புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர் வங்கியில் அடகு வைத்த நகை தொடர்பில் விசாரனை.

Tamil-Daily-News-Paper_71108210087புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சந்தேக நபர் ஒருவர் வங்கியில் அடகு வைத்த நகை குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நகையா ? என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஊர்காவற் துறை நீதவான் உத்தரவு இட்டுள்ளார்.

மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக நீதவான் எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது சந்தேக நபர் ஒருவரின் உறவினர் சந்தேகநபரினால் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகையினை மீட்பதற்கு சந்தேகநபரினுடைய கையொப்பம் தேவை எனவும், அதனை சந்தேக நபரிடம் பெற்று தருமாறு நீதவானிடம் கோரி இருந்தார்.

அதற்கு பதிலளித்த நீதவான் குறித்த நகை இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட நகையா என்பது தொடர்பில் தெரியவில்லை எனவே அது தொடர்பில் விசாரணை நடாத்தி அந்த நகை இந்த வழக்குடன் தொடர்பு இல்லை என தெரியவந்தால் அதனை மீள எடுப்பதற்கு சந்தேக நபரிடம் கையொப்பம் பெற்று தர முடியும் என தெரிவித்தார்.
குளோபல் தமிழ்ச் செய்தி

Copyright © 5649 Mukadu · All rights reserved · designed by Speed IT net