நெடுங்கேணியில் இராணுவ ஜீப் மோதி ஒருவர் பலி!

நெடுங்கேணியில் இராணுவ ஜீப் மோதி ஒருவர் பலி!

வவுனியா, நெடுங்கேணியில் இராணுவ பிக்கப் வாகனம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரை மோதியதில் குறித்த நபர் பலியாகியுள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது.

முல்லைத்தீவு பகுதியிலிருந்து புளியங்குளம் நோக்கி பயணித்த இராணுவ ஜீப் வாகனம் நெடுங்கேணி மகாவித்தியாலயம் அருகாமையில் உள்ள மஞ்சள் கோட்டு கடவைக்கு அருகில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நெடுங்கேணி சேனைப்புலவைச் சேர்ந்த எஸ்.பேரம்பலம் (வயது 65) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 9487 Mukadu · All rights reserved · designed by Speed IT net