மன்னார் விபத்தில் பாதிரியார் பலி:8 பேர் காயம்

article_1460957778-Man01
மன்னார் – தள்ளாடி பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தொன்றில், இலங்கை பெந்தகோஸ்து சபையின் பாதிரியார்; ஒருவர் பலியானதோடு மேலும் 8பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
article_1460957808-Man02
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கை பெந்தகோஸ்து சபைக்குச் சொந்தமான ஹயஸ் ரக வாகனம், மன்னார் – தள்ளாடி பிரதான வீதியில் உள்ள விமானப் படைத்தள பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியே, மேற்படி பாதிரியார் உயிரிழந்துள்ளார்.காயமடைந்தவர்களில், அருட்சகோதரர் ஒருவரும் அருட்சகோதரிகள் அறுவரும் உள்ளடங்குகின்றனர்.
தமிழ் மிரோர் செய்தி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net