கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2018 மாவீரர் நாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.

நடந்துமுடிந்த போராட்டத்தில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 2018 மாவீரர் நாள் ஏற்பாடுகள் ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறே கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்த அனைத்து தரப்பினர்களும் இணைந்து மாவீரர் நாளுக்குரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு எவ்வித தடைகளும் நெருக்கடிகளும் இன்றி மாவீரர் நாள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபபூர்வமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் மாவீரர் பணிக்குழு செயலாளர் குமாரசிங்கம் அறிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net