சோனேகோவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்த பெடரர்.

சோனேகோவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்த பெடரர்.

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ரோஜர் பெடரர் சோனேகோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரான நேற்று பாரீஸில் ஆரம்பமானது.

‘களிமண் தரை’ போட்டியான இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 3 ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இத்த்தாலியை சேர்ந்த லோரென்ஜா சோனிகோவை சந்தித்தார்.

இந்த ஆட்டத்தில் பெடரர் 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சோனிகோவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதேவ‍ேளை நேற்று இடம்பெற்ற மற்றுமோர் ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, பிரான்ஸ் வீரர் குயின்டின் ஹாலிஸை 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2 ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

அத்துடன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 2-6 என்ற செட் கணக்கில், ரஷ்ய வீராங்கனை அனஸ்தாஸியா போடபோவாவிடம் தோல்வியடைந்தார்.

மேலும் ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஸா, 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில், அமெரிக்க வீராங்கனை டெய்லர் டவுன்சென்டை வீழத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 3549 Mukadu · All rights reserved · designed by Speed IT net