இரவு வேளை மூதாட்டியை தாக்கிய கமக்கார அமைப்பு

கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கமக்கார அமைப்பைச் சேர்ந்தவர்காளால் இரவு வேளை வீடு புகுந்து வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கியதால் பாதிக்கப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் சிறுபோகச்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு உரிய முறையில் கமக்கார அமைப்பினால் நீர்விநியோகம் மேற்கொள்ளப்படாமை குறித்து ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இரவு வேளை வீடொன்றுக்குச்சென்ற கமக்கார அமைப்பைச் சேர்ந்த சிலர் வீட்டிலிருந்து மூதாட்டியை தாக்கியுள்ளனர்.

இவ்வாறு தாக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள முரசுமோட்டைக் கமக்கார அமைப்பின் கீழ் 1700 ஏக்கர் சிறுபோகச் செய்கைக்காக வரையறுக்கப்பட்டபோது அமைப்பினுடைய முழுமையான ஒத்துழைப்புடன் நீர் வரிக்குட்படாத வயல் காணிகள் பயிர்ச்செய்கைகக்கு உட்படுத்தப்பட்டு இவற்றுக்கு சட்டவிரோதமாக நீர்விநியோகிக்கப்படுவதால் உரிய முறையில் கூடுதலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயியின் வீட்டிற்குச்சென்ற கமக்கார அமைப்பைச் சேர்ந்தவர்களே தகாத வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டு குறித்த மூதாட்டியைத்தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது கந்தசாமி மல்லிகாதேவி (வயது 65) என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net