் மக்ரோன் இன்று
நாட்டுக்கு விசேட உரை!

?உலக பங்குச் சந்தைகள் சரிவு
எண்ணெய், எரிவாயு விலைகள்
என்றுமில்லாதவாறு எகிறின!!!

நேட்டோவின் பதில் நடவடிக்கை
நாளைய கூட்டத்துக்குப் பின்பே!

உக்ரைனின் முக்கிய இராணுவ இலக்கு
களை மட்டும் நவீன ஏவுகணைகளால் தாக்கி அழித்தபடி ரஷ்யப் படைகள் மிக
வேகமாக நாட்டின் தலைநகரம் அமைந்
துள்ள வடக்குப் பகுதி நோக்கி முன்னேறி வருகின்றன.

தாக்குதல் ஆரம்பித்து 24 மணிநேரத்துக்
குள் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலை
நகர் கீவ் அமைந்துள்ள பிராந்தியத்தின்
எல்லைப்பகுதியை அண்மித்துவிட்டன
என்று செய்தி வெளியாகியிருக்கிறது.

பெலாரஸ் நாட்டில் இருந்து நுழைந்த
ரஷ்யப் படை அணி ஒன்று கிராட் ஏவுக
ணைத் (Grad missiles) தாக்குதல்களை
நடத்தியவாறு முன்னேறி கீவ் பிராந்தியத்
தின் விளிம்பில் உள்ள ஹொஸ்டோமெல் விமானத் தளத்தை (Hostomel Airport) நெருங்கியுள்ளது. அந்தப்பகுதியில் கடும்சண்டை மூண்டுள்ளதாகவும் அடை
யாளம் தெரியாத ஹெலிக்கொப்ரர்கள்
சில வான்பரப்பில் தென்படுவதாகவும்
ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

ஹொஸ்டோமெல் விமான நிலையம்
(Hostomel Airport) உலகின் மிகப் பெரிய
வர்த்தக வான் தளம் ஆகும். அதேசமயம் உலகின் மிகப் பெரிய’மிரியா’ (Mriya)
எனப்படும் சரக்கு விமானத்தின் இறங்கு
தளமாகவும் உக்ரைன் இராணுவத்தின் பிரதான வான் தளமாகவும் விளங்குகின்
றது என்பது கவனிக்கத்தக்கது. அந்தத்
தளம் ரஷ்யப் படைகள் வசம் வீழ்ந்தால்
அது உக்ரைனுக்குப் பெரும் இராணுவப் பின்னடைவாகவும் கீவ் நகருக்கு அச்சுறு
த்தலாகவும் மாறும்.

இதேவேளை, இதுவரையான தாக்குதல்
களில் ஜம்பதுக்கு மேற்பட்ட சிவிலியன்
கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன்
அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யக் ஹெலிக்கொ
ப்ர்ர் ஒன்றின் வீடியோ காட்சி சமூகவலை
தளங்களில் வெளியாகியுள்ளது. ரஷ்யா
வின் ஆறு விமானங்களைச் சுட்டு வீழ்த்தி
யிருப்பதாக உக்ரைன் இராணுவம் தெரி
வித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை முதல்
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து பெரும் மக்கள் இடம்பெயர்வு ஆரம்பித்து
ள்ளது. வெளியேறிச் செல்வோரது வாகன அணிகளால் பிரதான தெருக்
களில் மிகப் பெரும் நெரிசல் நிலைமை
காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்
கின்றன.

எங்கே செல்வது என்ற முடிவு தெரியாம
லேயே பலரும் தலைநகரை விட்டுத் தற்
காலிகமாக வெளியேறிச்செல்கின்றனர்.
அவர்களில் பெரும் எண்ணிக்கையான
வர்கள் மேற்கே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நோக்கியே படையெடுத்து
வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

நகரில் உள்ள செய்தியாளர்களது தகவல்
களின் படி, வான் தாக்குதல்களை எதிர்
பார்த்து நகரவாசிகள் நிலத்தடி ரயில்
நிலையங்களில் பதுங்கியுள்ளனர் என்று
சொல்லப்படுகிறது. தொடர்ந்தும் நகரில்
சைரன் சத்தங்களைக் கேட்க முடிகிறது.
நகரின் மையப்பகுதிகள் ஆள் அரவம்
இன்றி வெறிச்சோடியுள்ளன.

ரஷ்யாவின் தாக்குதல்களை அடுத்து
உலகெங்கும் முக்கிய பொருளாதார சக்
திகளான நாடுகளில் பங்குச் சந்தைகள்
பெரும் சரிவைக் காட்டியுள்ளன. எரிவாயு,
மசகு எண்ணெய் விலைகள் என்றும் இல்
லாதவாறு உச்ச அளவை எட்டியுள்ளன.

ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகள்
விதித்த தடைகள் போதுமானவையாக
இல்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தி
யில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள்
வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடுகின்
றனர். கூட்டாக எடுக்க வேண்டிய அடுத்த
கட்ட நடவடிக்கைகளை அங்கு அவர்கள்
தீர்மானிப்பர் என்று தெரிவிக்கப்படுகி
றது.

பிரான்ஸின் தேசிய பாதுகாப்புச் சபை
இன்று காலை அவசரமாகக் கூடியது.
போர் நிலைவரம் தொடர்பாக அதிபர்
மக்ரோன் அமைச்சர்கள் மற்றும் அதிகா
ரிகளோடு கலந்தாலோசனைகளை நடத்
தினார். அதன்பிறகு நண்பகலில் அவர்
நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவரது உரையின் விவரங்கள் மற்றும் பிந்திய செய்திகள் அடுத்த பதிவில்.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்

]]>