இந்திய விமானம் 13 பேருடன் மாயம்!

இந்திய விமானம் 13 பேருடன் மாயம்!

விமான ஊழியர்கள் எட்டு பேர் மற்றும் ஐந்து பயணிகளுடன் இந்திய விமானப் படையை சேர்ந்த போக்குவரத்து விமானம் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று (திங்கட்கிழமை) மதியம் 12.25 மணியளவில் அசாம் மாநிலம், ஜோர்கத் தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற என்டோனோவ் என்- 32 ரக விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த விமானம் பகல் 1 மணியளவில் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுள்ளதாகவும் அதிலிருந்து விமானம் தொடர்பாக எந்ததொரு தகவலும் கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விமான படையினர் மாயமான விமானத்தை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 3514 Mukadu · All rights reserved · designed by Speed IT net