ஆட்சியமைக்கும் கனவு என்றும் நனவாகாது!

ஆட்சியமைக்கும் கனவு என்றும் நனவாகாது!

தமிழகத்தில் சிலர் ஆட்சியைக் கைப்பற்றி விடலாமெனக் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களது கனவு என்றுமே பலிக்காதென துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அ.தி.மு.க அரசும் கட்சியும் என்றுமே சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே இருக்குமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை தேர்தலில் மக்களின் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளதாக பெருமையிலுள்ளவர்கள், அது இடையிலேயே கைவிட்டு போய்விடுமோ என்ற எண்ணத்தில் கவலையில் உள்ளனர் எனவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 6429 Mukadu · All rights reserved · designed by Speed IT net