முல்லைத்தீவில் 16 மீனவர்கள் கைது!

முல்லைத்தீவு, அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 16 மீனவர்களைக் கடற்படையினர் நேற்று (05) கைதுசெய்துள்ளனர்.

வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த மீனவர்களைக் கைதுசெய்துள்ளனர்.

அத்தோடு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 384 கிலோகிராம் மீன், 03 டிங்கி படகுகள், 03 இஞ்சின்கள், சட்டவிரோத மீன்பிடி வலைகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்,

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net