அதிகளவான பயிற்சிகளே வெற்றிக்கு காரணம் – கிளிநொச்சியில் இரண்டாம் நிலை பெற்ற மாணவன்

அதிகளவான பயிற்சிகளே வெற்றிக்கு காரணம் – கிளிநொச்சியில் இரண்டாம் நிலை பெற்ற மாணவன் கதிர்நிலவன்

தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சைக்காக நான் படிக்கின்ற போது அதிகளவு பயிற்சியினை செய்திருக்கின்றேன் அதுவே இந்த வெற்றிக்கு காரணம் என கிளிநொச்சியில் 195 புள்ளிகளை பெற்று இரண்டாம் நிலை பெற்ற மாணவன் கேதீஸ்வரன் கதிர்நிலவன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய மாணவனான கதிர்நிலவன் தான் பாடசாலையில் கல்விச் செயற்பாடுகளில் எப்பொழுதும் முதல் நிலையிலேயே இருந்து வந்துள்ளதாகவும், பரீட்சையை நோக்காக கொண்டு இயல்பாக வழமை போன்று கற்று வந்ததாகவும் குறிப்பிட்ட அவர் ஆசிரியர்களும், ஆசிரியையான எனது அம்மாவும் பாடசாலை அதிபரும் ஊக்கமளித்ததாகவும் தெரிவித்தார்.

Copyright © 7821 Mukadu · All rights reserved · designed by Speed IT net