மஹிந்தவை பிரதமராக்கியதன் பின்னணியில் செயற்பட்ட பிரபலம் யார்?

மஹிந்தவை பிரதமராக்கியதன் பின்னணியில் செயற்பட்ட பிரபலம் யார்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில், ஜனாதிபதியின் சகோதரன் செயற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவினால் வெளியிடப்பட்ட பேஸ்புக் பதிவினால் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேனவின் பிறந்த நாளுக்காக உதயங்க, வாழ்த்து பதிவொன்றை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், “பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பிப்பதற்கு ஜனாதிபதிடம் யோசனை முன்வைத்தமை தொடர்பில் அவரது சகோதரரான அரலிய தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் டட்லி சிறிசேனவுக்கு எங்கள் நன்றி மற்றும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவினை அடிப்படையாக வைத்து மஹிந்தவை திடீரென பிரதமராக்கியதன் பின்னணியில் ஜனாதிபதியின் சகோதராான டட்லி சிறிசேன செயற்பட்டதாக தெரிய வருகிறது.

எனினும் தன்னையும் கோத்தபாயவையும் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி காரணமாக பிரதமர் திடீரென மாற்றப்பட்டார் என ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

கடந்த மாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு, அந்தப் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சமகால ஜனாதிபதி நியமித்திருந்தார்.

சர்ச்சைக்குரிய முறையில் பிரதமர் நியமனம் வழங்கப்பட்டமையானது இன்று வரை பெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்தி, நாடு அமைதி இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net