உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி

vijayagath-dmdk002தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி – த.மா.கா. இணைந்து 2016 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இதில் தேமுதிக 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார். தே.மு.தி.க.வுக்கு அமைப்பு ரீதியாக அதிக பலம் உள்ளது என்பதால் இத்தொகுதியை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே விஜயகாந்த் தேர்வு செய்துவிட்டார்.

திமுக சார்பில் இத்தொகுதியில் திருநாவலூர் ஒன்றிய செயலாளரான ஜி.ஆர்.வசந்தவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. குமரகுரு மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் விருத்தாசலம் தொகுதியிலும், 2011ம் ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் விஜயகாந்த்.

Copyright © 9644 Mukadu · All rights reserved · designed by Speed IT net