புலிகளின் முன்னாள் தளபதி ராம் கடத்தப்பட்டாரா.

ரா;
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் திருக்கோவில் தம்பிலுவில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை இனம் தெரியாதவர்களினால் வேன் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் அம்பாறைமாவட்ட தளபதியாக இருந்து 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் 2013 ஆம் ஆண்டு விடுதலையானார். அதன் பின்னர், திருமணம் முடித்து திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதுடன் விவசாயம் செய்து கொண்டுவருகின்றார்.

இந் நிலையில் மனைவி மட்டக்களப்பிற்கு சென்ற நிலையில் தனிமையில் இருந்தபோது, இன்று காலை 8.30 மணியளவில் அவரது வீட்டிற்கு நீல நிற வேன் ஒன்றில் வந்தவர்களால் அவரை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி சுதாராணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வீரகேசரி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net