சட்டவிரோதமான கொண்டுவரப்பட்ட மூன்று மாடுகளை தர்மபுரம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

விஸ்வமடு பகுதியில் இருந்து இறைச்சிக்காக சட்டவிரோதமான கொண்டுவரப்பட்ட மூன்று மாடுகளை தர்மபுரம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
13092107_1269068913121548_2076790457269105505_n
இன்று காலை மீட்கப்பட்ட குறித்த மாடுகள் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதன் போது மாடுகளை கொண்டு சென்றவர்களுடனான மனிதாபிமான பேச்சுவார்த்தைகளை அடுத்து குறித்த மூன்று மாடுகளையும் வறுமையில் வாழும் மக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து தர்மபுரம் பொலிஸார், தர்மபுரம் பகுதியில் உள்ள வறுமையான மூன்று குடும்பங்களுக்கு மூன்று மாடுகளையும் வழங்கியுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net