பிரெஞ்சு திரையில் மிளிரும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள்.

சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற எமது கலைஞர்களின் விருப்பு சாதாரணமானது அல்ல. அதற்காக அவர்கள் செலுத்தும் விலை, செய்யும் அர்ப்பணிப்புகள் எல்லாமே வியப்புக்குரியவை.

அந்த விடாமுயற்சிக்கு தகுந்த பலன் இப்போது கிடைக்க ஆரம்பித்துள்ளது.

கடந்தவாரம் தான் Le Sens De La Fete எனும் திரைப்படத்தின் ஊடாக புலம்பெயர் ஈழத்து நட்சத்திரங்கள் பலர் பிரென்சு திரைப்பட உலகில் கால்பதித்துள்ளனர்.

புகழ்பெற்ற மன்மதன் பாஸ்கி, அங்கிள் சிறி உட்பட கேசவன், கிரி சுரேஸ் மற்றும் பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஒக்ரோபர் 4ம் திகதி வெளிவந்துள்ளஇப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

பாஸ்கியின் விடா முயற்சி, அவரை இந்த உயரத்தில் தூக்கி வைத்துள்ளது.

இங்கே மறுபுறம், ‘வானம்பாடிகள்’ இசைப்போட்டி நடத்தி எண்ணற்ற கலைஞர்களை வெளிக்கொணர்ந்த தமிழ்ச்செல்வன் பிரெஞ்சு திரைத்துறையில் நுழைந்துவிட்டார்.

அவர் நடித்துள்ள Le grand bain எனும் பிரெஞ்சுத் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.


கடந்த சில மாதங்களாகவே செல்வன் காணாமல் போயிருந்த நிலையில் அவர் எங்கே என்று எல்லோரும் தேடிய நிலையில் ஒருமுறை தாடியுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் அவர் குறித்த பதட்டத்தையும் கேள்வியையும் எழுப்பியிருந்தது.

இம்முறை வானம்பாடிகள் போட்டி நடக்குமா? இல்லையா? என்கிற கேள்வியும் விடையின்றி நீண்டது.

இந்நிலையில் அதற்கான பதில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. 40 வயதுகளை உடைய எட்டுப் பேர், நீச்சல் தடாகத்தில் அடிக்கடி சந்தித்து நண்பர்களாகி, தங்கள் வாழ்க்கையை எப்படி புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள்? என்கிற ஒற்றை வரிக்கதை, முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

நன்றி சமூகதளம் மற்றும் ரஜீவன் ராமலிங்கம்

Copyright © 4162 Mukadu · All rights reserved · designed by Speed IT net