துரிதகதியில் மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகள்

துரிதகதியில் மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகள்

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் முதற்கட்டமாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நிர்வாகக் கட்டிடம், மீன்பிடி வலைகள் பின்னும் நிலையம், நீர்த்தாங்கிகள், கழிவறைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. .

இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் 245 மில்லியன் ரூபாவில், அலைதடுப்பு கட்டுமானத்தின் முழுமையான புனரமைப்பு, ஏலமிடும் நிலையம், நுழைவாயிலை மேலும் ஆழப்படுத்தல் முதலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன

Copyright © 7544 Mukadu · All rights reserved · designed by Speed IT net