தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் ஜெயலலிதா

jayalalitha3_CIதமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், இரு தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளன. 132 தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க வெற்றிப் பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி 99 இடங்களை கைப்பற்றி பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கிறது.

1984ம் ஆண்டுக்குப் பின்னர், ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் தேர்தலில் தொடர்ந்து வென்று ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறை.
தமிழக தேர்தல் முழு நிலவரம்
கட்சியின் பெயர் வென்ற மற்றும் முன்னணியில் உள்ள தொகுதிகள்
காங்கிரஸ் 8
அ.தி.மு.க 133
தி.மு.க 89
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1
பாட்டாளி மக்கள் கட்சி 1
மொத்தம் 232

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தனது தாரக மந்திரத்தை மக்கள் நம்பி வாக்களித்திருப்பதாகவும் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியாக உருவாக்கப்பட்ட விஜய்காந்த் தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி, மற்றும் நாம் தமிழர் கட்சி, பி.ஜே.பி போன்ற பிற கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இத்தேர்தலில், தனித்து களம் கண்ட பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. பா.ம.கவின் இளைஞரணி செயலாளரும், பென்னாகரம் தொகுதி பா.ம.க வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் தோல்வி முகத்தில் உள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் இத்தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார்கள்.

பி.ஜே.பி கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களான ஹெச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன் மற்றும் அக்கட்சியின் தமிழக மாநில செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் தோல்வியை தழுவியுள்ளார்கள்.
BBC

Copyright © 3678 Mukadu · All rights reserved · designed by Speed IT net