கிளிநொச்சியில் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் பசுமைப் பூங்கா!

கிளிநொச்சி, டிப்போ சந்திப் பகுதியில் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் பசுமைப் பூங்கா!

கிளிநொச்சி, டிப்போ சந்திப் பகுதியில் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பசுமைப் பூங்கா புனித நாட்களை அடையாளப்படுத்தும் வகையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, டிப்போ சந்தியில் முன்னர் பாண்டியன் சுவையூற்று காணப்பட்ட நினைவிடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பசுமை பூங்கா சம்பிரதாய பூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

சுமார் நான்கு கோடி ரூபா செலவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையிடம் அண்மையில் கையளிக்கப்பட்ட பின்னர் பல்வேறு விதமான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உள்ளக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் வடக்கு மாகான சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net