நெற்பயிர்ச்செய்கை நோய் தொடர்பாக விவசாய மக்களுக்கு தெளிவூட்டல்!

நெற்பயிர்ச்செய்கை நோய் தொடர்பாக விவசாய மக்களுக்கு தெளிவூட்டல்!

போல் ஆர்மிவோர்ம் எனும் நோயை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக கிண்ணியா விவசாய மக்களுக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது

கிண்ணியா, ஆயிலியடி விவசாயப் பிரிவில், வட்டமடுவில் இன்று நடைபெற்றது.

கிண்ணியா விவசாயிகளின் சோளம், நெல் பயிர்ச்செய்கையில் புதிய வகை நோய் பரவி வருகின்றது (FALLARMYWORM) “போல் ஆர்மிவோர்ம்” அதனை மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தும் முகமாக செயலமர்வு நடைபெற்றுள்ளது.

இச்செயலமர்வினை ஆயிலியடி விவசாய போதனாசிரியர் ஏ.எச்.எம்.அஸ்ரக் ஏற்பாடு செய்திருந்தார்.

இச்செயலமர்வினை நடாத்துவதற்கு பத்தலகொட விவசாய ஆராய்ச்சி திணைக்கள கிழக்கு மாகாண இணைபாளர் விஷேட பயிர்ச் செய்கை விஞ்ஞானி ரோஹன திலகசிறி, கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.குசைன் திருகோணமலை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஷ்வரன், பத்தலக் கொட ஆராய்ச்சி உதவியாளர் போன்றோர் கலந்து கொண்டு தெளிவுபடுத்தியுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து நம் நாட்டுக்கு பரவும் படைப்புழு கட்டுப்படுத்துவது சம்பந்தமான விளிப்புணர்வு செயற்திட்டம் கிண்ணியாவில் ஆயிலியடி விவசாய பிரிவில் நடாத்தப்பட்டது.

மத்திய அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற கண்டங்களிலிருந்து பரவி ஆசியாவில் இந்தியாவில் பரவி தற்போது இலங்கையில் மிக விரைவாக பரவி வருகின்றது.

இந் ஸநோய் சோளம், கரும்பு, நெல், மரக்கறிப் பயிர்கள் உட்பட 100 இற்கு அதிகமான தாவரங்களை சேதப்படுத்துகின்றது.

பயிர்களின் இலைகளில் துளைகளை ஏற்படுத்தி முதலில் உண்டு, பின்னர் அது கிளை பிரித்தது போன்ற நீண்ட துளை வரும் வரை உண்டு சேதப்படுத்துகின்றது.

இப்புழு ஒரு நாளில் 100 கிலோ மீற்றர் வரை பறக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் இந்தியாவிலிருந்து நம் நாட்டிற்கு காற்றின் மூலம் வருவந்திருக்கலாம் என விவசாய போதனாசிரியர்களினால் கூறப்படுகின்றது.

இப்புழு தீவிரமாக பரவ முன்னர் கட்டுப்படுத்த விவசாய திணைக்களத்தினால் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தி நோயை எவ்வாறு கட்டுபடுத்தி, எவ்வகையான பூச்சி நாசினியை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

செயலமர்வின் பின்னர் விவசாயிகளின் பண்ணைகளுக்கு சென்று சோளச் செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தொடர்பாக பார்வையிட்டார்கள்.

கிண்ணியா பிரதேசத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஆயிலியடி, நடுவுற்று, குறிஞ்சாக்கேணி, கிண்ணியா, ஆலங்கேணி போன்ற பிரதேசத்தில் இச்செயலமர்வு தொடர்ச்சியாக நடாத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 5360 Mukadu · All rights reserved · designed by Speed IT net