மே தினத்தின் பின்னர் புதிய அரசியல் செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி

Maithri Bala s_CIமே தினத்தின் பின்னர் புதிய அரசியல் செயற் திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை ஏற்படக் கூடிய பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் மீளவும் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்து வருவதாக கூறிய அவர், அதனை தடுக்க இந்தத் தீர்மானங்கள் அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மெதிரிகிரிய பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமான நாடு மற்றும் தூய்மையான அரசியலை நிலைநாட்டும் நோக்கில் வாக்களித்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை சிதைவடையச் செய்ய தாம் தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net