கிளாலி வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு

கிளாலி வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, கிளாலி கிராமத்திற்கான பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் 30 வருடங்களுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்பட்ட இந்த வீதியால் பெருந்திரளான மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவரின் வேண்டுகோளுக்கு அமைய, வீதி அபிவிருத்தி திணைக்களம் புனரமைப்பிற்காக 10.2 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர், உபதவிசாளர் கஜன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net