கிளிநொச்சியில் வாள்வெட்டு : கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் காயம்.

கிளிநொச்சியில் வாள்வெட்டு : கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் காயம்.

கிளிநொச்சியில் செல்வாநகரில் இடம்பெற்ற வாள் வெட்டில் கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் காயம்.

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று(29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் வாள் வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் தனியார் மற்றும் மூன்று நோயாளர் காவு வண்டிகளில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இரத்தத்தால் நனைந்து காணப்படுகிறது.

பட்டா ரக வாகனம் மற்றும் உந்துருளியில் சென்ற 15 க்கு மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீடு புகுந்து வாள் வெட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஒரு உந்துருளி எரிக்கப்பட்டுள்ளதோடு, மற்றொரு உந்துருளி அடித்து சேதமாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

ஒரு தற்காலிக வீடு எரிக்கப்பட்டுள்ளது. மூன்று வீடுகள் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலதி விசாரணைகள் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

வெட்டுக்குள்ளான குடும்பங்களில் ஒரு குடும்பம் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் நேற்று(செவ்வாய் ) தங்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் ஆனால் பொலீஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © 9760 Mukadu · All rights reserved · designed by Speed IT net