பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு மாதத்தில் மட்டும் 23 பேர் கைது !

polis
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஒரு மாத காலத்தில் மாத்திரம் 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானோர் வடக்கு, கிழக்கைச்சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமைதொடர்பிலும், ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் குறித்த 23 பேரும்கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் 3 பேரைத் தவிர மிகுதி அனைவரும் பூஸா தடுப்பு முகாமில்தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் .

சாவகச்சேரி மறவன்புலோவில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டசம்பவத்தில், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையைப்பொலிஸார் உத்தி யோகபூர்வமாக வெளிப்படுத்தாத நிலையிலும், அந்தச் சம்பவத்துடன்தொடர்புடைய குற்றச்சாட்டில் மட்டும் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மனிதஉரிமைகள் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

சாவகச்சேரி வழக்கில் கைதுசெய்யப்பட்ட 11 பேரில் பெண் ஒருவரும்உள்ளடங்குகின்றார். அவர் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய 10 பேரில் 2 பேர் கொழும்பு 4ம் மாடியிலுள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவினரிடமும், ஏனையவர்கள் பூஸா தடுப்பு முகாமிலும்தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட, ஏனைய குற்றச்சாட்டுகளில் கைதானோரில் வடக்கிலிருந்து பலரும்பெரும்பான்மையினத்தவர்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர்.

எனினும், குறித்த 23பேரும் என்னென்ன குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதுவெளிப்படுத்தப்படவில்லை.

வடக்கு, கிழக்கில் மஹிந்த ஆட்சிக் காலத்தில் வகை தொகையின்றிக் கைதுகள்தொடர்ந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசுஆட்சிக்கு வந்த பின்னர் அவை குறைவடைந்திருந்தன.

எனினும், தற்போதுநல்லாட்சியிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் திடீர்க் கைதுகள்அதிகரித்துள்ளமை தமிழ் மக்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net