கர்நாடகா பேருந்து விபத்து உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

கர்நாடகா பேருந்து விபத்து உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

கர்நாடகா, மாண்டியா மாவட்டத்திலேயே இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பயணிகளை ஏற்றவந்த குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிருந்த கால்வாயினுள் கவிழ்ந்தது. இதன்போது சிலர் நீந்திக் கரையைக் கடந்தபோதும் பேருந்துக்குள் அகப்பட்டிருந்த 25 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விரைந்து பயணிகளை மீட்டுவருகின்றனர். மீட்கப்பட்ட சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பாதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இவ்விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

இந்நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Copyright © 3994 Mukadu · All rights reserved · designed by Speed IT net