இளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி!

இளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி!

உத்தரபிரதேசத்தில் ராட்டினத்தில் இருந்துகொண்டு செல்ஃபி எடுத்தவேளை தவறி வீழ்ந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தை சேர்ந்த ராணி (வயது 20) என்பவர், சர்தார் என்னும் இடத்தில் ராட்டினத்தில் சவாரி செய்தார்.

ராட்டினம் மேல் நோக்கி சுற்றிக்கொண்டிருந்த போது அவர் இருக்கையில் இருந்தபடி கைத்தொலைபேசியில் ‘செல்ஃபி’ படம் எடுக்க முயன்றார்.

இதில் அவர் நிலைநடுமாறி ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்தார்.

பலத்த காயம் அடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செல்ஃபி மோகம் இன்று பலரின் உயிரை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது.

என்றாலும் உயிராபத்துக்களை ஏற்படுத்தும் விடயங்களை செல்ஃபி பிரியர்கள் கவனிக்காத நிலையில் அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது கவலைக்குரியதே

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net