தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம்

தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம்

மனித உரிமை தினத்தை முன்னிட்டு கிளிநாச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொதுதொழிலாளர் சங்கத்தினரால் தொழில் புரியும் இடங்களில் ஆண் பெண் தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இடம்பெற்றது.

தொழில் புரியும் இடங்களில் ஊழியர்கள் மீதான வன்முறையை நிறுத்து எனும் தொணி பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உரிமைகள், பெண்கள் மீதான வன்முறை, வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துதல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி குறித்த போராட்டம் இடம்பெற்றது.

Copyright © 3206 Mukadu · All rights reserved · designed by Speed IT net