கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு நவீன கற்றல் முறை வகுப்பறை வசதி

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு நவீன கற்றல் முறை வகுப்பறை வசதி இன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் கற்றல் வசதியை மேம்படுத்தும் நோக்குடன் குறித்த நவீன கற்றல் வகுப்பறை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பாடசாலை முதல்வர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் கல்விதிறனை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் 26 லட்சம் பெறுமதியான 40 ரப்கள் மற்றம், சிமாட் போட் ஆகியன இன்று கையளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் சர்வதேச கல்வி முறைமைக்கமைய மாற்றும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி முறை மாற்றத்திற்கமைய குறித்த நவீன கணித வகுப்பறை இன்று கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.ஜோன் குயின்ஸ்ரன் அவர்களால் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

Copyright © 0628 Mukadu · All rights reserved · designed by Speed IT net