மஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு!

மஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு!

இன்றைய ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ஷ வேண்டாம் என்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் எவ்வித உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற வாக்கெடுப்பு சம்பந்தமாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, இராணுவ கட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அந்தப் பிரச்சினைகள் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆகவே தமக்கு வேண்டாத ஒருவர் அதிகாரத்திற்கு வராமல் இருப்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் வாக் களித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கூறியுள்ளார்.

Copyright © 2084 Mukadu · All rights reserved · designed by Speed IT net