கிளிநொச்சியில் ஒருவர் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்று கவனயீர்ப்பு!

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மாற்றுத்திறனாளியாகிய தனக்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை எனத்தெரிவித்து இன்று (29-05-2019) கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான தனக்கு இதுவரை வீட்டுத்திட்டத்தினை வழங்காது தமது பிரதேசத்தில் வசதி படைத்தவர்களுக்கும் வெளிமாவட்டங்களில் வாழ்பவர்களும் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Copyright © 7645 Mukadu · All rights reserved · designed by Speed IT net