முல்லைத்தீவு, சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்.

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்.

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 1998ஆம் ஆண்டு இதே போன்றதொரு நாளில் இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையிலேயே 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஈகைச் சுடரினை படுகொலை தாக்குதலின் போது தமது குடும்பத்தில் 4 பேரை இழந்த தயார் மற்றும் தந்தை இணைந்து ஏற்றி வைத்துள்ளனர்.

இதில் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆண்டியையா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் பிரேமகாந், ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Copyright © 4449 Mukadu · All rights reserved · designed by Speed IT net