திருகோணமலையில் அடை மழை.

1420657522Untitled-1திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பொய்து வருகின்ற அடைமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள், வயல் நிலங்கள், வீதிகள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இம் மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர், தோப்பூர், குச்சவெளி, திருகோணமலை மற்றும் வெருகல் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மந்தகதியில் செல்கின்றது.

இப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு, வீடுகளில் உள்ள தோட்டப் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியான மழை காரணமாக கந்தளாய் குளம், பரவிபாஞ்சான்குளம், கல்மெட்டியாவக்குளம் போன்றவற்றின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

Copyright © 4479 Mukadu · All rights reserved · designed by Speed IT net