யாழ். நகரின் மத்தியின் மூன்று பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த இளைஞர் குழு சொத்துக்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது. இளைஞர் குழுவின் இந்தத் தாக்குதலுக்கு 3 வீடுகளும் ஹோட்டல் ஒன்றும் இலக்காகியிருக்கின்றன. அத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தென்னிலங்கையிலிருந்து வந்த சொகுசு பஸ் ஒன்றும் சேதமடைந்துள்ளன. மேலும் வீடுகளின் யன்னல் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டன. மாம்பழம் சந்தி, சோமசுந்தரம் வீதி, கந்தர்மடம் பகுதிகளிலேயே இந்தத் தாக்குதல்கள் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளன. ஒரு மணி நேரத்துக்குள் இந்தத் தாக்குதல்களை நடத்திய குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் குறித்துப் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.