யாழில், பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில 27 இளைஞர்கள் கைது!

Arrest_CI
யாழில் 27 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

யாழ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில் சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்த காரணத்தினால், வீதிகளில் அநாவசியமாக நிற்பவர்கள், திருட்டு மற்றும் பெண்களுடனான சேட்டைகளில் ஈடுபடுபவர்கள் என பலர் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள்.

யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அக்குழுவினர் பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவ்வாறு சோதனை மேற்கொள்ளும் போது, சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டால், கைதுசெய்வதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவ்வாறு கடந்த ஒரு வாரங்களில் சுமார் 50ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றினால் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட 27 இளைஞர்களையும் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net