அநுராதபுரத்தில் பாதுகாப்புக் கடமையில் 8000 பாதுகாப்பு படையினர்!

பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் 8000 பாது­காப்பு படை­யினர் பாது­காப்புக் கட­மையில் அமர்த்­தப்­ப­ட­வுள்­ள­தாக அநு­ரா­த­புரம் வலய பொலிஸ்­அத்­தி­யட்­சகர் திலி­ன­ஹே­வா­ பத்­தி­ரன தெரி­வித்தார்.

பொசன்­ உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அவ­ரிடம் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­புரம் நான்கு வல­யங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வ­ல­யங்­களின் பாது­காப்­புக்­காக 4000 பொலி­ஸாரும் 2000 இரா­ணுவ வீரர்­களும் 1000 சிவில் பாது­காப்பு படை­யி­னரும் புல­னாய்­வு­ பி­ரிவு அதி­கா­ரிகள், கடற்­ப­டை­யினர் என மொத்தம் 8ஆயிரம் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் பாது­காப்­புக்­க­ட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

அநு­ரா­த­புரம் புனித பூமி மற்றும் குட்டம் பொகுண ஆகி­ய­ ப­குதி ஒரு வல­ய­மா­கவும் மிஹிந்­தலை உள்­ளிட்ட புனித பூமி ஒரு வல­ய­மா­கவும் அவ்­கன விஜி­த­புர பகுதி ஒரு வல­ய­மா­கவும் தந்­தி­ரி­மலை ரஜ­மஹா விகாரை உள்­ளிட்ட புனித பூமி ஒரு வல­ய­மா­கவும் பிரிக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் விசேட வீதிச்­சோ­தனை சாவ­டி­களும் அமைக்கப்­பட்­டுள்­ளன. பொசன் ­உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்­துக்கு வரும் பக்­தர்கள் வழி­பாட்­டுக்கு தேவை­யான பொருட்­களை மாத்­திரம் எடுத்­து­வ­ர­வேண்டும்.

முக்­கி­ய­மாக குளங்கள் உள்­ளிட்ட பொது­மக்கள் குளிக்கும் இடங்­க­ளுக்கு பொலிஸ் உயிர் பாது­காப்­பு­பி­ரிவு உத்­தி­யோ­கத்­தர்­களும் கடற்­ப­டை­யி­னரும் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

இந்­நி­லையில் குளிப்­ப­தற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள இடத்தில் மாத்­தி­ரமே பொது­மக்கள் குளிக்க வேண்டும். பொசன் வல­யங்­களில் தாபிக்­கப்­பட்­டுள்ள வாகனத்தரிப்பிடங்களில் மாத்திரமே வாகனங்களை நிறுத்த முடியும்.

ஏனைய இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசல்களை ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net