சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.

-sampanthan-unp-slfp-jvp-
எதிர்க் கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் எந்தவித முன்னறிவித்தலும் இல்லை. சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்தாலும் ஆதரிப்பது தொடர்பில் கட்சிக்குள் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் தெரிவித்தன.

பாராளுமன்றத்தில் தனிக் கட்சியாக அங்கீகாரம் பெறாத நபர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் கட்சிகள் தெரிவித்தன.

எதிர்க் கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக பொது எதிரணியினர் தெரிவித்துள்ள நிலையில் பிரேரணையை ஏனைய கட்சிகள் ஆதரிக்குமா என வினவியபோதே பிரதான கட்சிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டன.

Copyright © 0237 Mukadu · All rights reserved · designed by Speed IT net