வவுனியாவில் 9 மணி நேரம் நீர்விநியோகம் தடை

வவுனியாவில் 9 மணி நேரம் நீர்விநியோகம் தடை

வவுனியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் டி.விஜயபாலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் உயர்ந்த மட்டத்தில் நீர் விநியோகிக்கும் வகையில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திருத்த வேலைகள் நடைபெற்று வருகின்றது.

இதன்காரணமாக எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

அந்த வகையில், காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலான 9 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என டி.விஜயபாலன் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net