வவுனியாவில் தேரருக்கு ஆதரவாக உணவு தவிர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவாக உணவு தவிர்ப்பு போராட்டம்!

வவுனியா – கண்டி வீதியிலுள்ள, புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனி நபர் ஒருவர் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

கண்டி, தளதா மாளிகைக்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வரும் அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவாக மேற்படி போராட்டத்தை குறித்த நபர் ஆரம்பித்துள்ளார்.

வெளிக்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய தேவராஸா கோபாலகிருஷ்னண் என்ற அந்த நபர் இன்று காலை 9 மணி முதல் கண்டி பிரதான வீதியிலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலயத்திற்குள் அவருக்கு ஆதரவாக 49 வயதான த.சண்முகம் என்ற உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபரும் இதில் இணைந்துள்ளார்.

Copyright © 2472 Mukadu · All rights reserved · designed by Speed IT net