புனர்வாழ்வளிக்கப்பட்ட 39 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்.

திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 39 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் தேசிய புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான வைபவம் இன்று (11) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலாளர் என்.புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் புனர்வாழ்வுப் பணியகப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரட்ன நாயக்க கலந்து கொண்டு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்.

Copyright © 9023 Mukadu · All rights reserved · designed by Speed IT net