வடக்கின் இராணுவம் வெளியேற்றப்படாது.!

krishantha-de-silva-415x260வடக்கு அரசியல்வாதிகளின் அரசியல் நியாயங்களுக்காக வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது. அதேபோல் இராணுவமும் வெளியேற்றப்படாது என அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் தெரிவித்துள்ளன.

வடக்கு முதல்வரின் கருத்துகளுக்கு எம்மால் எந்த பதிலையும் தெரிவிக்க முடியாது. நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.

வடக்கில் தொடர்ந்தும் இராணவ ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இராணுவம் தடையாக இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான பதிலை தெரிவிக்கும் வகையில் இராணுவ தளபதியும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
வீரகேசரி

Copyright © 9531 Mukadu · All rights reserved · designed by Speed IT net